கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 39 11

“அவன் இப்ப எதுவுமே அறியாத பிள்ள இல்லேதான்.. ஊர்ல எல்லாப் பிள்ளைகளும் அப்படித்தான் இருக்கு… அதுக்கு நம்மப் புள்ளை எவ்வளவோ தேவலை… உங்க மேல அவன் உயிரையே வெச்சிருக்கான்… நம்மப் புள்ளைக்கு என்னக் கொறை; அவன் கொஞ்சம் அப்படி இப்படின்னு இருக்கான்…!!

அவனுக்குன்னு ஒருத்தி வந்தா அவ அவனைத் திருத்திட்டு போறா; அவன் எதையோ என்னைக்கோ பைத்தியக்காரத்தனமா உளறினான்னா, நீங்க அதை மனசுல வெச்சுக்கிட்டு, நம்மக் குழந்தையை அவதாரம்ன்னு நீங்களே சொன்னா எப்படீ?” உஷா அண்ணனிடம் சிணுங்கினாள்.

“நீ பாத்தியாம்மா… அந்த பொண்ணுங்க போட்டோவை…”

“பாத்தேன்.. ரெண்டு பேருமே நன்னா இருக்காளுங்க மூக்கும் முழியுமா… அந்த லலிதாங்கற பொண்ணு இவனுக்கு நல்லப் பொருத்தமா இருப்பான்னு எனக்குத் தோன்றது… அண்ணிக்கும் அந்தப் பொண்ணை புடிச்சிருக்கு… நீங்க என்ன சொல்றீங்க..?”

“அவனுக்கு புடிச்சா சரிதான்… கூட இருந்து குப்பைக் கொட்டப் போறவன் அவன்; எனக்கென்ன இதுல தனியா ஒரு விருப்பம்…! ஜாதகம் பொருந்துதான்னு பாக்க வேண்டாமா..? யார்கிட்டவாவது காட்டீனீங்களோ?”

“ஆமாம்… தாத்தாவும் அப்பாவும் கட்சி கட்டிண்டு, எனக்கும்தான் ஜாதகம்.. பொருத்தம் எல்லாம் பாத்தாங்கா… என்ன ஆச்சு… ரெண்டு வருஷத்துல ஒத்தையா திரும்பி வந்துட்டேன்.. பெருமாளை மனசுல நெனைச்சுக்கிட்டு மேல ஆகவேண்டியதை பாருங்கண்ணா…” உஷாவின் குரல் தழைந்தது. ராகவன் முகத்தை திருப்பி தன் தங்கையைப் பார்த்தார்.

உஷா, சராசரி தமிழ் பெண்களைவிட சற்றே உயரமாக இருந்தாள். அவளுடைய உயரத்தால் தேகம் மெலிந்திருப்பதைப் போல் தோன்றினாலும் வலுவான உடல். நோய் நொடி என்று எப்போதும் படுத்ததில்லை. எட்டு மணி நேரம் தொடர்ந்து அவளால் தன் அலுவலகத்தில் வேலை செய்யமுடிந்தது. ஆஃபீஸிலிருந்து வீட்டுக்கு வந்த பின்னும் சளைக்காமல், அண்ணியுடன் சேர்ந்து கொண்டு வீட்டு வேலைகளையும் இழுத்து போட்டுக்கொள்ள முடிந்தது.

அண்ணி… ஆஃபீசுல எனக்கு வேலை செய்யறது
“போர்’ அடிக்குது. கண்டவனுக்கும், மரியாதை தெரியாதவனுக்கெல்லாம்,
“யெஸ் சார்’ சொல்ல வேண்டியதா இருக்கு… எனக்கென்னா புள்ளையா குட்டியா; யாருக்காக மாங்கு மாங்குன்னு நான் சம்பாதிக்கணும்… ஒரு வேளை சோறு என் அண்ணி நீங்க போடமாட்டீங்களா? போன வருடம் தீடிரென ஒரு நாள் வேலையை விட்டுவிட்டு வீட்டிலேயே இருக்க ஆரம்பித்தாள், உஷா.

சிவந்த நிறம். தீர்க்கமான மூக்கு. வலுவான தாடைகள். சிரித்தால் அழகாக குழி விழும் கன்னங்கள். வெண்மையான சுருக்கமில்லாத கழுத்து. காதில் சின்ன தோடு, கைகளில் ரெண்டு ஜோடி மெல்லிய பொன் வளையல்கள். கழுத்தில் ஆடும் மெல்லிய தங்கச்சங்கிலி. சங்கிலியின் நுனியில் ஒரு சிறிய பெண்டன்டில் கணவன் கிருஷ்ணனின் போட்டோ. சிம்பிளாக இருப்பாள் உஷா.

“என்னாச்சு அண்ணா…” உஷா அண்ணனின் தலையை மெல்ல வருடினாள். ராகவன் சட்டென தன் தலையைக் கவிழ்த்துக்கொண்டார். அவருடைய கண்கள் கலங்கியிருந்தது.

“அந்தப் பாவியோட நினைப்பு வந்திடிச்சி…” அவர் குரல் கரகரத்தது.

“எனக்கு இப்பல்லாம அவர் நெனைப்பு வரதேயில்லே…” உஷாவின் முகம் கல்லாகியிருந்தது.