கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 39 11

பத்து நாளில், உஷாவை நிச்சயம் பண்ணி, கல்யாணம் நடந்து, சாந்திக்கல்யாணத்தையும் முடித்துக்கொண்டு, பெரியவர்களின் ஆசியுடன் மனைவியை தன்னுடன் அழைத்துக்கொண்டு விமானம் ஏறிப் பறந்தான், கிருஷ்ணன்.

கிருஷ்ணனுக்கு எல்லாவற்றிலும் அவசரம். எட்டுமாதத்தில் பிறந்தவனாம் அவன். அவசரமாக கார் வாங்கினான். அவசரமாக பிறந்த ஊரில் உஷாவின் பெயரில் வீடு வாங்கினான். தன் பெயரில் பேங்கில் இருந்த பிக்சட் டெப்பாஸிடுகளை, ரொக்கத்தை மனைவியின் பேரில் மாற்றினான். கட்டிய மனைவியிடம் இரவு பகல் என்று இல்லாமல் சந்தோஷமாக இருந்தான்.

கிருஷ்ணன் ஒரு விஷயத்தில் மட்டும் அவசரம் காட்டவில்லை. பிள்ளை பெற்றுக்கொள்வதை மட்டும் தள்ளிப்போட்டான். உஷா வெட்கத்தைவிட்டு
“எனக்கு குழந்தை வேணுங்க…’ கேட்டவளிடம் ஒரு ரெண்டு வருஷம் ஜாலியா இருப்போமே என்று சிரித்தானாம்…! பாவி… பாவி..!!?

கான்பூரில் மீட்டிங் என்று காலையில் சிரித்துக்கொண்டே, தெரு வாசலில் மனைவியை முத்தமிட்டுவிட்டு போனவன் மீண்டும் வீட்டுக்குள் கால் வைக்கவில்லை. நடு ஆகாயத்தில் தீயை முத்தமிட்டு இருக்கிறான். அன்று எதிர்பாராமல் வெடித்து சிதறி, எரிந்து விழுந்த, விமானத்தில் அவனும் பயணம் செய்தானாம். இருபத்து ரெண்டு வருடங்களுக்கு முன் விமான விபத்தில் இறந்து போன தன் மைத்துனனின் முகம் இப்போது ராகவனின் நினைவுக்கு வரவில்லை.

அவன் குரலும், பேச்சுகளும், மட்டும் பசுமையாக ராகவனின் மனதில் இன்றும் அழியாமல் இருந்தது. அவனை எப்போது நினைத்தாலும் ராகவனின் மனதுக்குள் மட்டுமல்லாமல், கண்களிலும் இன்றும் கண்ணீர் ததும்பிவிடும். கடைசியா அவன் முகத்தைக்கூட ஆசைத் தீரப்பாக்க குடுத்த வெக்கலையே? கிருஷ்ணங்கறவனை, சாம்பலா, கரியாத்தானே, மூட்டையாத்தானே கட்டி கொடுத்தானுங்க.. இதுக்குத்தான் இப்படி அவசரப்பட்டியாடா பாவி… கிருஷ்ணனை மனதுக்குள் திட்டுவான், ராகவன்.

கிருஷ்ணா.. கல்யாணம் ஆன ரெண்டு வருஷத்துல எங்க வீட்டுக் கொழந்தையை தனியா தவிக்க விட்டுட்டு போறதுக்கு உனக்கு எப்படீடா மனசு வந்தது? ராகவன் அழுது அழுது புலம்பினான். ஒரு வருடம் தன் மனைவி பத்மாவிடம் கூட மனம் விட்டு அவன் பேசவில்லை.

“பத்மா.. உஷா இனிமே நம்ம வீட்டுலதான் இருப்பா… இவ என் தங்கச்சி இல்லே… இனிமே உன்கூடப் பொறந்தவன்னு நினைச்சுக்கோ…” ராகவன் தன் மனைவியின் கைகளைப் பிடித்துக்கொண்டு அழுதான். ஒரு வார்த்தை பேசாமல், பத்மா, தன் கணவன் ராகவனின் கண்ணைத் துடைத்தாள். தன் தோளுடன் தன் கணவனை அணைத்துக்கொண்டாள். பத்மாவை தன் மறு தோளோடு இறுக்கிக்கொண்டாள்.

இன்று வரை உஷாவுக்கும், பத்மாவுக்கும் நடுவில், எந்தக் காரணத்துக்காகவும், எந்த புகைச்சலும் வந்ததேயில்லை. அவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு இருந்ததை ராகவன் என்றுமே பார்த்ததில்லை. இன்று வரை அந்த வீட்டில் எந்த விஷயத்திலும் உஷாவின் முடிவைக் கேட்க்காமல் எந்த காரியமும் நடந்ததில்லை. உஷாவின் மடியிலும், தோளிலும், மார்பிலும்தான், வளர்ந்தான், ராகவனின் பிள்ளை.
ராகவன் மாநிறம். எப்போதும் முடியில்லாமல் சுத்தமாக இருக்கும் சிவந்த முகத்தில் இனிமையான புன்னகையின் கீற்று படர்ந்திருக்கும். தினமும் தவறாமல் சவரம் பண்ணிக்கொள்வதால், தாடையின் மழமழப்பில் கரும் பச்சை வெயிலில் மின்னும். வீட்டிலிருந்து வெளியில் கிளம்பும் போது கருப்பு வண்ண கூலிங் கிளாஸ் முகத்தில் குடியேறும்.

ராகவனை கல்யாணம் பண்ணிக்கொண்டு அவருடன் குடித்தனம் பண்ண வந்த, இளம் பெண் பத்மாவுக்கு தன் கணவர் மீசையோடு இருந்தால் இன்னும் அழகாக இருப்பார் என்ற எண்ணம் மனதுக்குள் இருந்தது.

‘ஏன்னா… மீசை வெச்சுக்கோங்களேன் நீங்க..’ தனித்திருக்கும் போது தன் மனசின் ஆசையை கட்டிக்கொண்டவனிடம் ரகசியமாகச் சொல்லிப்பார்த்தாள். மனைவியின் எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்த ராகவன், தன் மூக்கின் கீழ், உதடுகளுக்கு மேல், கரு கருவென மீசையை மட்டும், வளர்த்து அவள் ஆசையை நிறைவேற்றவில்லை.