நேருக்கு நேர் – Part 1 137

இவன் பேசியதில் பலவற்றை, அவளாக வேண்டுமென்றே உருவாக்கிக் கொண்டதுதான்!

ஆண்களை அதிகம் மதிக்காதது, அவர்களை பெரிதாக நம்பாதது என்ற அவளுடைய குணம், அவள் புருஷனான சிவாவையும் கூட, ஓரளவிற்க்கு மேல் நம்பவோ, நெருங்கவோ விட்டதில்லை!

கல்லூரி, அலுவலகம், குடியிருக்கும் வளாகம் என எங்கும் அவள் அப்படித்தான். யாராவது வாலாட்டினாலோ, கேலி செய்தாலோக் கூட, திருப்பி எதிர்த்துப் பேச தயங்க மாட்டாள்!

மிக முக்கியமாக, கல்யாணம் ஆகி விட்டால் பெண், ஆணுக்கு அடிமை இல்லை, உங்களுக்குன்னு ஒரு ஸ்பேஸ் இருக்கிற மாதிரி, எனக்குன்னு ஒரு ஸ்பேஸ் இருக்கு, என் உடல், என் உரிமை, நீங்க நினைக்கிறப்பவெல்லாம் படுக்க முடியாது என எல்லாப் புரட்சியையும் பேச வைத்து, கட்டிய புருஷனிடம் கூட அதிகம் மனதால் நெருங்காதவள் அவள்!

ஆனால், இதுவரை, தன் குணத்தைப் பற்றி கர்வமே கொண்டிருந்தவள், இன்று, இவன் அதை பேசிய விதத்தைக் கேட்ட பின், அவள் கொஞ்சம் நிறையவே ஆடிப் போயிருந்தாள்!

தான் மற்றவர்களை மதிப்பதில்லையா, இல்லை மற்றவர்கள் என்னை மதிப்பதில்லையா? மற்றவர்கள் என்னிடம் காட்டுவது மரியாதையா அல்லது அறுவறுப்பா?

இதே மற்றச் சமயம் என்றால், ஆமா, இப்படி இருக்கிறதுல என்ன தப்பு என்று நானே கேட்டிருப்பேன். ஆனா, இவன் சொல்லும் போது, எனக்கே தப்பு என்று தோன்றுகிறதே? என் கொள்கை சரி என்றால், இவன் சொல்லுவதைக் கண்டு நான் ஏன் வருந்த வேண்டும்?!

எல்லாவற்றையும் தாண்டி, என் புருஷனிடம் நான் நடந்து கொண்ட முறையைப் பற்றி, இவன் சொல்லும் போது, எனக்கே மிகவும் அசிங்கமாக இருக்கிறதே, அவ்வளவு கேவலமாகவா நடந்து கெண்டேன்?! அப்படி என்றால், இதை முழுக்கக் கேட்டு, சரி, சரி என்று அமைதியாக அனுசரித்துப் போகும், என் சிவாவிற்க்கு எப்படி இருந்திருக்கும்??

வெயிட், வெயிட், இப்ப என்னச் சொன்னேன்? ‘என் சிவா என்றா? எப்போதிருந்து, சிவாவை, ’என் சிவா’ என்று’ உரிமையாக நினைக்க ஆரம்பித்தேன்?

அம்மா, திருப்பித் திருப்பி அறிவுரை சொன்ன சமயத்தில் கூட, அதை மதிக்காதவள், சிவா தன்னிடம் பொறுமையா, இந்த விஷயங்கள்ல மட்டும் கொஞ்சம் உன்னை மாத்திக்கோன்னு அட்வைஸ் பண்ணப்பக் கூட, சிலிர்த்துக் கொண்டுச் சென்றவள், இப்போது எப்படி மாறினேன்?

நீ எதுக்காக இப்படி நடந்துக்குறேன்னு உனக்குனாச்சும் தெரியுமா என்று எத்தனையோ முறை சிவா வருந்தியிருக்கிறான்! அப்போதெல்லாம் அவனைப் பொருட்டாகவே மதித்ததில்லை!

யாரிவள்? இவள் ஏன் இப்படி இருக்கிறாள்??? இவள் கணவன் சிவா யார்? அவனைப் பழிவாங்க, இவளை இப்படிச் செய்யும் இந்த அயோக்கியன் யார்??? இவன் சொல்லுவதைப் போல, இவள் அவ்வளவு அழகில்லாமலா இருப்பாள்?!

இவள் யார்? இவள் எப்படி இருப்பாள்?

இவள் யார்?

நிவேதா, BE கம்யூட்டர் சயின்ஸ், 27 வயது, மாநிறத்திற்கும் சற்று கூடுதல் நிறம், ஒரே பெண், திருமணமாகி 3 வருடங்கள் ஆகிறது. ஒரு MNC ல், டீம் லீடர், கை நிறையச் சம்பளம், இவள் பெயரில், இவள் சம்பாதித்து வாங்கிய ஃப்ளாட், சென்னையில் இருக்கிறது. அந்த வீட்டில்தான் இவ்வளவும் நடக்கிறது!

இவள் எப்படி இருப்பாள்? நடிகை நிவேதா பெத்துராஜைப் போன்று இருப்பாள்!

இவளது கணவன்தான் சிவா! யாருக்கும் கட்டுப்படாதவளை, 27 வயசுலதான் திருமணமே செய்து கொள்வேன் என்று இருந்தவளை, நல்ல பையன், கல்யாணமானா அவளுக்கு பொறுப்பு வந்துடும் என்று, நிவேதாவின் அம்மா சிவாவிற்க்கு வலுக்கட்டாயமாக கட்டி வைத்ததால், சிவாவின் மீதான வெறுப்பை தேவையின்றி வளர்த்துக்கொண்டவள். (வழக்கமா, பையனுக்குதான் பொறுப்பு வரணும்னு கல்யாணம் பண்ணி வைப்பாங்க, இங்க அப்டியே உல்டா!)