கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 37 6

என் பேச்சைக் கேக்க வேணாம்; இவர் ஃப்ரெண்ட்தானே அந்த ரகு; ரகுகிட்டவாவது எப்பவாவது மனசு விட்டு பேசி, உன் அக்கா சுந்தரி பெத்த பொண்ணை என் புள்ளைக்கு கட்டிக்கப் போறேன்னு, என் மனசுல இருக்கற ஆசையை வெளிப்படையா சொன்னாரா? அதுவும் இல்லே; துப்புக்கெட்ட மனுஷன், என் புருஷன்.

உன் வீட்டுல சம்பந்தம் பண்றதுக்கு உரிமை உள்ளவ நான்; அசலான் கிட்ட சம்பந்தம் பண்றதுக்கு முன்னாடி என்னை ஒரு வார்த்தை நீ கேட்டியாடா? நீ பண்ணது ஞாயமான்னு, குமாரை நேருக்கு நேர், என்னைக்கு இருந்தாலும் நான் கேக்கத்தான் போறேன். வயசுல என்னை விட ரெண்டு வருஷம் சின்னவன் தானே அவன்? ஒழுங்கு மொறையா எனக்கு அவன் பதில் சொல்லட்டும்.

இவரு சொல்ற மாதிரி, இப்ப இதையெல்லாம் யோசனைப் பண்ணி பண்ணி, என் மனசுக்குள்ளவே புலம்பித்தான் என்ன பிரயோஜனம்…? ஆனா நான் என்னப் பண்றது..? என் மனசு கேக்கமாட்டேங்குதே? ராணியின் மனது இடம் வலமாக, கட்சி கட்டிக் கொண்டு அலைந்தது.

“என்னங்க… அங்கப் பாருங்களேன்…! நம்ம சம்பத் யாருகிட்ட பேசிகிட்டு நிக்கறான்? கூட நிக்கறது சுகன்யா மாதிரில்லா இருக்குது?

“சுகன்யாவேதான்… பக்கத்துல உன் மாமா சிவதாணு பெஞ்சில உக்காந்து இருக்காரு… காலங்காத்தால… அவருகிட்ட உன் பஞ்சாயத்தையெல்லாம் ஆரம்பிச்சிடாதே…!! அவராவது நிம்மதியா இருக்கட்டும்…” நல்லசிவம் தன் மனைவியை எச்சரித்தார்.

“ஆமாம்… நீங்க நாட்டாமையை ஒழுங்காப் பண்ணியிருந்தா, என் புள்ளை, சுகன்யா கழுத்துல இந்நேரம் தாலியைக் கட்டியிருப்பான்.” ராணி நொடித்துக்கொண்டாள்.

“ஏன்டீ, ராணி… மாமா பொண்ணைப் வழியிலப் பாத்தான்.. அதுல ஒண்ணும் தப்பு இல்லே.. விஷ் பண்ணாம, ஹாய்ன்னு சொன்னமா, உள்ளப் போய் ஜாகிங் பண்றதை வுட்டுட்டு இந்த கூறுகெட்டவன், இப்ப எதுக்கு சுகன்யா கிட்ட இளிச்சுக்கிட்டு நிக்கறான்? நல்லசிவத்தின் மனசு, தன் மகனின் செயலைக் கண்டு எரிச்சலடைந்தது.

இவன் ஒரு தரம் சுகன்யாகிட்ட அடிச்ச கூத்து பத்தாதா? ஊருக்கு போற இன்னைக்கு, திருப்பியும் எந்த வெனையாவது வெதைச்சிட்டு போனான்னா… அது அறுவடை பண்றது யாரு? அவர் தன் மனதுக்குள் ஆத்திரப்பட்டார்.

“சின்னஞ்சிறுசுங்க ஏதோ சிரிச்சிப் பேசிக்கிட்டு நிக்குதுங்க… இதுக்கு இப்ப நீங்க ஏன் கிடந்து பொலம்பறீங்க..?

மெல்ல நடந்து வந்த நல்லசிவமும், ராணியும், பார்க்கின் நுழைவாயிலை நெருங்கினார்கள். ராணி தன் உதட்டில், புன்னகை வழிய, அவர்கள் ஜோடியாக பக்கம் பக்கம் நின்று பேசிக்கொண்டு இருப்பதை, வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். நல்லசிவம் சிவதாணுவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார்.
“நல்லாயிருக்கியா சுகன்யா?” ராணி சுகன்யாவின் தோளில் தன் கையை போட்டுக்கொண்டாள்.