கண்ணாமூச்சி 165

“ம்க்கும்.. எங்க போயிருப்பாரு..?? வீட்டுக்கு பின்னால இருக்குற தோட்டத்துல நிப்பாரு..!! காலங்காத்தாலேயே தோட்டத்துல இருக்குற செடியையெல்லாம் கட்டிப்புடிச்சு முத்தம் குடுக்கலைன்னா.. உங்க அப்பாவுக்கு காலைச்சாப்பாடே எறங்காது..!!” பூவள்ளி அவ்வாறு கேலியாக சொல்லவும், ஆதிரா சிரித்துவிட்டாள்.

“ஹஹா.. சரி சரி.. அவருக்கு காபி வச்சுட்டு போறேன்.. வந்ததும் குடிக்க சொல்லு..!!”

இரண்டாவது தம்ளரை டீப்பாயில் வைத்துவிட்டு.. ஆதிரா உள்ளறைக்கு திரும்பினாள்..!! நடந்து சென்று தங்கள் அறைக்குள் நுழைந்தாள்.. கதவை சாத்திவிட்டு.. காபியை டேபிளில் வைத்துவிட்டு.. கட்டிலில் மெல்ல அமர்ந்து.. கணவனை துயில் எழுப்பலானாள்..!!

“அத்தான்.. எழுந்திரிங்க.. டைமாச்சு..!!”

அவ்வளவுதான்..!! எல்லா படங்களில், எல்லா கதைகளிலும் வருகிற எல்லா ஹீரோக்களையும் போலவே.. விருட்டென்று எழுந்த சிபி, ஆதிராவை இழுத்து தன் மார்போடு போட்டு, இறுக்கி அணைத்துக்கொண்டான்..!!

“ஐயோ.. என்னத்தான் இது.. விடுங்க..!!” எல்லா ஹீரோயின்களையும் போலவே, ஆதிராவும் சிபியின் சில்மிஷம் பிடிக்காத மாதிரி சிணுங்கினாள் .

“அதுக்குள்ள குளிச்சாச்சா..?? நல்லா வாசமா இருக்குற..??” அவளுடைய சிணுங்கலை மதியாமல், ஆதிராவின் கூந்தல் நுகர்ந்தான் சிபி.

“ஆமாம்..!! ம்ம்ம்ம்ம்ம்… விடுங்கத்தான்.. நான் போகணும்..!!”

“எங்க போற..??”

“டிபன் ரெடி பண்ணனும்..!!”

“அதுலாம் அத்தை பாத்துப்பாங்க.. விடு..!! நீ கொஞ்ச நேரம் இருந்துட்டு போ..!!”

“ஹையோ.. வேலை பாக்குறேன்னு சொன்னவங்களையும் நான்தான் வேணாம்னு வெரட்டிட்டு வந்திருக்கேன்.. வேறவழியில்ல.. நான்தான் போய் இப்போ ரெடி பண்ணனும்..!!”

12

ஆதிரா அவ்வாறு சொன்னதும், இப்போது சிபி அவளை பிடித்திருந்த பிடியை சற்றே நெகிழ்த்தினான்.. மனைவியின் முகத்தை ஏறிட்டு பார்த்தான்.. சற்றே கிண்டலான குரலில் கேட்டான்..!!

“ம்ம்.. அறிவுகெட்ட ஆதிரா அப்படி ஏன் பண்ணினாளாம்..??”

“ஹ்ம்ம்..?? வெக்கங்கெட்ட நீங்க இப்படி பண்ணுவிங்கன்னு எனக்கு எப்படி தெரியுமாம்..??”

“ஹாஹாஹா..!! ம்ம்.. அப்போ.. நான் இப்படி பண்ணுவேன்னு தெரிஞ்சிருந்தா.. எல்லா வேலையும் அத்தை தலைல கட்டிட்டு வந்திருப்பியா..??” மனைவியின் குறும்புக்கு சிரித்த சிபி, விடாமல் கேலியாக கேட்டான்.

