யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 8 164

தேன் ” மா.. அப்படிலாம் எதுவும் நடக்காது..மா… பயப்படாதிங்க…. அந்த விஷயம் உங்களுக்கு, அப்பாக்கு, உங்களோட அம்மாக்கு அப்பரம் டைரிய படிச்சதால எனக்கும் மட்டும்தான் தெரியும்… நீங்களோ நானே வாய் திறக்காத வரைக்கும் யாருக்கும் அந்த விஷயம் தெரியவாய்ப்பில்ல… கவலபடாதிங்க… நாம இங்க தங்குறோம் அவ்வளவுதான் ” என்றாள்.

பின் வடிவுக்கரசி ஊர் தலைவரிடம் இங்கு தங்க சம்மதித்தாள்.. வீட்டை கழுவிவிட்டு … சுவாதி உணவு சமைத்து எடுத்துவந்ததும் அனைவருக்கும் சாப்பிட்டனர்.. என்னதான் வடிவுக்கரசி இங்கே பிறந்து வளந்திருந்தாலும் புது இடமாகவே தோன்றியது… பெரிய அறைகள் இருந்தும் யாருக்கும் தூக்கம் வரவில்லை .. வெளியில் மரத்தடியில் அமந்திருந்தனர்.. காற்று தென்றலாய் விச வடிவு,தேன்,ரவி,சுவாதி என நால்வரும் பேசிக்கொண்டிருந்தனர். இப்போது ரவியின் மனது லேசாகி அனைவரிடமும் பழைய படி சிரித்து பேசிக்கொண்டிருந்தான்..

இப்படியே முன்று நாட்கள் நகர்ந்தன…

இரவு மணி 8:45

வடிவு ” டேய். … வந்தவுடனே கேக்கனும்னு இருந்தேன்… நீ பாண்டிச்சேரிக்கு தானே போரேனு சொன்ன…. எப்படி இங்க வந்த. … ” என்றாள் .. ரவியோ என்ன கூறுவது என்று யோசித்து கொண்டிருக்கும் போதே. . சுவாதி குறுக்கிட்டாள் ” என்னடா…. சொல்லட்டா.. எல்லாத்தையும்? ??” என விளையாட்டாக மிரட்டினாள்.

ரவிக்கு முகமெல்லாம் வேர்த்து இதயம் படபடத்தது… மனதில் ” எங்க இவ.. எதுக்கு நாம பாண்டிச்சேரி வந்தேன்னு எல்லாத்தையும் சொல்லி தொலைக்க போறா ” என பயந்தான்.. தேன்மொழி ரவியின் முகம் வேர்த்து ஒருமாதிரி இருப்பதை… சரியாக கவனித்தாள்..

வடிவு சுவாதியிடம் ” ஏய்…. என்னடி… அவன கேட்ட… நீ என்னமோ. ..சொல்றேனு… சொல்லுற… என்னடி…” என்றாள். ரவியோ சுவாதியின் பதிலை எண்ணி திருதிருவென முழித்து கொண்டிந்தான்..

சுவாதியோ ” வடிவு… நான்தான்டி அவன இங்க… உன் சின்ன பாட்டி இருக்காங்கனு கூட்டிட்டு வந்தேன்…ஆனா.. இங்க வேறமாதிரி நடந்திருச்சி.. ” என சுருக்கமாக கூறினாள்.. இப்போதுதான் ரவியின் மனது அமைதியானது..

1 Comment

  1. Eagerly waiting for next part konja sikiram upload pannunga

Comments are closed.