கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 39 12

‘நான் சொல்றது எல்லாத்தையும் அவன் நம்ம மதத்தோட சம்பந்தபடுத்திப் பாக்கறான்; நம்ம குலத்தவர்கள் சொல்லிக்கற போலியான, பாசாங்கான பெருமைன்னு அவன் நினைக்கறான்; நாம் கும்பிடற பெருமாளோட சம்பந்தப் படுத்திக்கறான்..’

“என்னச் சொல்றீங்க…எனக்குப் புரியலே” பத்மா முகத்தில் கேள்விக்குறியுடன் அவரைப் பார்த்தாள்.

‘நான் சொல்றது மதத்தோட சம்பந்தப்பட்டது அல்ல. என் குலத்தோடு சம்பந்தப்பட்டது அல்ல. அவனோட உடலோடு சம்பந்தப்பட்டது. அவனுடைய ஆரோக்கியத்தோடு சம்பந்தப்பட்டது. அவனுடைய தினசரி வாழ்க்கையோட சம்பந்தப்பட்டது. வருங்காலத்துல அவனுடைய இல்லற வாழ்க்கையோட தொடர்பு கொள்ளப்போவது…”

“அண்ணா.. உங்க வயசுக்கு இருக்கற முதிர்ச்சியை இருபத்து மூணு வயசு பிள்ளைகிட்ட, எதிர்பாத்தா முடியுமா?” உஷா அவரை சமாதானப்படுத்திப் பார்த்தாள்.

“கண்ணு… உஷா… நீயும் கல்யாணம் பண்ணிக்கிட்டவ, ஒரு ஆம்பளை கூட வாழ்ந்தவ… நான் சொல்றதுல இருக்கற அர்த்தம் உனக்கு நல்லாப்புரியும்… இவன் ஆசையா பொண்டாட்டிக்கிட்ட போவான்.. அவ இவன் வாய்லேருந்து வர்ற சிகரெட் நாத்தத்தை தாங்க முடியாம, மூஞ்சை திருப்பிக்குவா… அங்கதான் ஆரம்பிக்கும் குடும்பத்துல பிரச்சனை… இதையெல்லாம் நான் இவன் கிட்ட இப்ப பேச விரும்பலை…

“அண்ணா….”

“அவன் உன் மடியிலே வளந்தவன்… கொஞ்சமாவது உன் பேச்சைக் கேக்கறான்… அவனுக்குப் புரியறமாதிரி சொல்லு… எனக்கென்ன அவன் கிட்ட விரோதம்…?”

பிள்ளைக்கு அம்மாவை விட அத்தையின் மேல் கொள்ளைப் பிரியம். பாசம். உயிர். உஷா முகம் சுருங்கி ஒரு முறைப் பேசினால், நாற்பது தடவை அவளிடம் மன்னிப்பு கேட்க்கும், பிள்ளை.

சமையலறையில் சென்று இடுப்பைக் கட்டிக்கொள்ளும்.. கொல்லையில் சென்று அத்தையின் தோளில் சாய்ந்து கொள்ளும்.. அத்தே… இனிமே நான் தப்பு பண்ணமாட்டேன்… என் கிட்ட பேசு அத்தே… பிள்ளை குழைவான்.. கெஞ்சுவான்… மிஞ்சுவான்… உஷாவும் கடைசியில் அவன் கெஞ்சலிலும், கொஞ்சலிலும் மசிந்து விடுவாள்.

பிள்ளைக்கு இன்று இருபத்தாறு வயசாகிறது. தானாடாவிட்டாலும் தன் சதை ஆடுமே…! நேரில் அவனைப் பார்க்கும் போது முகத்தை திருப்பிக்கொள்ளும் ராகவன், அவன் நகர்ந்ததும், பிள்ளையை ஓரக்கண்ணால் பார்த்து, அவன் வளர்ச்சியைப் கண்டு பூரித்துப் போவாரே ஒழிய, தன் சபதத்தை அவரும் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை.

பிள்ளையும் இரத்தச் சூட்டில், தகப்பன் சொல்லும் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை என்ற போதிலும் தன் தகப்பன் தன் மீது வைத்திருக்கும் அன்பையும், பாசத்தையும், பற்றி நன்றாக அறிந்திருந்தது. தன் தகப்பனுக்கு பிடிக்காத காரியங்களையும் செய்யக்கூடாது என மனதுக்குள் நினைக்கும் பிள்ளை, நண்பர்களைப் பார்த்தவுடன் சிகரெட்டை வாய்க்குள் திணித்துக்கொண்டது. நண்பர்கள் சிரிப்பார்கள் என்ற ஒரே காரணத்துக்காக, பத்து நாளைக்கு ஒரு முறை அவர்களுடன் நடத்தும் தீர்த்தவாரியையும் நிறுத்த முடியமால் தவித்தது.

பத்து… நான் எப்பவோ பண்ண பூர்வ ஜென்ம புண்ணியம்… நீ எனக்கு ஆத்துக்காரியா வந்திருக்கே… என்ன பாவம் பண்ணியிருக்கேனோ? இப்படி ஒரு புள்ளை பொறந்து, என் மனசுக்கு ஒவ்வாத காரியத்தை பண்றதுன்னே சத்தியம் பண்ணிகிட்டு அலையுது.

ராகவன் மனதுக்குள் அங்கலாய்த்துக் கொள்வாரே தவிர, தன் மனவருத்தத்தை, தன் மனைவியின் எதிரிலோ, தங்கையின் எதிரிலோ கான்பித்து அவர்கள் மனதை வீணாக நோக அடித்ததில்லை.

“காலங்காத்தால என்ன யோசனை அண்ணா…? போய் அண்ணியை எழுப்புங்கோ.. பால் ஆறிப்போவுது… ஒரு வாய் காஃபி குடிச்சா, அவங்க தலைவலி, சோர்வு எல்லாம் தன்னாலப் பறந்து போயிடும்…”

“ம்ம்ம்… கீசரை கொஞ்சம் ஆன் பண்ணும்ம்மா…”

‘தண்ணீ சூடா இருக்கு…”

“இன்னக்கு வர்றானா அவன்?” கேட்டுக்கொண்டே ராகவன் எழுந்து தன் படுக்கையறைக்குள் நுழைந்தார்.

“வெளியியல வேஷம் போட்டுக்க வேண்டியது.. ஆனா மனசுக்குள்ள புள்ளை மேல ஆசையை வெச்சுக்கிட்டு கெடந்து தவிக்க வேண்டியது… இதெல்லாம் வீட்டுல இருக்கற பொம்பளைங்க எங்களுக்கு புரியாமலா இருக்கு…?” அடுக்களையில் நுழைந்த உஷா மனசுக்குள் சிரித்தாள்.