வாசமான ஜாதிமல்லி – பாகம் 5 24

“அவ்வளவு தானா?”

“இல்லை, உன் பெரும்தன்மையால் என் தந்தையை கடைசி நேரத்தில் பார்க்க அனுமதித்ததற்கு நன்றி சொல்ல விரும்பினேன்.”

பிரபு சில வினாடிகள் பேசுவதை நிறுத்திவிட்டு பின் தொடர்ந்து கூறினான், ”எல்லாத்துக்கும் மேல நான் உனக்கு அளித்த வாக்குறுதியை மீற மாட்டேன் என்று உன்னிடம் உறுதியளிக்க விரும்பினேன்.”

வேறு ஏதாவது இருக்கிறதா என்று சரவணன் சிறிது நேரம் காத்திருந்தான். அப்படி எதுவும் இல்லை என்று தெரிந்தவுடன் அவன் பேச ஆரம்பித்தான்.

“என் மனைவியுடனான உன் கள்ள உறவை பற்றி எனக்கு எப்போது தெரியும் என்று நீ நினைச்சே?”

பிரபுவுக்கும் அதில் சில சந்தேகங்கள் இருந்தன, ஆனால் முதலில் தானாக எதுவும் சொல்ல வேண்டாம் என்று, “இந்த இடத்தில் நீ எங்களை பார்த்த போது.”

“இல்லை, எனக்கு அதற்க்கு முன்பே சில சந்தேகங்கள் இருந்தன. உங்கள் இருவருக்கும் இடையே ஒருவித நெருக்கும் இருப்பதை உணர்ந்தேன், ஆனால் எந்த அளவிற்கு நீங்க போய்விட்டீங்க என்று முதலில் தெரியவில்லை.”

இத்தேர்க்கு முன்பு அவனுக்கும் மீராவுக்கு தெரியாத விஷயம் பற்றி இப்போது சரவணன் சொல்ல, முதல் முறையாக அதை கேட்கிறான். சரவணன் பேச பிரபு சரவணனின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேரம் அவன் யோசித்துவிட்டு சரவணன் மேலும் பேச துவங்கினான்.

“உன் தங்கையின் திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு, சிறுநீர் கழிக்க தவித்துக்கொண்டு இருந்த நான் உன் தந்தையிடம் அதற்க்கு எங்கே போவது என்று கேட்டேன், சமையலறைக்கு அருகில் நிறைய பெண்கள் பிஸியாக இருப்பதால் என்னால் குளியலறையைப் பயன்படுத்த முடியவில்லை.”

அப்போது பிரபுவுக்கு பளிச்சென்று பொறி தட்டியது. அநேகமாக என் அப்பா சரவணனை பின் பக்கம் போக சொல்லி இருப்பார். நான் கொஞ்ச நேரமாவது மீராவை கொஞ்ச வேண்டும் என்று அவசர பட்டதால் தான் எல்லா பிரச்சனையும் துவங்கியது என்று பிரபு வருத்தத்தோடு நினைத்தான்.

“உன் அப்பா என்னிடம், பயன்படுத்தப்படாத உங்கள் பழைய வீட்டின் பின்புறம் செல்ல சொன்னார். அப்போது தான் அங்கே உங்கள் இருவரையும் பார்த்தேன். நீங்கள் நடந்து கொண்ட விவாதத்தில் இருந்து எனக்கு நல்ல புரிந்தது உங்களுக்கு இடையே ஏற்கனவே கள்ள உறவு தொடங்கி விட்டது என்று.”

2 Comments

Add a Comment
  1. Super Saravana…

  2. சூப்ப்ர்ஹீரோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *