கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 37 3

இவன்… ஒருவேளை ஏதாவது மனஅழுத்தத்துல இருக்கானா? இவன் மனநோயாளியா? அந்த மாதிரியும் தெரியலியே? ரொம்பத் தெளிவா பேசறானே? நல்லாப் படிச்சவன், கை நிறைய சம்பாதிக்கறவன்… நான் கருப்பா பொறந்துட்டேன்னு ஏன் இப்படி ஃபீல் பண்றான்? இந்த தாழ்வு மனப்பான்மையினாலத்தான், நல்ல குடும்பத்துல பொறந்த இவன், இப்படி கண்ட பெண்களோட சகவாசம் வெச்சிக்கிட்டு, தன் வாழ்க்கையை பாழடிச்சுக்கிட்டு இருக்கானா?

சீரழிஞ்சு போனவளுங்க துணையில, தன் மனசோட புழுக்கத்தை தொலைக்கறதா நெனைச்சுக்கிட்டு, இவனும் குட்டிச்சுவரா போறானா? இந்த லட்சணத்துல என்னையும் காதலிக்க ஆரம்பிச்சிட்டேன்னு வேற பொலம்பறான்.. எனக்கு என்னப் பண்றதுன்னு ஒண்ணும் புரியலியே? சுகன்யாவின் மனதுக்குள் ஆயிரம் எண்ணங்கள் ஒன்றன் பின் ஒன்றாக எழுந்து கொண்டிருந்தது.

“நான் பழகிய எந்தப் பொண்ணுகிட்டவும், உன்னைக் காதலிக்கறேன்னு எப்பவும் நான் சொன்னதே இல்லே சுகன்யா. ஏன்னா இதுவரைக்கும் நான் யாரையும் காதலிச்சதே இல்லே. அதெல்லாம் ஒரு நாள் அல்லது ஒரே ஒரு இரவு மட்டுமே நீடித்த உறவுகள்…”

“ப்ச்ச்ச்… அயாம் சாரி சம்பத்… கேக்கறதுக்கே வருத்தமாயிருக்கு..” சுகன்யா அவன் முகத்தை நேராகப் பார்த்தாள். சம்பத்தின் விழிகளில் கண்ணீர் இன்னும் தேங்கியிருந்தது.

“சுகன்யா… உன் மேல ஏற்பட்டிருக்கற இந்த உணர்வு, இதுக்குப் பேருதான் காதல்ன்னு சொன்னா, சத்தியமா சொல்றேன்… எனக்கு வேற யார் மேலேயும் இந்த உணர்ச்சி இதுவரைக்கும் வந்ததே இல்லே.. இதை மட்டும் நீ நல்லாப் புரிஞ்சுக்கோ…” தன் கண்களில் தளும்பிக்கொண்டிருந்த கண்ணீரை அவன் துடைத்துக்கொண்டான்.

“ம்ம்ம்…”

“உங்கிட்ட என் உள்ளத்துல இருக்கற உணர்ச்சியை, உன் மேல எனக்குள்ள வளர்ந்துகிட்டு இருக்கற இந்த உண்மையான உணர்ச்சியை, என் காதலை, உன்னிடம் வெளிப்படையா நான் சொன்னது தப்புன்னு நீ நெனைச்சா, அதுக்கு என்ன தண்டனை வேணா குடு.. நான் ஏத்துக்கறேன்.. ஆனா திரும்பவும் வேற எவளைப் பத்தியும் நீ எங்கிட்ட பேசாதே… பிளீஸ் சுகன்யா..
“ அவன் குரல் மீண்டும் தழுதழுக்கத் தொடங்கியது.

சுகன்யா மொத்தமாக தனக்குள்ளே அந்த நொடியில் உடைந்தாள். இந்த அளவிற்கு இவன் என்னைக் காதலிக்கறானா? ஒரே நாள்ல, ஒரு ஆணால், ஒரு பெண்ணை இந்த அளவுக்கு ஆழமாக, உள்ள பூர்வமாக காதலிக்க முடியுமா? ஷுட் ஐ பீ ப்ரவுட் ஆஃப் திஸ்? அவள் ஒரு நொடி மனதுக்குள் திகைத்தாள்.

என் வாழ்க்கையிலே, என்னை மனசாரக் காதலிக்கறேன்னு எங்கிட்ட சொன்ன ரெண்டாவது வாலிபன் இவன். நோ டவுட்.. ஹீ ஈஸ் ஹேண்ட்சம்… ஹீ கேன் அட்ராக்ட் எனி வுமன் ஆஃப் மை ஏஜ்… தப்பை தப்புன்னு ஒத்துக்கற தைரியம் இருக்கற வாலிபன். உள்ளத்துல இருக்கறதை சட்டுன்னு ஒரு முடிவுக்கு வந்து தைரியமா சொல்லக் கூடிய வாலிபன் இவன்… இவனுக்கு இப்ப நான் என்ன பதில் சொல்றது? தன் உணர்ச்சிகளிலிருந்து சட்டென்று மீள முடியாமல் தவித்தாள், சுகன்யா.

“அத்தான்… உங்க உணர்ச்சிகளை புரிஞ்சுக்க முடியாத கல்லு இல்லே நான்… நானும் ஒருத்தனை காதலிச்சவதான்… காதல்ங்கற உணர்ச்சிகளால அலைக் கழிக்கப்பட்டவதான்… உண்மையான காதல்ங்கறது என்னன்னு எனக்கும் தெரியும்…”

“தேங்க் யூ சுகன்யா… நீ என்னை எங்கே மூளை கொழம்பிய பைத்தியக்காரன்னு நெனைச்சிடுவியோன்னு பயந்துகிட்டு இருந்தேன்…”

“அத்தான்.. நான் செல்வாவை ஆறுமாசமா காதலிச்சுக்கிட்டு இருக்கேன்.. நான் இன்னும் அவனை முழுசா புரிஞ்சுக்கலே.. அதுவும் உண்மைதான்.. ஆனா அவன் மேல நான் என் உசுரையே வெச்சிருக்கேன்… திரும்பவும் வேற யாரையும் என்னால காதலிக்க முடியாது… இது முன்னே நான் சொன்னதை விட பெரிய உண்மை… அவனும் அப்படித்தான்.. அவன் கூட எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சி… நீங்களும் அந்த பங்ஷனுக்கு வந்து எங்களை வாழ்த்தினீங்க; உங்க காதல் உண்மையாகவே இருந்தாலும், நீங்க என்னை உண்மையா, உசுரா நேசிச்சாலும், இப்ப உங்களையும் என்னால எப்படி காதலிக்க முடியும்…?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *