கண்ணாமூச்சி 194

இப்போது.. அந்த அம்மாவின் கையை இதமாக தடவிக் கொடுத்தவாறே.. உலர்ந்து போன குரலில் சொன்னான்..!!

“உங்ககிட்ட சொன்னதை செய்து முடிச்சுட்டேன் அம்மா..!! இனிமே அவ இந்த ஊர்ல இருக்க மாட்டா.. அவளால உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.. உங்க கணவர் உங்களை விட்டு எங்கயும் போக மாட்டார்..!! உங்களுக்கு சீக்கிரமே சரி ஆகிடும் அம்மா.. கவலைப்படாதீங்க..!!”

தீர்த்தபதி அவ்வாறு சொன்னதை கேட்டதும், அந்த பெண்மணியின் கண்களில் ஒரு மின்னல் கீற்று.. உதடுகள் பிரித்து பலவீனமாக ஒரு நன்றிப்புன்னகையை உதிர்த்தாள்..!! உள்ளுக்குள் அரித்த குற்ற உணர்வை மறைத்துக்கொண்டு.. தீர்த்தபதியும் பதிலுக்கு புன்னகைத்தான்..!!

அடுத்தநாள் காலை..

காதுகளுக்கு உகாத ஓசையுடன் கதவு திறக்கப்பட.. கதிரவனின் வெளிச்சம் குறிஞ்சியின் முகத்தில் படர்ந்தது..!! இரவு முழுதும் தூங்காத அவளது விழிகள்.. அதிகாலையில்தான் சற்று அயர்ந்திருந்தன..!! அவளது நெற்றியிலிருந்தும் தோள்ப்பட்டையிலிருந்தும் வழிந்து உறைந்து போயிருந்த ரத்தத்தில் ஈக்களின் ரீங்காரம்..!! இமைகளை வெளிச்சத்துக்கு சுருக்கியவள், பிறகு கண்களை மெல்ல திறந்து பார்த்தாள்.. இரண்டு ஜோடி கால்கள் அவளை நோக்கி நடந்து வருவது தெரிந்தது..!! உடனே விருட்டென்று எழுந்து அமர்ந்தாள்.. கைகள் இரண்டையும் தன் மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டாள்..!!

அவளுடைய கால்களில் ஒன்று இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருந்தது.. மேலாடையற்ற முதுகுப்புறத்தில் ஆங்காங்கே ரத்த விளாறுகள்.. கீழாடை கூட கிழிந்து கந்தலாகி போயிருந்தது..!! கன்னத்தில் காய்ந்துபோன கண்ணீர் தடம்.. சிவந்த உதடுகளின் ஒரு ஓரம், காயத்தில் கருத்து தடித்து போயிருந்தது..!! இரவு முழுவதும் நான்கைந்து மனித மிருகங்களால், பாலியல் ரீதியான சித்திரவதைகளை அனுபவித்து இருந்ததில்.. அவளுடைய உடலும் மனதும் சோர்ந்து போயிருந்தன..!!

“எழுந்திருடி வேசை..!!” வந்தவர்களில் ஒருவன் குறிஞ்சியின் தலைமுடியை கொத்தாகப் பற்றி மேலே தூக்க,

“ஆஆஆஆஆஆஆஆ..!!” வேதனையில் துடித்தவாறே அவள் மேலெழுந்தாள்.

அகழியில் மிக உயரமான இடம்.. உச்சிமலை எனப்படுகிற இடம்..!! வானை முட்டுவது போல நிற்கும் உச்சிமலையின் முகடு.. கடந்து செல்கிற மேகத்திரள்கள் சிறிது நேரம் தங்கியிருந்து.. தழுவி முத்தமிட்டிருந்து.. பிறகு பிரிய மனமில்லாமலேயே அந்த மலைமுகட்டை பிரிந்து செல்வன..!! உச்சிமலையின் ஒருபுறம்.. பச்சை பசேலென மரங்களுடன் கூடிய அடர்காடு..!! மறுபுறம்.. கரடுமுரடான கரும்பாறைகளுடன் கூடிய பள்ளத்தாக்கு.. உளி கொண்டு செதுக்கியது மாதிரி செங்குத்தான பள்ளத்தாக்கு.. ஆயிரத்து ஐநூறு அடிக்கும் அதிகமான அதல பாதாள வீழ்ச்சி..!! அந்தமலையின் அடிவாரத்தில் இருக்கிற சமவெளி நிலத்தில்.. அழகு வாய்ந்த குழலாறு ஓடும்..!! சமவெளியில் சலனமில்லாமல் ஓடுகிற குழலாறு.. சற்று தூரம் சென்றதும் சரேலென அருவியாய் வீழும்.. காடு மலை கடந்து போய் கபினியாற்றில் கலக்கும்..!!

