கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 37 3

“ஃபர்ஸ்ட் கிளாஸ் அத்தே… அயாம் ஜஸ்ட் ஃப்ளையிங் இன் த க்ளவுட்ஸ்… நீங்க எப்படீ இருக்கீங்க அத்தே?” மகிழ்ச்சியாக சிரித்தாள் சுகன்யா.

“ம்ம்ம்… எனக்கென்னடா கண்ணு… சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கறதுதான் வேலை.. ஒடம்பு பெருக்குது… அதான் கொஞ்ச தூரம் தினம் நடக்கிறேன்…” ராணியும் சிரித்தாள்.

“டெய்லி நீங்க வாக்கிங் வருவீங்களா? தெரிஞ்சிருந்தா இந்த வாரம் பூரா நானும் பார்க்குக்கு வந்திருப்பேன்… நான் தினமும் ரெயில்வே ஸ்டேஷன் பக்கம் தனியா நடக்கப் போய்கிட்டு இருந்தேன்..”

“வாரத்துல நாலு நாள் கண்டிப்பா இந்த பக்க வருவோம்…”

“ம்ம்ம். நாளைக்கு காலையில அப்பா கூட நான் ஊருக்குப் போறேன்.. அப்புறம் திரும்பவும் தாத்தா வீட்டுக்கு வரும்போது உங்கக்கூட ஜாய்ன் பண்ணிக்கறேன்..” உற்சாகத்துடன் பேசினாள் அவள்.

“இனிமே கல்யாணத்துக்குத்தான் வருவே…” ராணி சிரித்தாள்.

“தெரியலை அத்தே…
“அவர்” வீட்டுல கல்யாணம் எங்க வெச்சுக்கலாம்ன்னு பிரியப்படுவாங்களோ? வெட்கத்துடன் பேசினாள், சுகன்யா.

“கரெக்ட்தாம்மா.. நீ சொல்றது…”

“சுகன்யா… வாட் அபவுட் ஜாகிங்… ஐ விஷ் டு கோ ஃபார் எ ஸ்லோ ரன்..” சம்பத் புன்னகைத்தான்.

“தாத்தா… நான்
“அத்தான்’ கூட கொஞ்ச நேரம் ஜாக் பண்ணிட்டு வரட்டுமா? எனக்கும் கொஞ்ச நேரம் டயம் பாஸ் ஆகும்?” சம்பத்தின் உற்சாகம் தனக்கும் தொற்றிக் கொள்ள, தாத்தாவை கெஞ்சலாகப் பார்த்தாள் சுகன்யா.

“ம்ம்ம்.. சீக்கிரமா வந்து சேரும்மா.. அங்க பாட்டி டிஃபன் செய்து வெச்சுட்டு, உனக்காக காத்துக்கிட்டு இருப்பா..!” சிவதாணு பேசுவதை சற்று நிறுத்தி தொண்டையை செருமிக்கொண்டார். சிவ சிவா என சிவத்தை ஒருமுறை துணைக்கு அழைத்தார்.

“டேய் சம்பத்.. ஒழுங்கா கொழந்தையை வீட்டுல திருப்பி கொண்டாந்து விட்டுட்டு போ; நீ பாட்டுக்கு இவளை அம்போன்னு எங்கயாவது நடு வழியிலே ரோட்ல நிக்கவெச்சுட்டு,
“தம்’ அடிக்கப் போயிடாதே..!!” அவனுக்கு உரத்தக்குரலில் உத்திரவு போட்டார், சிவதாணு.

“தாத்த்த்தா.. என்ன தாத்தா சொல்றீங்க…நீங்க.. சம்பத் அத்தான் கோச்சிக்கப் போறாரு..?” சுகன்யா அழகாக தன் விழிகளை சுழற்றி கொஞ்சினாள்.

“சிவ… சிவா… அவன் அம்மா… நான் பாத்து பொறந்தவ… அவ புள்ளை என்னை கோச்சிக்குவானா…. நல்லா இருக்கும்மா நீ சொல்ற கதை…!!”

“ம்ம்ம்…. ரெண்டு நாளா நான் என் நெஞ்சுக்குள்ள படற வேதனை எனக்குத்தானே தெரியும்… நானாவது… என் சுகன்யாவை நடுவழியிலே விட்டுட்டு போறதாவது…” சரியான புத்திக்கெட்ட கிழம் இது, மனதுக்குள் அங்கலாய்த்துக்கொண்டான், சம்பத்.

“மாமா.. நீங்க பேசறது மட்டும் நல்லாயிருக்கா? சுகன்யா என்ன இன்னும் குழந்தையா? என் புள்ளை சம்பத்தும் அவளுக்கு அசலா என்ன? அவளுக்கு அவன் சொந்த அத்தான்தானே.. அவனுக்குத் தெரியாதா? இதெல்லாம் நீங்க சொல்லணுமா?” ராணி சிவதாணுவின் கையை ஆதுரமாக பிடித்துக்கொண்டாள்.

“சிவ சிவா…! நீ தப்பா நெனைச்சுக்காதேடீ ராணீ… உன் புள்ளையை நான் கொறை சொல்லலை… நீயே எனக்கு கொழந்தைதான்!! சுகன்யா உன் பொண்ணு மாதிரி… அப்படியிருக்கும் போது சுகன்யா என்னைக்கும் எனக்கு கொழந்தைதானே?!”

“மாமா… பசங்க ரெண்டு பேரும் அவங்களா வீட்டுக்கு வந்து சேருவாங்க… இப்படியே எங்க கூடவே வந்து ஒரு கப் காஃபி சாப்பிடுங்களேன்… நீங்க எங்க வீட்டுக்கு வந்து ரொம்ப நாளாச்சே?” நல்லசிவம் அன்புடன் சிவதாணுவை அழைத்தார்.

“சிவ.. சிவா… இன்னொரு நாள் கண்டிப்பா வர்றேன்.. நான் வர்றதுக்கு முன்னாடி காப்பி குடிச்சுட்டுத்தான் வந்தேன். இன்னும் குளிக்கலை.. போய் குளிச்சிட்டுப் பூஜை பண்ணணும்… வர்றேம்மா ராணீ….” சொன்னவர் எழுந்து தன் வீட்டை நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *