ஹம்மா ஹம்மா ஹம்சா – பகுதி 2 94

“ஆஹா! ராம் நீங்க …. ஹ்ம்ம் …. நீ எந்த flight -இல் போறியோ அதிலேயே எனக்கும் புக் பண்ணச் சொல்லுங்கோ! உங்களுக்கு … I am sorry … உனக்கு நான் செக் அட்வான்ஸ்-ஆகவே கொடுத்துடறேன்” என்று ஒரே குழப்பத்துடனும் பதட்டத்துடனும் சொன்னாள்.

“ஓகே sweetie ! நீ என்கூட நம்ம பிரைவேட் ஜெட்-இலேயே போகலாம். பகவான் ஆசீர்வாதத்தில் இந்த மாதிரி சௌகரியமாகப் பயணம் செய்யும்படியாக அவன் படைச்சிருக்கான். அதை நீயும் அனுபவிச்சுக்கோ! என் கூட வந்தீன்னா, எனக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கும்” என்று ராம் தாராளமாக offer பண்ணினான்.

அதைக் கேட்ட அப்சராவுக்குத் தூக்கிவாரிப் போட்டது! என்ன பிரைவேட் ஜெட்டா! இவனுக்கு எவ்வளவு பணமிருந்தா சொந்தமான ஜெட் வெச்சிருப்பான்! என்றெல்லாம் வியந்தாள். ஆனால் அவ்வளவு வசதி இருந்தாலும், கடவுள் பக்தியுடன் இதெல்லாம் அவன் ஆசீர்வாதம் அப்பிடின்னு சொல்றானே …. நீயும் அனுபவிச்சுக்கோநு வேற சொல்றானே … என்ன பணிவு …. என்ன தாராள மனசு …. மனுஷா இப்பிடி கூட இருப்பாளா …. அதுவும் இந்தக் கலி காலத்துலே … என்று அவளுக்குப் பல எண்ணங்கள் தோன்றின.
“அப்சரா? அப்சரா? Are you there ?” என்றான்.

1 thought on “ஹம்மா ஹம்மா ஹம்சா – பகுதி 2<a href="#" class="jm-post-like" data-post_id="3893" title="Like"><i id="icon-unlik" class="fa fa-heart"></i> 94</a>”

Comments are closed.

Scroll to Top