மோஹனா டார்லிங் – Part 9 33

நான் அவனை முறைத்தேன் அனால் நான் சிரிப்பை அடக்க முயற்சிக்கிறேன் என்று அவனுக்கு தெளிவாக தெரிந்தது.

அவன் சிரித்துக்கொண்டே சொன்னான்,” உனக்கு டாக்டர் மோஹனா என்று அழைத்தால் பிடிக்குது எனக்கு கோர்ஜெஸ் என்று அழைத்தால் பிடிக்குது அதனால் இருவருமே சந்தோஷ பாடுனம் என்றால் இப்படி அழைப்பது தான் சரி.”

நான் உன்னை திருத்தவே முடியாது என்பது போல் தலை ஆட்டி கொண்டு அங்கே இருந்து சென்றேன். அப்போது ஒரு நாள் அவனுடன் வேலை செய்யும் ஊழியர்கள் பேசுவது தற்செயலாகக் என் காதில் விழுந்ததது. அதாவது அடுத்த வாரம் ராஜாவின் பிறந்தநாள் என்று. என் பிறந்த நாள் முடிந்து சரியாக இரண்டு மாதத்துக்குள் அவன் பிறந்தநாள் வந்தது. என் பிறந்தநாளுக்கு நான் எதிர்பாராத வகையில் பரிசுகள் கொடுத்து என்னை மகிழ்ச்சி படுத்தினான். நானும் அவனுக்கு பதிலுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தேன்.

“ஹேய் ராஜா அடுத்த வாரம் உன் பிறந்தநாளாமே, உனக்கு என்ன மாதிரியான பரிசு வேணும் சொல்லு.”

அவன் என்னை பார்த்து ஒரு புன்முறுவலுடன் சொன்னான், “நான் கேட்ட பரிசு எனக்கு குடுப்பியா? அது உன்னால் கொடுக்க கூடியது தான்.”

அவன் பார்வையே சரி இல்லை. ஏய் நீ என்ன கேட்பே என்று தெரியும். அதற்கு சான்ஸ்சே இல்லை.”

“நான் என்ன கேட்பேன் என்று நினைக்கிற?”

“ராஸ்கல் நீ என்ன கேட்ப என்று தெரியும். ஒன்னும் தெரியாதது போல் நடிக்காதே.”

“ஹலோ உங்கள் கற்பனை அப்படியே ஓடவிடாதீங்க. நீ நினைத்தது போல் இல்லை.”

இப்போது நான் பதிலுக்கு,” என்ன நினைத்தேன்,” என்று கூறினவுடன் ‘ஐயோ’ என்று நாக்கை கடித்துக் கொண்டேன்.

இருவர் மனதிலும் செக்ஸ் பற்றிய விஷயம் தான் ஓடியது அனால் வெளிப்படையாக சொல்லவில்லை.

அவன் ‘ஹா ஹா ஹா’ என்று சிரித்துவிட்டான். “நீ நினைத்ததும் அருமையாக தான் இருக்கும் அனால் நான் கேட்க வந்தது வேறு.”

நான் குழப்பத்துடன் அவன் முகத்தை பார்த்தேன்.

“அன்றைக்கு நாம் டேட்டிங் போகும் போது மிகவும் அழகாகவும் கவர்ச்சியாகவும் புடவை உடுத்தி வந்தாய் இல்லையா. என் பிறந்தநாள் அன்று அதே போல் உடுத்தி வேலைக்கு வரணும். அதை பார்த்து நாள் புரா நான் ரசிக்குனும்,” என்றான்.

அவன் இப்படி கேட்பான் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. சிறிது நேரம் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. பிறகு சொன்னேன், “ச்சீ போடா அது எல்லாம் என்னால் முடியாது. வேற எதாவது பரிசு கேளு, ஷர்ட், லெதர் வால்ட்….,” என்று நான் சொல்லி கொண்டு இருக்கும் போது அவன் என்னை நிறுத்தினான்.

“எனக்கு நான் சொன்ன பரிசு தான் வேணும் இல்லை என்றால் பரவாயில்லை எனக்கு ஒன்னும் வேண்டாம்.”

அவன் மேலும் எனக்கு பேச வாய்ப்பு கொடுக்காமல் கிளம்பிவிட்டான். இவன் என்ன இப்படி கேட்டுவிட்டான் என்று மனதில் புலம்பி கொண்டு நடந்தேன் அனால் என் ஆழ்மனது சொன்னது அவன் கேட்பதை நான் நிச்சயமாக செய்வேன்.

ராஜா என்னிடம் கேட்டது என்னை பெரிதும் பாதித்தது. அவன் தெரிந்து தான் இப்படி கேட்டானா அல்லது இதில் எந்த உள்நோக்கமும் இல்லையா? அன்று நாங்கள் ‘டேட்டிங்’ போகும்போது நான் கவனம் கொண்டு மிகவும் கவர்ச்சியாக உடுத்தி சென்றேன். நான் வெளிப்படையாக என் மனசாட்சிக்கு ஒப்பு கொள்ளாவிட்டாலும், அன்று இரவு என்னை அவனிடம் கொடுத்து இன்பங்கள் பரிமாற என்னை அவ்வாறு தயார் பண்ணி இருந்தேன். உண்மையில் நாங்கள் அன்று பாலியல் தாபத்தின் உச்சபட்சமான நிலையில் இருந்தோம். அவன் மீண்டும் என்னை அந்த மனா நிலைக்கு கொண்டு செல்ல பார்க்கிறானா? ‘ச்சே ச்சே’ அப்படி எல்லாம் இருக்காது என்று நானே என்னை சமாதான படுத்தி கொண்டேன். நான் அப்படி உடுத்தினால் என்ன தீங்கு வர முடியும்? அவன் பிறந்தநாள் அதுவுமா இதாவது அவனுக்கு நான் செய்ய வேண்டாம்மா. சரி அவன் கேட்ட மாதிரியே செய்வோம் என்று முடிவெடுத்தேன்.