அசுரன் Part 33 29

Trailer

“சாமி,அப்போ காத்தவராயன் சொல்லுவது உண்மையா..”என மாறன் கேட்டான்.

“ஆமா மாறா..காத்தவராயன் வம்சம் ஏற்கனவே அழிந்து விட்டது..”என இப்போது தான் எனக்கும் தெரிந்தது..

இதை கேட்டு ஆராதனா,அனு,லிகிதா,மற்றும் பிரியங்கா அதிர்ந்தனர்..

“அப்போ எப்படி..!சாமி..! காத்தவராயனை அழிப்பது..?இன்னும் இரண்டு நாட்களில் அமாவாசை வேறு வருகிறதே..!”

“அதற்கு ஒரேயொரு வழி தான் உள்ளது மாறா..!caption recapture பண்ண வேண்டும்..அதாவது நீயும்,ஆராதனாவும் காத்தவராயன் வம்சாவளியின் கடைசி வாரிசு வாழ்ந்த காலத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை மாற்றி அமைக்க வேண்டும்.அப்போ தான் நிகழ் காலத்தில் காத்தவராயன் வாரிசு கிடைப்பான் அல்லது கிடைப்பாள்..”

“அப்போ நாங்க இருவரும் ராஜேந்திர சோழன் வாழ்ந்த காலத்திற்கு செல்ல வேண்டுமா..சாமி..”

“ஆமாம் செல்ல தான் வேண்டும் மாறா…ஆனால் அதில் ஒரு பிரச்சினை உள்ளது..”

“என்ன பிரச்சினை சாமி..”

“அதாவது அமாவாசை அன்று நீங்க டைம் டிராவல் பண்ணுவதற்கும் இப்போ நீங்க பண்ண போவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு”என அவர் ஒவ்வொன்றாக சொல்ல சொல்ல அவர்கள் உடம்பு வியர்த்தது.