ஊருக்குள்ளிருந்து உச்சிமலைக்கு செல்கிற சாலையும் சற்று கரடு முரடானததுதான்.. வீதியின் ஒருபுறம் ஆங்காங்கே குடிசைகள்.. மறுபுறம் நிலைக்குத்தான மலைச்சரிவு..!! காற்று இப்போது பலமாக வீசிக்கொண்டிருக்க.. காய்ந்த சருகுகள் வீதியில் பறந்துகொண்டிருந்தன..!! அந்த வீதியில்தான் குறிஞ்சி இழுத்து செல்லப்பட்டாள்..!! மேலாடையற்ற திறந்த மார்புகள்.. இடுப்புக்கு கீழே பெயருக்கு ஒட்டிக் கொண்டிருக்கிற கீழாடை..!! இரவு முழுதும் காலை பிணைத்திருந்த இரும்பு சங்கிலி.. இப்போது அவளது கைகளை பின்புறமாக இணைத்து பிணைத்திருந்தது..!! தளர்ந்துபோன கால்களுடன் தள்ளாடி தடுமாறி நடந்தாள்..!! வீசியடித்த காற்றுக்கு அவளுடைய கருங்கூந்தலும் கீழாடையும் தடதடத்துக் கொண்டிருந்தன..!!

வீதியின் ஒருபுறம் நின்று வேடிக்கை பார்க்கிற ஊர்மக்களை.. மூக்கு நுனியில் ஊசலாடுகிற ரத்ததுளியுடன் பார்த்தாள் குறிஞ்சி..!! இந்த ஊருக்குள் முதல்முதலாய் அடியெடுத்து வைத்த அந்த நிகழ்வு.. அவளுக்கு இப்போது ஞாபகம் வந்தது..!! மாலைக்கழுத்தும், மஞ்சள் தாலியுமாய்.. தகரப்பெட்டியும், சுருட்டிய பாயுமாய்.. கணவனின் தோள் உரசி, கனவுகள் சுமந்த கண்களுமாய் நடந்து வந்த ஞாபகம்..!! அப்போதும் இப்படித்தான் வேடிக்கை பார்த்தனர் இந்த ஊர்மக்கள்..!!

‘எத்தனை கனவுகளுடன் வந்தேன் இந்த ஊருக்கு..?? எத்தனை எதிர்பார்ப்புகள் என்னெஞ்சில் அப்போது..?? இனி நான் வாழப்போகிற ஊர் என்று ஆசையாசையாய் பார்த்தேனே..?? இனி நான் பேசப்போகிற மக்கள் என்று பெருமையாய் உங்களை நினைத்தேனே..?? இதற்குத்தானா.. இந்தநிலையை எனக்கு தரத்தானா இத்தனை நாளாய் காத்திருந்தீர்கள்..??’ – குறிஞ்சியின் மனதில் அடக்கமுடியாத ஒரு ஆதங்கம்..!!

19

அந்த ஊரில் யாருக்கும் ஆரம்பத்தில் இருந்தே அவளிடம் ஒட்டுதல் இல்லை.. அவளுடைய அழகுதான் அதற்கு முழுமுதற்காரணம்.. கொள்ளை கொள்ளும் அவளது அழகு மற்றவர்களிடம் இருந்து அவளை தனியாக பிரித்தே வைத்திருந்தது..!! பெண்களுக்கோ அவளிடம் ஒருவித பொறாமை உணர்வு.. அவளை நெருங்கவே தயங்கினார்கள்..!! ஆண்களுக்கோ அவளைக்கண்டால் வேறு மாதிரியான உணர்வு.. அவர்களது வக்கிர பேச்சுக்களை வெளிப்படுத்த கிடைத்த ஒரு வாய்ப்பாக அவள் அமைந்து போனாள்..!!

