கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 39 11

‘அவன் புகை விடறதை பாத்துட்டு சும்மாவா வந்தீங்க..?’ பெற்றவள் பத்மா கொதித்தாள்.

‘தோளுக்கு மேல வளந்தவன் அவன்; என் தோழன் அவன்; அவனை எப்படி நான் அடிச்சிப் புத்தி சொல்றது?’ ராகவன் மனைவியிடம் வாதம் செய்தார்.

‘நெடுக வளந்துட்டாலும் அவன் இன்னும் குழந்தைதானே… அறியாத பருவம், புரியாத வயசு, கூடாத நட்பு, தப்பு பண்ணிட்டான். என்னப்பண்றது…?விளையாட்டாப் பண்ணாலும், உடம்பைக் கெடுத்துக்கறானே, நான் அவனுக்கு புத்திசொல்றேன்…’

உஷாதான் அப்பனுக்கும் பிள்ளைக்கும் நடுவில் பஞ்சாயத்து பண்ணி வைத்தாள். அப்பாவிடம், அவர் முகத்தை நிமிர்ந்து பார்க்காமல்,
“சாரி’ சொன்ன பிள்ளை, தெரு முனைக் கடையை விட்டு விட்டு, நாலு தெரு தள்ளி சென்று, கண் மறைவாக சிகரெட் பிடிக்க ஆரம்பித்தது.

பிள்ளையின் இருபத்து நான்காவது வயதில், அவனே சம்பாதிக்க ஆரம்பித்தவுடன், தன் மகன்
“தீர்த்தவாரியும்’ நடத்த ஆரம்பித்துவிட்டான், அதோடு நிற்காமல்,
“ஜலகீரிடையின்” போது ஊர்வன, பறப்பன என்று எந்த பேதமுமில்லாமல், கண்டதை தின்னவும் தொடங்கிவிட்டான் என்று தெரிய வந்தபோது, ராகவனின் மனம் கனத்தது.

‘இதெல்லாம் நல்லதுக்கு இல்லே… நம்ம குடும்பத்துல யாரும் இந்த காரியங்களை இதுவரைக்கும் பண்ணதில்லே… குடும்ப பழக்கம் வழக்கமின்னு இருக்கு… அதை பிடிக்கலைன்னாலும், கடைபிடிச்சுத்தான் ஆகணும்’ ஒரு நாள் பதட்டமில்லாமல், நிதானமாக பிள்ளையை நடுக்கூடத்தில் உட்க்கார வைத்து பிள்ளைக்கு புத்தி சொன்னார்.

‘எல்லாத்துக்கும் ஒரு உபதேசம்… உங்கக் கட்டுப்பாடு, உங்க லெக்சர் இதெல்லாம் எனக்கு பிடிக்கலை.. நானும் படிச்சிருக்கேன்… நானும் சம்பாதிக்கறேன்.. என் கைக்காசை போட்டு குடிக்கறேன்… உங்க பேரு கெட்டு போவுதுன்னு நீங்க நெனைச்சா, நான் வீட்டை விட்டேப் போயிடறேன்..’ பிள்ளை வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது…

‘டேய்… யாருகிட்ட என்னப் பேசறோம்ன்னு யோசிச்சுப் பேசுடா’ அத்தை உறுமியதில் அந்த நேரத்துக்கு அடங்கியது.

இதற்கு மேல் தன் பிள்ளையிடம் பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்று அவர் நினைத்தார். தன் மனதை கல்லாக்கிக் கொண்டு, இனி அவனிடம் பேசுவதில்லை என்று மனசுக்குள் ஒரு சபதத்தை எடுத்துக்கொண்டார். ஒரு வருடமாகிவிட்டது. அப்பனும் பிள்ளையும் நேருக்கு நேர் பேசிக்கொள்வது இல்லை. இந்த முடிவால் மனம் நொந்து போனவர்கள் பெற்றவளும், வளர்த்தவளும்தான்.

அண்ணா… இது தப்பு… பெத்தவனும், பிள்ளையும், இப்படி பரம வைரி மாதிரி ஒரே வீட்டுல இருந்துகிட்டு ஒருத்தர் கிட்ட ஒருத்தர் பேசாம மொறைப்பா இருந்தா எப்படீ? பேசாம இருந்து அவனை நீங்க கொல்றதைவிட, கூப்பிட்டு ரெண்டு அறை விடுங்க அண்ணா… அப்படியாவது அவன் திருந்தட்டும்… உஷா அண்ணணுக்கு எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள்.

ராகவன் ஒரு கருங்கல். எல்லா விஷயத்திலும் கல்லைப் போல் பொறுமையைக் கடைபிடிப்பவர்.

‘பத்மா … உன் பிள்ளையை நான் அடிச்சு அதனால அவன் திருந்தக்கூடாது. அவனா உணர்ந்து திருந்தணும்…’

ஒரு வரியில் பேச்சை முடித்துவிட்டு எழுந்து போய்விட்டார். இது அவரது போக்கு. இந்த கருங்கல்லுக்கு என்னைக்கு கோபம் வர்றது…? என்னைக்கு எங்கப் புள்ளை திருந்தறது…? பத்மாவும், உஷாவும் தங்களுக்குள் உருகிக்கொண்டார்கள். மருகிக்கொண்டார்கள்.

ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு நியமம் இருக்கிறது. ஒரு தர்மம் இருக்கிறது. அந்தந்த காரியங்களை அந்தந்த முறையில்தான் செய்யணும் என்று நம்புபவர் ராகவன்.

“உஷா, என் பிள்ளையை சிகரெட் பிடிக்காதே, குடிக்காதேன்னு, நான் சொல்றது என் பேரு கெட்டுப்போகுதுன்னு இல்லே..’

‘ம்ம்ம்…”