கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 37 6

கரகரப்பாக வந்த சம்பத்தின் குரலில் போலி என்பது எள்ளளவும் இல்லை. பாசாங்கு சுத்தமாக இல்லை. உண்மையை அவன் பேசிக்கொண்டிருந்தான் என்பது அவன் கண்களில் தெரிந்தது. அவன் குரலில் ஒரு தீர்மானம், முழுமையான உறுதி இருந்தது.

“ம்ம்ம்…” இதற்கு மேல் அவனிடம் என்னப் பேசுவது என்று தெரியாமல் திகைத்தாள், சுகன்யா.

“சுகா, நீ என்னை காதலிக்க முடியாதுன்னு சொல்லு… என்னால அதை தாங்கிக்க முடியும்… செல்வாவை நான் உயிருக்கு உயிரா காதலிக்கறேன்… எங்களுக்கு நிச்சயம் பண்ணியாச்சு.. இதெல்லாம் நல்லாத் தெரிஞ்சும் என் கிட்ட நீ எப்படி இந்த மாதிரி
“ஐ லவ் யூ’ ன்னு ஃப்ரப்போஸ் பண்ணலாம்ன்னு என் கன்னத்துல ஓங்கி ஒரு அறை விடு… என்னால அதை தாங்கிக்க முடியும்…”

“சம்பத்… பிளீஸ்… சம்பத்.. என் மனசையும், என் நிலைமையையும் நீங்க கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க… அது போதும் எனக்கு… நான் எதுக்கு உங்களை அறையணும்? இப்படியெல்லாம் நீங்க பேசாதீங்க… என் மனசை புண்படுத்தாதீங்க…”

“சுகா, ப்ளீஸ் … நான் உன்னை கெஞ்சிக் கேட்டுக்கறேன்.. நீ தயவு செய்து எந்த பொண்ணையும் எனக்கு சிபாரிசு பண்ணாதே.. அதை மட்டும் என்னாலத் தாங்கிக்கமுடியாது…” சம்பத் தீவிரமான ஒரு பார்வையை அவள் மேல் எறிந்தான்.

“சம்பத்… போதும்… போதும்.. நீங்க அர்த்தமில்லாம பேசறதை கொஞ்சம் நிறுத்தறீங்களா?” சுகன்யாவும் தன் குரலில் சற்றே கடுமையைக் கூட்டினாள்.

“ப்ளீஸ்… சுகா… உன் நிலைமை எனக்கு நல்லாப் புரியுது… ஆனா இன்னைக்கு ஒரு நாள் நீ என்னை பேசவிடு…” சம்பத் அவளிடம் கெஞ்சினான்.

“என் நிலைமை புரிஞ்சி இருக்கும் போது இப்படியெல்லாம் நீங்க ஏன் என் கிட்ட பேசறீங்க..?” சுகன்யாவின் குரலிலும் சிறிது கெஞ்சல் வந்திருந்தது.

என்னை காதலிக்கறேன்னு சொல்லி ஒரே நிமிஷத்துல இவன் என்னை கலங்க அடிச்சுட்டானே? இவன் பாம்பா? இல்லை பழுதையா? இவனுக்கு என்ன பைத்தியம் கியித்தியம் பிடிச்சிருக்கா…? இப்ப இவனுக்கு நான் என்ன பதில் சொல்றது…? இப்பத்தான் எல்லாப் பிரச்சனையும் முடிஞ்சு ஒரு வழியா என் கல்யாண விஷயம் செட்டில் ஆச்சுன்னு திருப்தியா இருந்தேன்.

இவன் என்னடான்னா அமைதியா இருந்த என் மனசுங்கற குளத்துல
“ஐ லவ் யூன்னு சொல்லி’ ஒரு பெரிய பாறாங்ககல்லைத் தூக்கி போட்டு, வீனா ஒரு புயலை உண்டாக்கி, என் மனசு நிம்மதியை கொலைச்சுட்டானே…? இப்ப இந்த சிச்சுவேஷன்ல இவனை நான் எப்படி டீல் பண்ணணும்.. சட்டுன்னு எழுந்தும் போயிட முடியாது..

