டீச்சரம்மா.. Part 1 371

நான் “உள்ள வாங்க..” என்று அவர்களை உள்ளே அழைத்தேன். இருவரும் உள்ளே வர அவர்களை ஹாலில் உட்கார வைத்து “என்ன சரண், நான் உன்ன ஸ்கூலுக்குத்தானே உன் பேரன்ட்ஸ்ஸ கூட்டிட்டு வரச் சொன்னேன்.. நீ வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்க?” என்றேன்.

நான் கேட்டதற்கு சரண், வழக்கம்போல தன் அப்பாவி முகத்துடன் உட்கார்ந்திருந்தான். அவன் அக்காதான் “டீச்சர்.. சரண் எல்லாத்தையும் எங்கிட்ட சொன்னான். அதான் உங்கள வீட்டுல வந்து பாக்கனும்ன்னு வந்திருக்கேன்..” என்று சொன்னவள் உடனே அழ ஆரம்பித்துவிட்டாள்.

நான் சரணின் அக்காவை ஆறுதல் சொல்லி சமாதானப்படுத்தினேன். பிறகு என்ன விஷயம் என்று கேட்க அவன் அக்கா என்னிடம் பேச ஆரம்பித்தாள்.

“டீச்சர், எங்களுக்கு அப்பா அம்மா இல்ல. யாரும் இல்லாத எங்கள எங்க தாய்மாமாதான் வளத்தாரு. அதுமட்டுமில்லாம என்னை அவரு பையனுக்கே கல்யாணம் பண்ணி வச்சாரு. எங்களுக்கு கல்யாணமாகி 3 வருசம் ஆச்சு. எங்களுக்கு ஒரு குழந்தை இருந்தாலும், நான் என் தம்பி சரணத்தான் என்னோட முதல் குழந்தையா நினைக்கிறேன். என்னோட மனச புருஞ்சிக்கிட்ட என்னோட ஹஸ்பன்டும், இவன ஒரு நல்ல படிப்பு படிக்கவச்சு நல்லவேளை வாங்கித்தரனும்ன்னு நினைக்கிறார். ஆனா இவன் பண்றத பாத்தாத்தான் எனக்கு அழுகையா வருது..” என்று சொல்லி மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

நான் மீண்டும் அவளை சமாதானப்படுத்தினேன். பின் “என்ன சரண் இது? இப்படி ஒரு அக்காவும் அத்தானும் கிடைக்க நீ குடுத்து வச்சிருக்கனும். ஆனா நீ ஏன் இப்டி பண்ற? காலாண்டு பரிட்சையில நீ ஒரு பரிட்சையில கூட பாஸ் பண்ணல.. அவங்க கனவுல மண்ண அள்ளி போடுற மாதிரி இப்டி பண்ணுனா அவங்களால எப்படி தாங்கிக்க முடியும்?” என்று சரணிடம் அறிவுரை சொல்ல அவன் கிணத்தில் போட்ட கல் மாதிரி அப்படியே உட்கார்ந்திருந்தான்.

பின்னர் அவன் அக்கா கொஞ்சம் அழுகையை குறைத்துக்கொண்டு “டீச்சர் எனக்காக ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?” என்று கேட்டாள்.

“என்னம்மா? எதுவா இருந்தாலும் சொல்லு. என்னால முடிஞ்சத செய்றேன்..” என்றேன்.

“டீச்சர், இவனுக்கு நீங்கதான் க்ளாஸ் டீச்சர்ன்னு சொன்னான். அதனால இவனுக்கு கொஞ்சம் டியூசன் எடுக்க முடியுமா?” என்று கேட்டாள்.

“நீ கேட்குறதும் சரிதாம்மா. ஆனா நான் பிஸிக்ஸ் டீச்சர்தான். என்னால அதுக்கு மட்டும்வேணா டியூசன் எடுக்க முடியும்.. அவன் இவன் மொத்த சப்ஜெக்ட்லயும் பெயில் ஆகிருக்கானே?” என்றேன்.

“இல்ல டீச்சர்.. இவன் ஆரம்பத்துல நல்லா படிச்சவன்தான். இப்ப என்னவோ தெரியல இப்டி பண்ணிக்கிட்டு இருக்கான். ஒருவேளை நீங்க கொஞ்சம் கண்டிப்போட டியூசன் எடுத்தா இவன் பழைய மாதிரி படிக்க சான்ஸ் இருக்கு..” என்று சொன்னாள்.