“ஹ்ஹ.. அப்படிலாம் நான் சொல்லவே இல்லையே..??” ஆதிராவோ நாக்கு துருத்தி அவனுக்கு பழிப்பு காட்டினாள்.

“ஹாஹாஹாஹா..!!”

முன்பை விட பலமாக சிரித்த சிபி, இப்போது ஆதிராவின் இடுப்பை விடுவித்தான்.. ஒரு கையால் காபி எடுத்து உறிஞ்சியவாறே, இன்னொரு கையை ஆதிராவின் தோள் மீது போட்டு.. அவளை தன்னோடு இதமாக அணைத்துக் கொண்டான்..!! ஆதிராவோ அந்த அணைப்புக்கு நெளிந்தவளாய்,

“சீக்கிரம் குளிச்சுட்டு வாங்கத்தான்.. நான் போய் டிபன் ரெடி பண்றேன்..!!” என்றவாறு எழ எத்தனித்தாள்

“ஹேய்ய்ய்.. இருடா.. என்ன அவசரம்..??” சிபி அவளுடைய கையை பற்றி கட்டிலில் அமரவைத்தான்.

“எனக்கு ஒன்னும் அவசரம் இல்ல.. உங்களுக்குத்தான் டைம் ஆச்சு..??”

“எனக்கு என்ன டைம் ஆச்சு..??”

“ப்ச்.. பத்து மணிக்கு ஃப்ளைட்.. கெளம்ப வேணாமா..??”

ஆதிரா அவ்வாறு கேட்கவும் சிபி இப்போது பட்டென அமைதியானான்.. நீளமாக ஒரு பெருமூச்சை வெளிப்படுத்தியவன், தலையை மெல்ல தொங்கப் போட்டுக் கொண்டான்..!!

சிபி ஒரு ப்ரஃபஷனல் ஃபோட்டோக்ராஃபர்.. பெங்களூரில் தலைமையகத்துடன் இயங்கும் உதயவாணி என்கிற கன்னட நாளிதழின் மைசூர் கிளையில் பணி புரிகிறான்..!! அலுவல் நிமித்தமாக இன்று அவன் டெல்லி பயணிக்க திட்டமிடப்பட்டிருந்தது.. அந்த பயணத்திற்கான ஃப்ளைட் பற்றிதான் ஆதிரா இப்போது சொன்னது..!!

சிபி இப்போது தலையை கொஞ்சமாய் நிமிர்த்தி.. மனைவியின் முகத்தை ஏறிட்டு.. ஏக்கமான குரலில் கேட்டான்..!!

“கெளம்பனுமா ஆதிரா..??”

“என்ன கேள்வி இது..?? ஃப்ளைட் டிக்கெட் புக் பண்ணியாச்சு.. டெல்லில நீங்க தங்குறதுக்கு ஹோட்டல் ரிசர்வ் பண்ணியாச்சு.. ஒரு வாரத்துக்கு தேவையான ட்ரெஸ்லாம் அயர்ன் பண்ணி வச்சாச்சு..!! இப்போ வந்து இப்படி கேட்டா என்ன அர்த்தம்..??”

“ம்ம்..?? எனக்கு போகப் பிடிக்கலன்னு அர்த்தம்..!!”

“ஏன் போக பிடிக்கல..??”

“ஏன்னு உனக்கு தெரியாதா..??”

சிபி குறும்பாக கேட்டுவிட்டு, மனைவியின் கண்களையே குறுகுறுவென பார்த்தான்.. அந்த பார்வையின் அர்த்தத்தை புரிந்துகொண்டதும், பட்டென ஒரு வெட்கச் சிவப்புக்கு உள்ளானது ஆதிராவின் முகம்..!! நாணத்தால் அவளையும் அறியாமல் தலைதாழ்த்திக் கொண்டவள்.. அந்த அர்த்தம் புரியாத பாசாங்குடனே சொன்னாள்..!!