டீச்சரம்மா.. Part 1 381

முதல் பாகம்:

“ஸ்ஸ்ஸ்.. அப்பா..” என்று பெருமூச்சு விட்டபடி Staff Room-ல் என்னுடைய நாற்காலியில் சென்று அமர்ந்தேன்.

காலையிலிருந்து மூன்று வகுப்புகள் தொடர்ந்து க்ளாஸ் எடுத்ததால் தொண்டையெல்லாம் வறண்டுபோய் முள்குத்துவது போன்று இருந்தது. அதனால் தண்ணீர் குடிக்கலாம் என்று என்னுடைய வாட்டர் பாட்டிலை எடுத்து அதன் மூடியைத் திறக்கையில் “என்ன டீச்சர், இப்போதான் க்ளாஸ் முடிஞ்சுதா?” என்றபடியே என் சக ஆசிரியை கமலி Staff Room-க்குள் வந்தாள்.

நான் வாட்டர் பாட்டிலில் இருந்த தண்ணீரை கொஞ்சம் குடித்தபடி “ஆமா டீச்சர்.. இன்னைக்கு டுவல்த் இங்கிலிஸ் டீச்சரும், கெமிஸ்ட்ரி சாரும் லீவு. அதான் ஹெட்மாஸ்டர் என் பிஸிக்ஸ் க்ளாஸ அந்த ரெண்டு க்ளாஸோடையும் சேர்த்து எடுக்க சொல்லிட்டாரு.. எப்படியோ ஒருவழியா சிலபஸ் முடிச்சிட்டேன்..” என்று ஒரு நிம்மதி பெருமூச்சோடு, தண்ணீரை முழுங்கியபடி சொன்னேன்.

நான் சொல்லி முடித்ததும் “சரி.. சரி..” என்று சொன்ன கமலி டீச்சர், பின்னர் “இந்தாங்க டீச்சர்.. தமிழ் சப்ஜக்ட்டோட மார்க் லிஸ்ட்..” என்று நடந்து முடிந்த காலாண்டு பரிட்சையின் தேர்வு மதிப்பெண் பட்டியலை என்னிடம் நீட்ட, பனிரெண்டாம் வகுப்பு ஆ பிரிவின் “க்ளாஸ் டீச்சர்” என்ற முறையில் நான் கமலி டீச்சரிடமிருந்து அதை வாங்கி என் டேபிளில் வைத்தேன்.

கமலி டீச்சர் கொடுத்து முடித்ததுதான் தாமதம், அடுத்த வினாடியே எனக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து புத்தகத்தை புரட்டியபடி நோட்ஸ் எடுத்துக்கொண்டிருந்த மேத்ஸ் டீச்சர் மஞ்சுளாவும் தனது சப்ஜெக்ட்டிற்கான மார்க் லிஸ்ட்டினை என்னிடம் நீட்டினாள்.

அதையும் வாங்கி என் டேபிளில் வைத்தபோதுதான் என் மரமண்டைக்கு உரைத்தது, நான் இன்னும் எனது பிஸிக்ஸ் சப்ஜெக்டில் நான்கைந்து பேப்பரை திருத்தி முடிக்கவேண்டும் என்று!

சட்டென்று என் மேஜை டிராயரில் இருந்து திருத்தி முடிக்காத பரிட்சை பேப்பர்களை எடுத்து, எனது சிவப்பு மை பேனாவினால் திருத்த நினைக்கையில் முதலாவதாக என் கண்ணில் பட்டது சரணின் பேப்பர்தான்.