கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 39 12

“ஹூம்ம்ம்ம்…” ராகவன் ஒரு நீண்டப் பெருமூச்சை வெளியேற்றினார். தன் தங்கையின் முகத்தை மீண்டும் ஒருமுறை நிமிர்ந்து பார்த்தார்.

உஷாவின் நெற்றி வெறிச்சோடியிருந்தது. உற்றுப்பார்ப்பவர்களால் மட்டுமே இனம் காணக்கூடிய ஒரு நிரந்தர சோகம் அவள் விழிகளில் குடியேறியிருந்தது. அவளுடைய வெடிச்சிரிப்பும், உற்சாகமான கூச்சலும், அவளை விட்டு தொலைந்து போய் இருபது வருடங்களுக்கும் மேலாகியிருந்தது. இந்த நாட்களில் பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போயிருந்தது. கேட்டக் கேள்விக்கு மட்டுமே பதில் தருவது அவள் குணமாக ஆகிவிட்டிருந்தது.

விடியற்காலையிலேயே எழுந்து குளித்துவிட்டிருந்த உஷாவின் ஈரத் தலையிலிருந்து மெலிதாக வழிந்த ஈரம், அவள் தோள்பட்டையை நனைத்திருந்தது. இன்னும் உடல் கட்டு தளராத, மேனியின் அழகு குறையாத, முகத்தில் பொலிவு மாறாதிருந்த, தன் நாற்பத்தைந்து வயது தங்கையின் காலியான நெற்றியைக் கண்ட ராகவனின் மனசு ஒரு நொடி கனத்துப்போனது. மனம் வேகமாக பின்னோக்கி ஓடியது.

தூங்கிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுவன் ராகவனை எழுப்பிய அவன் பாட்டி, பஞ்சு குவியலாக கிடந்த ஐந்து நாள் குழந்தையை அவன் மடியில் கிடத்தினாள்.

‘உன் தங்கச்சி பாப்படா… கெட்டியாப் புடிச்சுக்கோ… சொல்லுடா பாப்பாவுக்கு என்ன பேரு வெக்கலாம்’ ராகவனைப் பார்த்து பொக்கை வாயை திறந்து சிரித்தாள் கிழவி.

“பாட்டீ… இந்த குட்டிப்பாப்பா.. இனிமே நம்ம வீட்டுலதான் இருக்குமா? ஆஸ்பத்திரியிலேருந்து காசு குடுத்து வாங்கியாந்துட்டீங்களா?” முகத்தில் பொங்கும் வியப்புடன் கேட்டான் ராகவன்.

“ஆமாம்… உன் பொம்மையெல்லாம் இனிமே இவளுக்குத்தான்… குடுப்பியா… அப்பத்தான் உன் கூட விளையாடுவா… உன் கூட பேசுவா… சிரிப்பா… ஓடிவருவா…”

“ம்ம்ம்… குடுப்பேன்… பாட்டீ… பாப்பாவை எத்தினி ரூபா குடுத்து வாங்கீனீங்க…” கண்கள் விரிய ஆர்வத்துடன் கேட்டான் ராகவன்.

“ஏண்டா…?” பாட்டி திகைத்தாள்.

“என் உண்டீலே பத்து ரூபா வெச்சிருக்கேன்.. எனக்கு இன்னொரு தங்கச்சிப் பாப்பவும் வேணும் பாட்டீ.. நானும் நீயும் போய் வாங்கிட்டு வரலாமா?”
குழந்தை ராகவனின் பேச்சைக் கேட்டு சுற்றியிருந்தவர்கள் சிரித்தார்கள். அவர்களின் சிரிப்பின் அர்த்தம் அப்போது அவனுக்குப் புரியவில்லை

“பாப்பா அழகா இருக்காளாடா…?” பெற்றவள், தன் மகனை ஒரு கையால் இழுத்து தன் பால் வடியும் மார்புடன் அணைத்துக்கொண்டாள். பாப்பா மேல் அடித்த பால் வாசனை அம்மா மேலும் அடித்தது. ராகவன் தன் தாயின் முகத்தையும், குழந்தையின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தான்.

“பாப்பா… உன்னாட்டாமே செவப்ப்பா அழகா இருக்காம்மா… மெத்து மெத்து இருக்காம்மா… கண்ணைத் தொறந்து என்னைப் பாக்க மாட்டாளா… அம்மா… பாப்பாவுக்கு உஷான்னு பேரு வெக்கலாம்மா…”

“உஷாங்கறது யாருடா?” பக்கத்தில் நின்றிருந்த அப்பா உரக்கச் சிரித்தார்.

“ஒண்ணு
“பீ’ செக்ஷன் லீடர் பேருப்பா…” சிறுவன் ராகவன் முகத்தில் பெருமிதமும் வெட்க்கமும் கலந்திருக்க, கலகலவென சிரித்தான்..”

குழந்தை உஷா என்ற பெயராலேயே அழைக்கப்பட்டாள். இருபத்து இரண்டு வயதில் அழகிலும், குணத்திலும், பத்தரை மாத்து தங்கமாக ஜொலித்தாள் உஷா. படிக்கும் காலத்தில், பள்ளியிலும் சரி, கல்லூரியிலும் சரி, எப்போதும் முதல் ரேங்கில் வருவது அவள்தான்.

பேச்சு போட்டியில், பாடுவதில், கவிதை எழுதுவதில் முதலிடம் அவளுக்குத்தான். மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் எம்.எஸ்ஸி. கெமிஸ்ட்ரியில் முதல் ரேங்க் வாங்கினாள். பட்டம் வழங்கும் விழாவுக்கு டில்லியிலிருந்து வந்த பிரதமரிடமிருந்து கோல் மெடல் வாங்கிக்கொண்டாள். மறு நாள் ஹிண்டுவில் அவள் போட்டோவைப் பார்த்த குடும்பம் மொத்தமும் பூரித்துப்போனது. பெண்ணை தலையில் வைத்து கொண்டாடியது.

டாக்டர் ராமகிருஷ்ணன், டெல்லி யூனிவர்சிட்டியில் கெமிஸ்ட்ரி டிபார்ட்மெண்டில் அஸிஸ்டன்ட் புரொஃபஸராக இருந்தவன், கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு இருந்தவன், பத்து நாள் லீவில் மெட்ராஸ் பெற்றவர்களைப் பார்க்க வந்திருந்தான். மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் நடந்த இரசயானம் சம்பந்தமான கண்காட்சியில் பட்டாம்பூச்சியாகத் திரிந்த உஷாவைப் பார்த்தவன், தன் மனதை அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசமால், அவள் முகஅழகிலேயே பறிகொடுத்தான்.

உஷாவின் வீட்டு முகவரியை எங்கிருந்து, எப்படி சேகரித்தானோ… அவளைப் பார்த்த இரண்டாவது நாள் வீட்டுப் பெரியவர்களுடன் உஷாவின் பெற்றொர்கள் முன் வந்து நின்றான். கட்டினால் இவளைத்தான் கட்டுவேன் என ஒரு காலில் நின்றானாம், கிருஷ்ணன். இருவரின் இனமும் ஒத்துப்போயிருந்தது. அவர்கள் மனமும் ஒத்துப் போனது. எல்லாம் காஞ்சி வரதனின் அனுக்கிரகம் என மனதுக்குள் மகிழ்ந்தாள் உஷா. ஜோடிப் பொருத்தத்தைப் பார்த்து மனசில் குதுகலமானான் ராகவன்.