குறிஞ்சியின் கணவனுக்கு பிறந்த நாட்டின் மீதிருந்த பற்று கட்டிய மனைவியிடம் இல்லை..!! திருமணமான இரண்டாம் வருடமே, ஆங்கிலேயர்களை அடித்து விரட்டப் போகிறேன் என்று.. தீவிரவாத குழுவை சேர்ந்த இருவருடன் கிளம்பி சென்றவன்தான்..!! ஆறு வருடங்கள் ஆயிற்று.. அவன் உயிருடன் இருக்கிறானா இல்லையா என்பதற்கே இன்னும் உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை..!!

அவன் விட்டுச்சென்ற செல்வம் எட்டு நாள் செலவுக்கு கூட போதவில்லை..!! பணம் சம்பாதிக்க பசுமாடு வங்கி பால் கறந்து விற்றுப் பார்த்தாள்.. பலனேதும் இல்லை..!! ஊரை பீடித்த நோய் மாட்டையும் பீடித்து மரணிக்க செய்தது..!! தனிமை.. வறுமை.. பசி.. அச்சுறுத்தல்.. உயிர்ப்பயம்..!! உயிருக்கு பயந்துதான் முதலில் தன் கற்பை தொலைத்தாள்.. பிறகு மெல்ல மெல்ல தனது உடலழகை காசாக்க கற்றுக்கொண்டாள்..!!

“என்னோட தயவு இல்லாம.. இந்த ஊர்ல மட்டும் இல்ல.. எந்த ஊர்லயும் நீ வாழ முடியாது..!!”

பயந்து நடுங்கிய குறிஞ்சியை படுக்கையில் வீழ்த்தி கசக்கியெறிந்து.. முதன்முதலாய் அவளது கற்பை சூறையாடியது இதே புவனகிரிதான்..!! உடலை விற்று அவள் பிழைப்பு நடத்தக்கூடிய சூழ்நிலைக்கு முதலில் வித்திட்டவர் அவர்தான்..!!

பயந்து பயந்து அவரிடம் படுத்து படுத்து.. உடல் மரத்துப் போனது அவளுக்கு.. வெட்கம் இற்றுப் போனது..!! பயத்தின் காரணமாக இழந்த உடலை.. பசியை தாளாமல் மற்றவர்களுக்கு விற்கவும் துணிந்தாள்..!! ஆரம்பித்து வைத்தது புவனகிரி என்றால்.. அவளை முழுவதுமாக இந்த வாழ்க்கைக்கு தள்ளியது.. இதோ.. வேடிக்கை பார்க்கிற இதே ஊர்தான்..!!

வேடிக்கை பார்த்த கூட்டம்.. குறிஞ்சி முன்னால் நகர நகர.. அவளுக்கு பின்னால் சேர்ந்து கொண்டது.. ஊர்வலம் செல்வது மாதிரி..!! செல்கிற வழியில்.. அவளை கல்லால் அடித்தனர் சிலர்.. காறி உமிழ்ந்தனர் சிலர்..!! ஒருசில மூடர்கள் அவளை சூழ்ந்துகொண்டு தாக்கினர்.. பெண்களும் அந்த மூடர் கூட்டத்தில் அடக்கம்..!!

“செத்து ஒழிடி முண்டை.. செத்து ஒழி..!!” – விளக்குமாற்றால் அடித்தாள் ஒரு பெண்.

“சீவி சிங்காரிச்சு இந்த ஊரை மயக்குனது போதுமடி..!!” – குறிஞ்சியின் கூந்தலை அறுத்தான் ஒரு ஆண்.

“இந்த ஊரை பிடிச்சிருந்த பீடை இன்னைக்கோட போகட்டும்..!!” – சாணத்தை கரைத்து குறிஞ்சியின் தலையில் ஊற்றினாள் ஒரு அறிவிழந்தவள்.

“உடம்பை வித்து பொழப்பு நடத்துற வேசை..!!” – சாட்டையை அவளுடைய மார்புகளில் சுழற்றினான் ஒரு இரக்கமில்லாதவன்.