ஓகே மூடிட்டேன் என்று கண்ணை மூடினாள் .சரி இப்ப கண்ண திற என்றான் .கண்ணை திறந்து போது வள்ளிக்கு ஆச்சரியமும் சந்தோசமும் தாங்கவில்லை .ஏன் என்றால் எதிரில் நின்று இருந்தது அவள் அம்மாவும் அப்பாவும் .அம்மா அப்பா என்று ஆச்சரியத்தோடும் அழுது கொண்டும் அவர்கள் இருவரையும் உள்ள கூப்பிட்டு போனாள் .பின் உள்ளே சிறிது நேரம் வள்ளி என்ன சொலவது என்றே தெரியாமலே இருவரிடமும் ஆனந்த கண்ணிர் விட்டு கொண்டு இருந்தாள் .என்னப்பா தீடிருன்னு சொல்லாம வந்துட்டிங்க எப்படிப்பா வந்திங்க என்றாள் .
3 நாளைக்கு முன்னாடி ஒரு லெட்டரும் பாம்பேக்கு ரெண்டு பிளைட் டிக்கட்டும் நம்ம வீட்டுக்கு வந்துச்சு அதுல நான் உங்க மாப்பிளையோட பிரண்டு உங்க பொண்ணு உங்கள பாக்கனும்னு ஆச பட்ரதால உங்களுக்கு பிளைட் டிக்கெட் எடுத்து அனுப்ப சொன்னாரு இதுல பிளைட் டிக்கெட் மும்பைக்கு இருக்கு நீங்க ஞாயிற்று கிழமை வந்து இருங்க போட்டு இருந்துச்சு அப்புறம் அதே மாதிரி வந்தோம் வந்ததும் இந்த தம்பி எப்படியோ எங்கள அடையாளம் கண்டு பிடிச்சு வீட்டுக்கு கூப்பிட்டு வந்தாரு தம்பிக்கு நன்றி சொல்லணும் அதே மாதிரி மாப்பிளையும் எங்கள ரயில வரவைக்க முடியலன்னு தெரிஞ்ச உடனே உனக்காக எங்களுக்கு செலவு பண்ணி பிளைட் டிக்கெட் எடுத்து எங்கள வர வைச்சதுக்கு ரொம்ப நன்றி மாப்பிள உங்களுக்கும் என்றார்
அப்பா நீங்க ஒரு நிமிஷம் விக்கி கூட பேசிகிட்டு இருங்க நான் இந்த வந்துருறேன் என்று மணியை கூப்பிட்டு தனியாக ஒரு ரூம் சென்றாள் வள்ளி .ஏங்க சொல்லவே இல்ல எனக்காக விக்கி கிட்ட சொல்லி நீங்க எங்க அப்பா அம்மாவுக்கு பிளைட் டிக்கெட் எடுத்து வர வைப்பிங்க்ன்னு நான் நினைக்கவே இல்லைங்க ரொம்ப தேங்க்ஸ்ங்க என்று சொல்லி கட்டி பிடித்தாள் .ஓகே ஸ்வீட்டி ஸ்வீட்டி உங்க அப்பா அம்மா வர போறது எனக்கும் தெரியாது நானும் உன்னையே மாதிரி இப்ப தான் அவங்கள பாத்தேன் .என்றான் மணி .
அப்ப யாரு அவங்களுக்கு டிக்கெட் எடுத்து வர வச்சது என கேட்டாள் .maybe விக்கிய இருக்காலம் என்றான் மணி .அதான பாத்தேன் நீங்களாச்சும் எங்க அப்பா அம்மாவுக்கு செல்வளிக்கிராவது என்று விலக பார்த்தவளை மீண்டும் கட்டி பிடித்து யே இருடி இப்ப கூட அவன் பண்ணாத மறைச்சு நான் உன் கிட்ட நல்ல பேர் எடுத்துருக்காலமே ஏன் உண்மைய சொன்னேன் என்று கேட்டான் .அதான் என் புருஷன் அதுனால தான் உங்கள எனக்கு பிடிக்கும் என்று சொல்லி விட்டு அவனுக்கு மீண்டும் ஒரு சின்ன முத்தம் உதட்டில் கொடுத்து விட்டு வெளியேறினார்கள் .
பின் வெளியே விக்கி மணி மணியின் மாமானர் என எல்லாரும் நன்கு சிரித்து பேசி கொண்டு இருந்தனர் .அதன் பின் வள்ளி விக்கியை கூப்பிட்டாள் .யே எதுக்கு நீ இத செஞ்ச என்றாள் .யே நான் ஒன்னும் பண்ணல எல்லாம் உன் புருஷன் தான் அவங்கள பிளைட்ல வர வச்சது என்றான் .யே அவனுக்கு இத பத்தி எதுவும் தெரியாதுன்னு சொல்லிட்டாரு என்றாள் .ஓகே என் சிஷ்டருக்கு நான் இத கூட பண்ணாம இருந்தா நல்லா இருக்குமா என்றான் விக்கி .வள்ளி அழுதாள் .
யே எதுக்கு அழுகுர நான் எதுவும் தப்பா பண்ணலையே என்றான் விக்கி .இல்ல எனக்கு உண்மைல பிரதர் இருந்தா கூட இதலாம் செஞ்சு இருப்பாங்களாங்கிறது சந்தேகம் தான் ரொம்ப தேங்க்ஸ்டா என்றாள் வள்ளி .யே படத்துல வர செண்டிமெண்ட் டயலாக் எல்லாம் எதுக்கு இப்ப போயி உங்க அப்பா அம்மா கிட்ட போயி பேசு என்றான் .நீ ரொம்ப நல்லவாண்டா உனக்கு எல்லாமே நல்லது நடக்கணும் நீயும் எங்கள மாதிரியே கல்யாணம் முடிச்சு சீக்கிரம் குழந்தை பொண்டாட்டின்னு செட்டில் ஆகணும் என்றாள் வள்ளி .அப்படி நடந்தா தான் அது நல்லது இல்ல என்று சிரித்தான் விக்கி .
Next part soon please
Bro next part pudunga daily oru part podunga story super iruku