கொடுத்துவச்சவன் – Part 8 110

“அக்கா… நான் வர்ஷினி….”

“தெரியுது சொல்லுடி….”

“சேதி கேள்விப்பட்டீங்களா?… நான் வெகுநேரமா ட்ரை பண்ணிட்டேதான் இருக்கேன்…

இப்பத்தான் லைன் கெடைச்சுது…..பாட்டி… தவறிட்டாங்கக்கா….” மெல்லமாய் விசும்பினாள்…

“தெரியும்டி… அப்பா போன் பண்ணியிருந்தார்…. நாங்க இப்போ அங்கேதான் வந்துட்டு இருக்கோம்….பாட்டியை எடுத்துட்டாங்களா?….”

“பதினொரு மணிக்குத்தான் எடுத்தாங்க…. இங்கே அம்மா ரொம்ப பிரச்சனை பண்ணிட்டா….. அவருக்கு சொல்லிட்டேளா?…அவர் வருவாரா?.. நான் தவிச்சுட்டு இருக்கேன்….”

“டீ… அலட்டிக்காதடி… அம்மா, நானு.. ரவிஅண்ணன்.. எல்லோரும்தான் வந்துட்டு இருக்கோம்… எல்லாத்தையும் நேரிலே பேசிக்கலாம்…..”

“ஓ….. சரி சரி…நேரா ஆத்துக்கே வந்துடுங்கோ…. நான் காத்துண்டுருக்கேன்…. வச்சுடட்டா….”

“சரிடி…”…பத்மினி செல்லை அணைத்தாள்….என் அணைப்பில் இருந்தபடியே….

“யாருக்குடி சொல்லச் சொல்றா?….” ஆன்ட்டி புரியாமல் கேட்டாள்…

“அவ யாருக்கு சொல்லச்சொன்னாளோ… அவருக்கு எங்க அப்பாவே சொல்லிட்டார்…. “

“அப்போ அந்த “அவரும்” வருகிறாரா?….. அவர் யாருடி?….இவ்வளவு நாளா எனக்குத் தெரியாத வர்ஷுவோட சொந்தக்காரர்?…..” ஆன்ட்டி வியப்பாய் கேட்டாள்….

“அதெல்லாம் சஸ்பென்ஸ்…..” பத்மினி குறும்பாய் சிரித்தாள்….

“ஏய் சொல்லுடி….” ஆன்ட்டி கெஞ்சினாள்…..

“சும்மா இரும்மா!… அதுதான் நான் சஸ்பென்ஸ்னு சொல்றேன்ல்லே…. அந்த சஸ்பென்ஸ் இப்போ உடைஞ்சா நல்லாஇருக்காது…. அது உடையுற நேரத்திலே உடைஞ்சாத்தான் நல்லா இருக்கும்…. நீங்க சொல்லுங்கண்ணா….உங்க ஆசைப்பொண்டாட்டிக்கு..” பத்மினி என்னை சப்போர்ட்டுக்கு இழுத்தாள்…