சத்தம் போடாதே – 2 116

“ஹாஹாஹா எல்லாரும் ஒரே மாதிரி இருந்துட்டா லைஃப்பே மொக்கையா ஆகிடும். டிஃபரென்ஸ் ஆப் ஒபினியன் இருந்தா லைஃப் சுவாரஸ்யமே. சரி அதை விடு பிலோஸோபி எல்லாம் வேணாம். வா சரக்கடிக்க போலாம் எனக்கு இப்போ சரக்கடிக்கணும்னு போல இருக்கு”

“மச்சி கம்மியா குடி அனிதா மேடம் உன்னையும் குடிக்காரன்னு நினைச்சிட்டு போறாங்க”

“ஹ்ம்ம் பரவாயில்ல என்னை கலாய்க்கிற அளவுக்கு தேறிட்டே மச்சி”

இருவரும் வழக்கமாக போகும் அந்த பாருக்கு சென்று சரக்கடித்து திரும்ப ரூம் வரும் போது இரவு 10ஐ தாண்டி இருந்தது. அடுத்த நாள் வகுப்புகள் முடிந்தவுடன் வழக்கம் போல் மேகா என்னிடம் வந்தாள்.

“மேகா இன்னைக்குள்ள போரியர் ட்ரான்ஸபார்ம் முடிச்சிடலாம்”

“இன்னைக்கு வேணாம் அருண். எனக்கு மூடு இல்லை”

“சரி மேகா. அப்போ நான் கிளம்புறேன்”

“என்னை பிக் பண்ணுற கார் எப்போவும் மாதிரி தாண்டா வரும். அதுவரைக்கும் தனியா இருக்க போர் அடிக்கும் சும்மா பேசிட்டு இருக்கலாம்”

இருவரும் தனியாக சென்று புட்பால் கிரவுண்ட் அருகே பெஞ்சில் உட்கார்ந்தோம்.

“சரி என்ன பேசணும் மேகா”

“உன்னை பத்தி சொல்லேன்”

என்னை பற்றி, எனது அம்மாவை பற்றி எனது ஊரை பற்றி எல்லாம் சொல்ல ரொம்ப ஆர்வமாக கேட்டாள்.

“உங்கே வில்லஜுக்கே பார்ஸ்ட் டிகிரி ஹோல்டர் ஆகிடுவெல நீ. உன்னை நெனச்சா ரொம்ப பெருமையா இருக்குடா” எனது தோளில் தட்டி கொடுத்தாள்.

கார்த்திக் தவிர காலேஜில் இருந்த மற்ற அணைத்து மாணவர்களும் என்னை, எனது வறுமையை ஏளனமாக பார்த்த போது மேகாவும் மற்ற மாணவர்களை போல இல்லாமல் என்னை சராசரி மாணவனாக பார்த்தது அவள் மீது இருந்த மதிப்பை கூட்டியது.

“உன்னை பத்தி சொல்லு மேகா”

“உன்னை மாதிரி இன்டெரெஸ்ட்டிங் காரெக்டர் எல்லாம் கிடையாது. பார்ன் அண்ட் பிராட் அப் இன் இங்கேயே தான். மம்மி டாடி ரெண்டு பேரும் ஸ்டேட் கவர்ன்மென்ட் எம்பலோயீஸ்”

“ஹ்ம்ம்”

“இந்த சைக்கிள் டெஸ்ட்ல அநேகமா தேறிடுவேன்னு நினைக்கிறன் அருண். அப்படி மட்டும் பாஸ் ஆகிட்டேன்னா என்னோட ட்ரேட் உனக்கு கண்டிப்பா உண்டு”

“ஹாஹாஹா சரி”

“சரி டைம் ஆகிடுச்சுனு. என்னோட கார் வந்து இருக்கும்னு நினைக்கிறன்”

“சரி மேகா பை”

“அருண் ஒரு நிமிஷம்”

“என்ன மேகா”

“இப் யு டோன்ட் மைண்ட் பார்க்கிங் வரைக்கும் கூட வரியா.” தூரத்தில் ராகுல் நிற்ப்பதை பார்த்தவுடனே சொன்னாள்.

“சரி மேகா”

அவளை கூட பார்க்கிங் வரை சென்று அவளை காரில் ஏற்றிவிட்டேன். அவள் காரில் ஏற போகையில் மாலை நேரத்து வெயில் பட்டு தங்கம் போல மின்னிய அவளை தலை முடியை கற்றை கோதி சரி செய்து கொண்டே என்னை பார்த்து சிரித்து பை என்று உதட்டை அசைத்தாள். அவளின் அந்த சிரிப்பை பார்த்த உடன் எனது அடிவயிறு கூசி பட்டாம்பூச்சி பறக்க தொடங்கியது. நானும் சிரித்து கொண்டே பை சொல்லிவிட்டு எனது ஹாஸ்டல் நோக்கி நடந்து சென்று கொண்டு இருந்தேன். அப்போது போது ராகுல் குறுக்கிட்டான்.

“டேய் அவ என்னை பார்த்து உன் கிட்ட என்னடா சொன்னா”

“ஒன்னும் சொல்லல”

“நான் தான் பார்த்தேனே”

“ஒன்னும் சொல்லலை ராகுல்”

“என் கிட்டேயே பொய் சொல்லுறியா பிச்சைகார நாயே” ஓங்கி ஒரு குத்து என்னுடைய தாடையில் விட்டான்.

அதை பார்த்த நான்கு சீனியர் மாணவர்கள் வேகமாக அங்கே வர ராகுல் தன்னுடய பைக்கை எடுத்து கொண்டு ஓடினான். அடி ஒன்றும் பெரிதாக இல்லாவிட்டாலும் கீறல் விழுந்து ரத்தம் சொட்டு லேசாக வலித்தது. பாத்ரோம் சென்று கழுவிவிட்டு ஒரு பாண்ட்ஐடை போட்டு கொண்டு ரூமிற்கு சென்றேன்.

அதற்குள்ளாக சீனியர் மாணவன் யாரோ இந்த விஷயத்தை கார்த்திக்கிடம் சொல்ல அவன் கடும் கோபத்தில் இருந்தான்.

“அந்த ராகுல் நாயை சாகடிச்சுடுறேன்”

“கார்த்தி அதெல்லாம் ஒன்னும் வேணாம்டா. அவன் அடிச்சது எல்லாம் வலிக்கவே இல்லை”

“டேய் வலிக்கிது வலிக்கலைனு இல்லை அருண். உன் மேல எப்படி அவன் கைவைக்கலாம்”

“எனக்காக ஏன்டா பிரச்சனைல விழுற”

“நீ தான் மச்சி என்னோட பெஸ்ட் பிரண்ட். உனக்கு ப்ரோப்லம்னா நான் நிக்காம வேற எவன் நிப்பான். அவன் எங்கே இருப்பான்னு எனக்கு தெரியும் நீ வா மச்சி” என்னை கூட்டி கொண்டு கொண்டு காலேஜிற்கு கொஞ்ச தூரத்தில் இருந்த அந்த காலி கிரவுண்டிற்கு வந்தான். ஒரு பெட்டிக்கடை இருக்க அதை அங்கே சிகரட் வாங்கி கொண்டு கும்பல் கும்பலாக நின்று புகைத்து கொண்டு இருந்தனர். தூரத்தில் ராகுல் அவனின் நண்பர்கள் இருவருடன் நின்று கொண்டு தம்மடித்து கொண்டே சிரித்து பேசி கொண்டு இருந்தான்.

“டேய் ராகுல் எதுக்குடா இவனை அடிச்சே”

“இவனும் மேகாவும் என்னை பார்த்து ஏதோ பேசிட்டு இருந்தாங்க என்னன்னு கேட்டதுக்கு சொல்ல மாட்டேன்னு சொன்னான் அதுக்கு தான் அடிச்சேன்”

“என்னடா பேசிட்டு இருந்தீங்க” என்னை பார்த்து கேட்டான்.

2 Comments

  1. nice story நல்ல இருக்கு செம்ம கதை

  2. ரெம்ப இன்டரஸ்டிங்ன கதை சொல்லுறது
    கஷ்ட்டம் ரியலி சூப்பர் இந்த கதை எழுதுரதுல ஒரு மயிரும் தரமாட்டானுங்க
    சப்மிட் பண்ணுகதைவராது ஒரு பகுதிய
    ஐந்தாறு தடவைஎழுதவா முடியும் என் கதைய ஒரு பகுதி எழுதி முற்றும் போட போரேன்

Comments are closed.