28 வயது அழகுப் புயல் – பாகம் 1 117

நீயே வந்து பாரு என்னன்னு. பாயாசம்தான். உனக்கு கொஞ்சம் கொண்டுவரணும்னு நினைச்சிட்டிருந்தேன். நீயே வந்துட்ட. நல்லதா போச்சு. ஒரு பவுலில் ஊற்றிக் கொடுத்தாள் பார்வதி

என்ன ஸ்பெஷல்கா… உங்க மகனுக்கு வேலை கீலை கிடைச்சிருக்கா?

ம்க்கும். அவனுக்கு அந்த எண்ணமே இருக்குறமாதிரி தெரியல. நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன். ஏதோ பேஷன் டிசைனிங்…டிராயிங்க்… பெயிண்டிங்…னு நேரத்த வீண் பண்ணிட்டிருக்கான். சிலநேரம் ஜோசியக்காரனா மாறிடுறான். எனக்கு நீ ஒரு உதவி செய்யனுமே…

என்னக்கா

அவன ஒரு தடவை… ஒரே ஒரு தடவை நீயே கூப்பிட்டு கண்டிச்சின்னா… கொஞ்சம் அடங்குவான்.

ஐயோ நானா… அவன் என்ன சின்னப்பிள்ளையா… கண்டிக்கிறதுக்கு?

உன் மேல ரொம்ப மரியாதை வச்சிருக்கான். அவங்க அப்பாவ விட. அதான் உன்கிட்ட சொல்றேன். பாவம் அவன் அப்பா. இவன நெனச்சி அவருக்குக் கவலை.

நிஷாவுக்கு அவர்களின் கஷ்டம், குடும்ப நிலை தெரியும். பார்வதியின் தாலி செயின் தவிர அனைத்து நகையும் பேங்கில். அவளுக்கு நிஜமாகவே சீனிவாசனின் அலட்சியம் மீது கோபம் வந்தது

இப்போ எங்கே இருக்கான்?

எக்ஸர்சைஸ் பண்ணப்போறேன்னு மேல போனான். டேய் சீனு…. டேய்… கீழ வா….

இதோ வர்ரேம்மா…

1 Comment

Add a Comment
  1. Vera 2/episode

Leave a Reply

Your email address will not be published.