நோ… நோ சுகன்யா… அது ரொம்பத் தப்பு… இவன் மனசு ஒடைஞ்சு போயிருக்கான்… இன் ஃபேக்ட், இவனை ஜாகிங் போவலாம்ன்னு நீதான் கூப்பிட்டுக்கிட்டு வந்தே…சுகன்யாவின் மனது குழம்பியிருந்த போதிலும், நியாயமாக யோசித்தது.

சுகன்யா பொறு… கொஞ்சம் பொறுமையா இரு… இவன் கூட இருந்த நேரம் இருந்துட்டே… அவன் கொஞ்ச நேரம் பேசட்டும்… அவன் மனசுல இருக்கறதை கொட்டித் தீர்க்கட்டும்; அதுக்கு அப்புறம், நீ அவனை எந்த சூழ்நிலையிலும் காதலிக்க முடியாதுங்கறதை, நிதானமா இன்னைக்கே, இப்பவே, புரியவெச்சுடு.
“நோ’ ன்னு சொல்றதை எப்பவும் தள்ளிப்போடாதே… அதுவும் இந்த விஷயத்துல தள்ளிப் போடாதே..! ஸ்ட்ரெய்ட்டா நோன்னு சொல்லிடு…

சம்பத், தன் கைகளை ஒன்றுடன் ஒன்றைக் கோர்த்து, விரல்களை வலுவாக நெறித்துக்கொண்டிருந்தான். அவன் பார்வை மண்ணில் நிலைத்திருந்தது. சுகன்யா அவனுக்கு பதிலேதும் சொல்லாமல், அவன் முகத்தை பார்ப்பதை தவிர்த்து, எதிர்த்திசையிலிருந்து வேகமாக வந்து கொண்டிருந்த கூட்ஸ் ரயிலைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கூட்ஸ் ரெயில், சுவாமிமலை ரெயில்வே நிலையத்தை கடந்து கொண்டிருந்தது. அவர்கள் இருவரின் நடுவில் ஒரு இறுக்கமான மவுனம் தொடர்ந்து கொண்டிருந்தது. கூட்ஸ் ரயில், தூர வளைவில் சென்று மறைந்தது. ரயில் நிலையத்தில் மீண்டும் அமைதி.. சம்பத் ஒரு முறை தன் தொண்டையை செருமி கனைத்தான். மெல்ல நிமிர்த்து சுகன்யாவை ஒருமுறைப் பார்த்தான். மெதுவாக பேச ஆரம்பித்தான்.

“சுகன்யா இது வரைக்கும், என் கடந்து போன வாழ்க்கையிலே, நீ சொன்ன மாதிரி, உன்னை விட அழகான பொண்ணுங்க கூட நான் பழகியிருக்கேன்… அவளுங்க கூட ஒடம்புல பொட்டுத் துணியில்லாம என் படுக்கையில நான் உருண்டு பொரண்டு இருக்கேன்… அவளுங்க மேல எனக்கு எப்பவும் காதல் வந்தது இல்லே…”

“….”

இதெல்லாத்தையும் இப்ப எதுக்கு இவன் எங்கிட்ட சொல்றான்? பார்க்குலேருந்து தாத்தா கூடவே நேரா வீட்டுக்குப் போயிருக்கலாம். நான் தான் இவனை ஓடலாமான்னு கூப்பிட்டேன்… இப்ப என்ன பண்ணமுடியும்..? தன் மீதே அவளுக்கு அடக்க முடியாத கோபம் எழுந்தது. வந்தது வந்தாச்சு… வேற வழியில்லே… இவன் தன் மனசுல இருக்கறதை முழுசா சொல்லி முடிச்சிடட்டும். குறுக்க பேசாம இருக்கறது தான் நல்லது… தன் மனதில் முடிவெடுத்தாள், சுகன்யா.