அசுரன் Part 33 17

மகேந்திரவர்மன் உடனே கதவில் கைவைத்து,”நான் இங்கு மன்னனாக வரவில்லை..உங்களை போன்று காத்தவராயனால் பெண்ணை பறிகொடுத்த தகப்பனாக வந்து இருக்கிறேன்”என்று கூற அக்ரூரரின் தடை நின்றது.மகேந்திரவர்மனை மட்டும் உள்ளே அனுமதித்தார்..

“தாங்கள் மதிவதனியின் தந்தை மகேந்திரவர்மன் தானே..!”என அக்ரூரர் கேட்க,

“ஆம் முனிவரே..!என் மகளின் விருப்பப்படி உங்கள் உதவியை நாடி வந்துள்ளேன்.”

அக்ரூரர் விரக்தியுடன் சிரித்து கொண்டே,”என்னாலேயே என் பெண்ணை காப்பாற்ற முடியவில்லை.நான் எப்படி உங்களுக்கு உதவ முடியும்..!”

“உங்களிடம் எல்லா சக்தி இருந்தும் ஏன் உங்கள் பெண்ணை காப்பாற்ற முடியவில்லை என கொஞ்சமாவது சிந்தித்தீர்களா முனிவரே..!”என மகேந்திரவர்மன் கிடுக்கிப்பிடி போட அக்ரூரர் திடுக்கிட்டு பார்த்தார்

மகேந்திரவர்மன் தொடர்ந்து பேசலானார்.
“முனிவரே..!காத்தவராயனால் பல பெண்கள் பாதிக்கப்படும் பொழுது,அதை தடுக்கும் சக்தி உங்களுக்கு இருந்தும்,உங்கள் இனம் சார்ந்த பெண்களை மட்டும் காப்பாற்ற சுயநலமாக ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி கொண்டீர்கள்..அதனால் தான் உங்கள் பெண் காத்தவராயனிடம் மாட்டி கொண்டாள்..”

“நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை தான் மன்னவா..என் சக்தியை கொண்டு முன்பே காத்தவராயனை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும்.என் இனம் மட்டும் பாதுகாப்போடு இருந்தால் போதும் என சுயநலமாக வேடிக்கை பார்த்ததால் வந்த வினை என்று உணர்ந்து கொண்டேன்.”என்று அக்ரூரர் தொடர்ந்து அழுதார்.

“அழாதீர்கள் முனிவரே..! மேலும் யாரும் பாதிக்கப்படாமல் இருக்க காத்தவராயனை உடனடியாக கட்டுபடுத்த வேண்டும்.உடனே மாயமலை செல்லலாம் வாருங்கள்..”என்று மகேந்திரவர்மன் அழைத்தார்.

ஆனால் அக்ரூரர் அமைதியாக இருந்தார்..

“என்ன ஆயிற்று முனிவரே..உங்கள் பெண்ணை காப்பாற்ற வேண்டும்.உடனே கிளம்புங்கள்..”என மீண்டும் மகேந்திரவர்மன் அழைக்க,

அக்ரூரர் பொறுமையாக மன்னனிடம்,”காலம் கடந்து விட்டது மன்னா,காத்தவராயன் அவன் மகன் உடலிலேயே புகுந்து என் மகளிடம் உடலுறவு கொண்டதால்,இப்பொழுது விராடன் உடம்பில் இருந்து காத்தவராயனை பிரிப்பது மிக கடினம்.மேலும்…?என அக்ரூரர் பீடிகை போட்டார்.

“என்ன மேலும்..! தயங்காமல் கூறுங்கள் முனிவரே..”மகேந்திரவர்மன் கேட்க,

மாயமலையில் நடக்கும் நிகழ்ச்சிகளை நான் கண்கூடாக கண்டேன்..விலாசினி தற்பொழுது கர்ப்பம் அடைந்து உள்ளாள்.அவளை காத்தவராயன் மயக்கத்தில் ஆழ்த்தி படுக்க வைத்து உள்ளான்.மேலும் காத்தவராயன் ஆவிக்கும்,அவன் உடலுக்கும் இன்னும் நூலிழை தொடர்பு உள்ளது.அதனால் அவன் விராடன் உடலில் புகுந்து விலாசினியுடன் உடலுறவு கொள்ளும் பொழுது,விலாசினி மேனிக்கும்,விராடன் உடம்பு மூலம் காத்தவராயன் ஆவிக்கும் தொடர்பு உண்டாகி இப்போ அது நீண்டு காத்தவராயன் மேனி வரை தொடர்பு உண்டாகி விட்டது.இதனால்
விலாசினி உடம்பில் இருந்து சிசுவுக்கு செல்லும் ஆக்க சக்தியை காத்தவராயன் இறந்த மேனி உறிஞ்சி கொண்டு இருக்கிறது. சரியாக நூறாவது நாள் அவன் பிரேதம் மீண்டும் உயிர் பெற்று எழும்.இந்த நேரத்தில் அவனை நேரில் சென்று எதிர்ப்பது எமனை நேருக்கு நேர் சந்திப்பதற்கு சமம்.அவன் உயிர் பெற்று வந்து விட்டால் உங்கள் மகள் செய்யும் தவம் எல்லாம் வீண் தான்..”என்று அக்ரூரர் சொல்லி முடிக்க

இதை கேட்டு மகேந்திரவர்மன் வெகுண்டு எழுந்தார்.

“இல்லை அப்படி நடக்க நான் விடமாட்டேன்..நீங்கள் வராவிட்டாலும் பரவாயில்லை..என் மகளின் கட்டளைப்படி நான் மாயமலை சென்று என் உயிரை கொடுத்தாவது காத்தவராயனின் இந்த செயலை தடுத்து நிறுத்துவேன்”என சீறி கொண்டு மன்னன் கிளம்ப,மீண்டும் அக்ரூரர் தான் சுயநலமாக சிந்தித்ததை வெட்கி தலை குனிந்தார்.

“நில்லுங்க மன்னா..!எதிர்த்து நிற்பது எமன் என்று தெரிந்தும்
உங்கள் மகளுக்காக தங்கள் உயிரை கொடுக்க துணிந்து விட்டீர்கள்.உங்கள் தியாகத்தை பார்த்து என்மேல் எனக்கே வெறுப்பு வருகிறது.உலக நலனை சிந்திக்கக் வேண்டிய நான் மீண்டும் சுயநலமாக சிந்தித்ததை எண்ணி எனக்கே வெட்கமாக இருக்கிறது..நானும் உங்களுடன் வருகிறேன்..என் உயிர் போனாலும் காத்தவராயனை தடுக்க என்னால் ஆன எல்லா முயற்சியையும் செய்வேன்..என அவரும் மன்னனுடன் கிளம்பினார்..ஞாபகமாக சியாமந்தக ரத்தினமணியை எடுத்து கொண்டார்.

மாயமலையில்,
கார்கோடா என்று காத்தவராயன் அழைத்தான்..

ஒரு பிரமாண்ட உருவம் வளைந்து நெளிந்து வந்தது..அந்த உருவத்தை பார்த்த காத்தவராயன்,”என்னோட உடலை பெறும் நிகழ்வை தடுக்க வருபவர் யாராயினும் அவர்களை கொல்வது உன் பொறுப்பு” என்று அவன் கட்டளையிட பிரமாண்ட உருவம் அதற்கு அடிபணிந்து வந்த வழியே வளைந்து நெளிந்து சென்றது.

யார் இந்த கார்கோடன்? அக்ரூரரும்,மகேந்திரவர்மனும் சேர்ந்து காத்தவராயன் திட்டத்தை தடுப்பார்களா..!

மன்னர் காலம்

வந்த வேலையை முடித்து கொண்டு அக்ரூரர் தன் வீட்டுக்கு விடியற்காலை 3 மணிக்கே கிளம்ப தயாரானார்.