என்ன வாழ்க்கைடா இது – பகுதி 5 120

“விட்ட அவன் உடம்புல உள்ள மச்சங்களை கூட எண்ணி சொல்லிடுவ போலிருக்கு”
“ச்சீ போண்ணா…………….. என்னண்ணா கேட்டாரு”
“சும்மா உன் நம்பர். ஜஸ்ட் ஹாய் சொல்லணுமாம்”
“ஓ”
“என்னடி சத்தத்தையே காணோம்”
“ஒண்ணும் இல்லண்ணா”
“குடுக்கட்டா வேணாமா”
“உன் இஷ்டம். உன் தங்கச்சி பத்தி உனக்கு அக்கறை இருக்காதா”
“ஓஹோ….என் தங்கச்சிய நல்ல வசதியான அழகான சிவப்பான ஹைட்டான மாப்பிள்ளைக்கு தான் கொடுக்கணும்னு இந்த அண்ணா ஆசை”
“….”
“லைன்ல இருக்கியா”
“ம்”
“ஜீத்து கூட டூயட் பாட போயிட்டியோன்னு நெனச்சேன்”
“ச்சீ போண்ணா” குரலில் நிறையவே மாற்றம் தெரிந்தது.
“சரி….நம்பர் கொடுப்பேன். பட் ஒரு கண்டிஷன்”
“என்னண்ணா”
“என் அழகு தங்கச்சி…..சீக்கிரமே ஜீத்துவ மடக்கி எனக்கு மச்சினன் ஆக்கிடனும்”
“அண்ணன் பேசுற பேச்சா இது” பொய்க்கோபம் காட்டினாள்.
“என்ன பண்ண நீ எவனாவது பரதேசியை லவ்வு கிவ்வு பண்ணிட்டு வரக்கூடாதேன்னு அண்ணன் என்னல்லாம் செய்ய வேண்டியதா இருக்கு.”
“அம்மாக்கு தெரிஞ்சா என்னாகும்…”
“இந்த அம்மா கிட்ட பேசு”
அம்மா மறுத்தும் கேட்காமல் திணித்தேன். ஸ்பீக்கரில் போட்டேன்.