கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 37 6

“யெஸ்… நான் இதைத்தான் சொல்ல நினைச்சேன்… நீ முந்திக்கிட்டே..!”

“சம்பத்… இப்ப உங்க கிட்ட பைசா எதாவது இருக்கா? வீட்டுக்கு பக்கத்துல இருக்கற பார்க் வரைக்கும்தானே போகப் போறோம்ன்னு நான் பர்ஸை எடுத்துட்டு வரல்லே..” தன் முகம் சற்றே சுருங்கியவளாக குரலில் வெட்க்கத்துடன் கேட்டாள், சுகன்யா.

“சுகா.. இப்ப உனக்கு என்ன வேணும்மா? உன்னை மாதிரி ஒரு அழகான பொண்ணு, எனக்கு இது வேணும்ன்னு கேட்டும், நான் உன் மாமா பிள்ளை, அதை உனக்கு வாங்கிக் குடுக்க முடியலைன்னா, இந்த ஊரும், நம்ம ஒறவு மொறையும் என்னைப் பாத்து சிரிக்கமாட்டாங்களா?” முகத்தில் சிறிய குழப்பத்துடன் பேசினான், சம்பத்.

“ம்ம்ம் அப்புறம்… வேற என்னச் சொல்லப்போறீங்க… அதையும் சீக்கிரமா சொல்லிடுங்க..?” சுகன்யா மனதில் குஷியுடன் சிரித்தாள்.

“ஊர்ல இருக்கறவன் சிரிக்கறதை விடு… என் பேத்தி கேட்டதை நீ வாங்கிக் குடுக்கலையாடான்னு உன் தாத்தா என்னை அடிக்கவே வந்துடுவார்… அவரை நெனைச்சாத்தான் மொதல்ல எனக்கு பயமா இருக்கு…!!”

“சேச்சே.. எங்க தாத்தா எவ்வளவு நல்லவர் தெரியுமா…?” சுகன்யா அவன் பேச்சை வெட்டினாள்.

“சுகன்யா… உனக்கு இந்த ரெயில்வே ஸ்டேஷன் வேணுமா? இல்லே சுவாமிமலையே வேணுமா…? என்ன வேணும் சொல்லு டியர்…! நீ கேட்டா.. நான் என் உயிரையும் உனக்கு குடுக்கறதுக்கு தயார்…” சினிமாவில் வரும் கதாநாயகனைப் போல் வசனம் பேசி சிரித்தான், சம்பத்.

“எனக்கு ஊரும் வேண்டாம்… உங்க உயிரும் வேண்டாம்… இப்ப எனக்கு சூடா ஒரு கப் காஃபி குடிக்கணும்.. அவ்வளவுதான்… அதை மட்டும் நீங்க முடிஞ்சா வாங்கிக் குடுங்க…” சுகன்யாவும் உரத்த குரலில் உற்சாகமாக சிரித்தாள்.

“ப்ஃபூ.. இவ்வளவுதானா?” அவன் சற்றே ஏமாற்றம் படிந்த முகத்துடன், தன் பர்ஸை திறந்தான். ஸ்டாலில் நின்றவனிடம் ஒரு நூறு ரூபாய் தாளை அலட்சியமாக உருவி நீட்டினான். திறந்த ஃபர்ஸில், மாம்பழ நிற நிச்சயதார்த்தப் புடவையில், முகத்தில் சிரிப்புடன், கண்களில் மகிழ்ச்சியுடன் சிரித்துக்கொண்டிருந்தாள், சுகன்யா.
“அத்தான்.. அந்த போட்டோ என்னோடது மாதிரி இருக்கு. உங்கக்கிட்ட எப்படீ வந்தது? சுகன்யா தன் போட்டோவை அவன் பர்ஸில் பார்த்ததும் ஒரு கணம் திகைத்துப் போனாள்.

“உன்னோட போட்டோதான் சுகா…” சம்பத்தின் முகத்தில் சிறிய வெட்கம் எட்டிப்பார்த்தது.

சுகன்யா, சம்பத்தின் கையிலிருந்த பர்ஸை வாங்கி, அதில் செருகப்பட்டிருந்த தன் போட்டோவைப் பார்த்தாள். சரியான வெளிச்சத்துடன், முழு
“டெப்த்” டுன் அந்த புகைப்படம் அழகாக எடுக்கப்பட்டிருந்தது. பாதி உள்ளங்கையளவு இருந்த அந்தப் படத்தில், தன் மார்பளவில், சுகன்யா, தாமரையாக மலர்ந்து, தன் முகம் நிறைய சிரிப்புடன் இருந்தாள்.

“என் நிச்சயதார்த்த படம் மாதிரி இருக்கே…?” சுகன்யா தன் முகத்தில் சிறிது குழுப்பமும், ஆச்சரியமாகவும் பேசினாள்

“சுகா… நான் நேத்து உன்னோட பங்கஷனுக்கு வந்தேன்… என் கிட்டவும் அருமையான கேமிரா இருக்கு… போட்டோகிராஃபி என்னோட ஹாபி… என் மனசுக்கு பிடிச்ச நொடியை, நான் படமா மாத்திட்டேன்…” சம்பத் முகத்தில் புன்னகை மாறாமல் பேசிக்கொண்டிருந்தான்.

“அத்தான்… என் போட்டோவை நீங்க ஏன் உங்க பர்ஸ்ல வெச்சிக்கிட்டு இருக்கீங்க…?” முகத்தில் வியப்புடன், குரலில் சிறிய நடுக்கத்துடன் கேட்டாள், சுகன்யா. தன் கையிலிருந்த போட்டோவை அவனிடம் தயக்கத்துடன் திருப்பிக்கொடுத்தாள்.

“சுகன்யா உன்கிட்ட நான் மனசுவிட்டு ஒரு பத்து நிமிஷம் பேசணும்… ப்ளீஸ்.. அப்படி ஓரமா இருக்கற அந்த பெஞ்சுல உக்காரலாமா? சம்பத்தின் கண்களில் மெல்லியக் கெஞ்சல் தவழ்ந்து கொண்டிருந்தது. சுகன்யாவால் அவன் கேட்டதை தட்ட முடியவில்லை.

இருவரும் காஃபியை வாங்கிக்கொண்டு, ப்ளாட்பாரத்தின் கோடியில், காலியாக கிடந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து கொண்டனர். ஆவி பறக்கும் காஃபியை, தன் உதடுகளை குவித்து, மெல்ல
“ஸ்ஸ்ஸ்” என சத்தமெழுப்பி, சுகன்யா குடிக்கும் அழகை, தன் உள்ளத்தில் எழுந்த உவகையை அடக்க முடியாமல், ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தான், சம்பத்.

“சுகன்யா… அந்த காதல் ஜோடியை நீ பாத்தே இல்லையா?”

“யெஸ்… தே ஆர் வெரி க்யூட்…” மனதில் கள்ளமில்லாமல் பேசினாள் சுகன்யா.

“சூடான ஒரே கப் காஃபியை ரெண்டு பேரும் எவ்வளவு ஜாலியா மாத்தி மாத்தி குடிச்சாங்க. ரியலி… ஐ லைக்ட் தட் மொமென்ட்.. அவங்களைப் பொறுத்த வரைக்கும்… அந்த நொடியில… இந்த உலகமே அவங்களுக்கு இல்லாம போயிருக்கும்…”

ம்ம்ம்… சம்பத் மனசால இவ்வளவு தூரம் வாழ்க்கையின் எளிமையான அழகை ரசிக்கறவனா? இவனால தன் மனசுக்குள்ள ரசிச்சதை, இந்த அளவுக்கு தெளிவா வார்த்தைகளால வெளிக்கொணர முடியுமா? தன் உள்ளத்து உணர்வுகளை இன்னொருத்தருக்கு உணர்த்த முடியுமா? சுகன்யா மனதுக்குள் வியந்து போனாள்.

“சுகா… அந்த நொடியில அவங்க ரெண்டு பேரு மட்டுமே இந்த உலகத்துல வாழ்ந்துகிட்டு இருந்தாங்க.. அப்படீத்தான் நான் நெனைக்கிறேன்… மனசுக்குள்ள எந்தக் கவலையும் இல்லாம, தங்களை மட்டுமே அவர்கள் நினைச்சுக்கிட்டு இருந்தாங்க… அதைத்தான் அவங்க ரெண்டு பேரோட முகத்துல நான் பாத்தேன்… வாட் டூ யூ சே?” இப்போது அவன் முகம் சற்று சீரியஸாக இருந்தது போல் சுகன்யாவுக்கு தோன்றியது.

“ம்ம்ம்… யெஸ்…ஐ அன்டர்ஸ்டேன்ட் தட்…” இயந்திரமாக தன் மனதில் ஓடும் உணர்ச்சிகளை முகத்தில் காட்டாமல் பதிலளித்தாள் சுகன்யா.

சம்பத்தின் நயமான ரசிப்பை, அவனுடைய இயல்பான, யதார்த்தமான பேச்சை அவள் ஒரு புறத்தில் ரசித்தபோதிலும், மறுபுறத்தில் அவள் தன் மனதுக்குள் இன்னொரு விஷயத்தை நினைத்து குழம்பிக்கொண்டிருந்தாள்..