இவன் மனது படக் படக் என்று அடித்து கொண்டது.
கதவு தாள்பாள் விலகும் சத்தம்.
அன்பு மனசுக்குள் எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம்.
கதவு மெதுவாக உள் வாங்க,
திறந்தது அம்மா.
சிறிது ஏமாற்றமா இருந்தாலும்
அம்மாவை பார்த்தவுடன் தாய் பாசம் பொங்க
அம்மாவை அப்படியே கட்டி பிடிச்சி முத்தம் கொடுக்க
இவனை பார்த்த அவன் அம்மாவோ சந்தோஷத்தில் திக்கு முக்காடி போனாள்
அம்மாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய பிறகு
அன்பு கேட்ட முதல் கேள்வி
கல்யாணி எங்கேம்மா
அவனை ஆச்சர்யமா பார்த்த அவன் அம்மா
அவ வேலைக்கு போறா, உனக்கு தெரியாதா,
சுதாரித்த அன்பு,
ஆமா ஆமா, மறந்துட்டேன் மா,
சமாளித்தான்.
அம்மாவுக்கு வாங்கிய பொருட்களை கொடுத்து மகிழ்ந்தான்.
தங்கைக்கு வாங்கிய பொருட்களையும் அம்மாவிடம் காண்பித்தான்.
தங்கை நித்யா கல்லூரிக்கு போயிருக்கிறாள்.
பிறகு தன்னுடைய ரூமிற்கு சென்று உடைகளை களைந்து
பயண களைப்பு தீர குளித்து
சிறிது தூங்க நினைத்து படுக்கையில் சாய்ந்தான் அன்பு.
அவன் படுக்கை அறையை நெடுநாள் கழித்து பார்க்க,
கட்டிலின் பக்கத்துலே இருந்த சிறிய மேஜையை பார்த்தவுடன் அவன் முகம்
மாறியது.
அங்கே இருந்த டேபிள் போட்டோ, அவனும் கல்யாணியும் சேர்ந்து எடுத்த போட்டோ, குப்புற மடக்கி வைக்க பட்டிருந்தது.
முதலில் அவன் முகம் மாறினாலும், தவறுதலாக கீழே விழுந்த்துருக்கும்
என்று நினைத்து அதை எடுத்து நிமிர்த்தி வைத்தான்.
அதில் கல்யாணி அழகிய புன்சிரிப்புடன் போஸ் கொடுத்திருந்தாள்.
அவளை சிறிது நேரம் உற்று நோக்கிய அன்பு, அப்படியே கண் அசர தூங்கி விட்டான்.
முழிப்பு வர, எழுந்து உட்கார்ந்தான்.
நேரத்தை பார்க்க மதியம் ரெண்டு.
வயிறு பசி பசி னு கூவியது.
வெளியில் வர, அம்மா டிவி பார்த்து கொண்டு இருந்தாங்க
டைனிங் டேபிளில் பார்க்க, அணைத்து பாத்திரமும் அடுக்கி மூடி வைக்க பட்டு
இருந்தது.
இவன் எழுந்து வந்த சத்தத்தை பார்த்து, திரும்பிய அம்மா,
வந்துட்டியாடா, உனக்காகத்தான் காத்துக்கிட்டுருக்கேன்.
நீங்க சாப்பிடலையாமா
உன்ன விட்டுட்டு எப்படிடா சாப்பிடுவேன்.
அம்மாவின் அன்பை நினைத்து நெகிழ்ந்தான் அன்பு.
(அம்மாவிற்கு ஈடு வேறு ஒரு உறவு உலகத்தில் கிடையவே கிடையாது.)
அம்மாவிடம் பேசிக்கொண்டே சாப்பிட்டான்.
கல்யாணி வேலைக்கு போறது உனக்கு தெரியும்தானே, அம்மா கேட்க
திடீர் கேள்வியால் தடுமாறிய அன்பு,
தெரியும்மா, ஏன் கேட்கறீங்க,
இல்லடா, காலையில கல்யாணி எங்கேனு கேட்டியே, அதான்.
இல்ல, மறந்து கேட்டுட்டேன். மறுபடியும் சமாளிப்பு
சாப்பிட்டு முடித்தவுடன் மறுபடியும் தன்னுடைய ரூமிற்கு வந்து உட்கார்ந்தான்.
அவன் மனசில் யோசனை.
கல்யாணி வேலைக்கு போவதை பற்றி தன்னிடம் ஏன் ஒன்றுமே சொல்லல.
யோசித்து பார்த்தான். குழப்பம்.
சரி, நான் திட்டுவேன்னு சொல்லிருக்க மாட்டா. சமாதான படுத்திகிட்டான்.
இந்த தடவை ரூமை பார்வையால் அலச,
ஒன்றும் புதுசா தெரியல.
மீண்டும் ஒரு குட்டி தூக்கம்.
மாலை 5 மணிக்கு தங்கச்சி வர மீண்டும் வீடு கலை கட்டியது.
வாயாடி, தொண தொனனு பேசிக்கிட்டே இருப்பா.
அம்மா இல்லாத போது, தங்கச்சியிடம்
உங்க அண்ணி எவ்வளவு நாளா வேலைக்கு போறா,
நிலைமையை புரிந்த கொண்ட நித்யா,
அண்ணா, கோச்சிக்காதே,
நாலு மாசமா போய்கிட்டு இருக்காங்க, நித்யா சொல்ல
அன்பு, ஏண்டி என்கிட்ட சொல்லல
நித்யா, நீ திட்டுவியோன்னு தான் சொல்லல.
அன்பு அத்தோடு விட்டு விட்டான்.
இடையில் நித்யா யாருக்கோ போனில் மெதுவா பேசிகிட்டு இருந்தா.
அன்பு கவனித்தும் கண்டுக்கல.
மாலை ஏழு மணிக்கு கல்யாணி வீட்டுக்கு வர,
வீட்டுக்கு வந்த கல்யாணி எதிர்பாராமல் அங்கு நின்ற தன்னுடைய கணவனை
பார்க்க,
அன்பு அவள் முகம் ஒரு நொடி அதிர்ச்சி ஆகி பின்பு
மலர்ந்ததை கவனிக்க தவறவில்லை.
கல்யாணி சந்தோஷத்தால், கணவனை கட்டி பிடிச்சி அழுதா.
பாச பிணைப்பு.