அதற்கு அடுத்து வந்த திங்களன்று, சாயங்காலம் வைசாலியின் குடிசையைத் தேடி போனான் மாறன். அவன் போன நேரம், வைசாலியின் பாட்டி காட்டுக்குள் விறகு பொறுக்க போய்விட்டாள். வைசாலி மட்டும் குடிசையில் இருந்தாள்.
“பாட்டி, பாட்டி”, என்று மாறன் கூப்பிட்டதும், வெளியே வந்த வைசாலிக்கு, வாலிபனான மாறனைப் பார்த்ததும் வெட்கம் வந்தது. தலையைக்குனிந்தபடி ஓரக்கண்ணால் அவனை பார்த்தாள். கட்டுடலுடன் அரும்பு மீசை வைத்து சுருள் சுருளான தலைமுடியுடன் நிமிர்ந்து நின்ற அவனிடம் “பாட்டி விறகு பொறுக்கப் போயிருக்கு”, என்றாள் மெல்லிய குரலில். “பரவால்ல, இந்தா சாமி பிரசாதம், பூசாரி ஒனக்கு குடுக்க சொன்னாரு”, என்று கறுப்புப் பொடி கலந்த பிரசாதத்தை அவளிடம் கொடுத்தான். பயபக்தியுடன் வாங்கி சாப்பிட்டுவிட்டாள் வைசாலி. “நான் வர்றேன்”, ன்னு சொல்லி விட்டு மாறன் போய்விட்டான். பாட்டி திரும்பி வந்ததும் இருவரும் இரவு உணவு சாப்பிட்டு படுத்தார்கள். இரவு நேரம் ஏற ஏற, வசியப் பொடி நன்றாக வேலை செய்தது. வைசாலிக்கு மாறன் மேல் அடக்க முடியாத ஆசை வந்தது. அவன் உருவமே அவள் மனக்கண்ணில் இருந்தது. மீண்டும் அவனை எப்போது சந்திப்போம் என்று ஆவலாக இருந்தது. அடுத்த நாள் மாலை, வழக்கத்துக்கு மாறாக, பாட்டியிடம் கோயிலுக்கு போயிட்டு வர்றேன் என்று சொல்லிவிட்டு, நேராக காத்தவராயன் கோயிலுக்கு வந்தாள். இவளை எதிர்பார்த்து மாறனும் காத்திருந்தான். இருவரும் சந்தித்ததும், அவனையே விழுங்குவதுபோல் பார்த்தாள். அவளுக்கு மீண்டும் கறுப்புப் பொடி கலந்த பிரசாதத்தை கொடுத்தான் மாறன். வாங்கி சாப்பிட்டுவிட்டு அவனை நெருங்கினாள். “ம்ஹும்”, என்ற கனைப்புக்குரல் கேட்டு திடுக்கிட்டுத் திரும்பியவள், பூசாரி கடம்பனை பார்த்ததும் அவன் காலில் விழுந்து வணங்கினாள். அவளை ஆசீர்வதித்த கடம்பன், “டே மாறா, நாளைக்கு சாயங்காலமா அருவிகிட்ட இருக்கற மூலிகையை பறிச்சுகிட்டு வாடா”, என்றான். வைசாலி தலைகுனிந்தவாறு குடிசைக்கு திரும்பினாள். அடுத்த நாள் மாலை எப்போது வரும் என்று இருவரும் காத்திருந்தார்கள். அடுத்த நாள், மாலை, “குளிச்சுட்டு வர்றேன் பாட்டி”, ன்னு சொல்லிவிட்டு ஓட்டமும் நடையுமாக அருவியை அடைந்தாள். அருவிக்கரையில் அங்குமிங்கும் அவனைத் தேடி, காணாமல் ஏமாற்றமடைந்த அவள், மரத்தின் மீதிருந்து திடீரென குதித்த மாறனை பார்த்ததும் முதலில் பயந்தாலும், மாறன்தான் என்று தெரிந்தவுடன் ஆசையுடன் அவனை பார்த்தாள். அவன் கையை நீட்டியவுடன் அவன் கையோடு தன் கையை கோர்த்துக்கொண்டாள். இருவரும் மரத்தடியில் உட்கார்ந்தார்கள். அவள், அவன் மடிமீது தலைசாய்த்து படுத்துக்கொண்டாள்.
“வைசாலி ”
“ம்..”
“ஒன்ன மொதமொதலா கோயில்ல பாத்தவுடனே எனக்கு ரொம்ப புடிச்சுபோச்சு”
“ம்ம்..”
“அப்போ இருந்து ஒன்னயே நெனச்சுகிட்டு இருக்கேன்”
“ம்ம்..”
“ஆனா நீ என்ன திரும்பிக்கூட பாக்கல, என்னை புடிக்கலயா”,
மாறன் கேட்டதும், அவன் கழுத்தை வளைத்து கீழே இழுத்து, அவன் கன்னத்தில் முத்தமிட்டு, “ரொம்ப புடிச்சிருக்கு”என்றாள். அவன் அவள் இதழ்களில் முத்தமிட குனிந்தபோது அவனை தள்ளிவிட்டு எழுந்து ஓடினாள். அவன் துரத்திச்சென்று அவளைப் பிடித்து, இறுகத் தழுவி அவள் இதழில் முத்தமிட்டான். மீண்டும் மரத்தடிக்கு அணைத்தபடி கூட்டிச் சென்று, தான் கொண்டு வந்திருந்த குடுவையில் இருந்த கறுப்புப்பொடி கலந்த தேனை அவள் வாயில் பருக வைத்தான். அவளும் காதலன் கொடுத்த தேனை ஆசையுடன் பருகினாள். அதற்குள் இருட்டும் நேரம் ஆனதால் இருவரும் மீண்டும் இதழ் முத்தமிட்டு அவனிடம் பிரியாவிடை பெற்று குடிசைக்கு திரும்பினாள் வைசாலி.
அடுத்த மூன்று நாளும் சந்தித்தபோதெல்லாம் வசியப்பொடி கலந்த தேனை அவளுக்கு கொடுத்து வந்தான். அவள் அவன் மேல் விழுந்து புரண்டாலும், முத்தமிட்டாலும் அவளுடன் கவனமாகவே பழகினான்.இனி அவனுடன் கலக்காமல் தூக்கமில்லையென்று ஆனது அவளுக்கு. நாளை ஞாயிறு. பூசாரி சொன்னதுபோல் உடலுறவு கொள்ள வேண்டிய நாள்….
