கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 36 9

“தாத்தா… எதாவது பேசுங்களேன்.. எனக்கும்தான் உங்ககூடவே இருக்கணும்ன்னு ஆசையா இருக்கு? ஆனா வேலைக்கு போகணுமில்லே” சுகன்யா சிவதாணுவை கொஞ்சினாள்.

ஒரு வாரத்துக்கும் மேலாக, தாத்தா பாட்டியின் அருகாமை தந்த சுகத்தை விட்டுவிட்டு, சென்னைக்கு போகவேண்டியதை நினைத்து, அவளும் தன் மனசுக்குள் காலையில் எழுந்ததிலிருந்தே வெளியில் சொல்லாமல் மருகிக்கொண்டிருந்தாள்.

“ம்ம்ம்… நீதான் என்னை விட்டுட்டு போவப்போறீயேமா? நான் உங்கிட்ட பேசமாட்டேன்..” கரகரத்து உற்சாகமில்லாமல் வந்தது அவர் குரல்.

“தாத்தா… நீங்களும் பாட்டியும் நாளைக்கு என்கூடவே சென்னைக்கு வந்துடுங்க… என் ரூம்ல என் கூட இருங்களேன்… யார் வேணாங்கறது..?” சுகன்யாவும் சுரத்தில்லாமல் சிரித்தாள்.

“அதெல்லாம் சரிப்படாதுடா கண்ணு.. உங்கப்பாவை சீக்கிரமா மெட்றாஸ்ல கொஞ்சம் பெரிசா ஒரு வீடு பாக்கச்சொல்லும்மா.. நீயும் அங்க எங்ககூட வந்துடு…”

“அப்பா வீடு பாத்துக்கிட்டுத்தான் இருக்கார்…தாத்தா…”

“ம்ம்ம்… அவனும்தான் பாக்கறான். பாக்கறான்.. பாத்துக்கிட்டே இருக்கான்.. சிவ சிவா..” முனகினார், சிவதாணு.

அன்றைய காலைப்பொழுது தனக்காக சில ஆச்சரியங்களையும், அதிர்ச்சியையும், தன்னுள் நிறைத்துக்கொண்டு விடிந்திருக்கிறது என்றறியாமல் தாத்தாவுடன் பார்க்கிலிருந்து வெளியில் வந்தாள், சுகன்யா.

பார்க்கின் வாயிலில் நின்ற செடிகளில் பூக்கள் மெல்லியப் பனிப்போர்வை போர்த்திக்கொண்டிருந்தன. குழந்தையின் குதூகலத்துடன் சுகன்யா இலைகளின் மேல் படிந்திருந்த பனிநீரை தன் விரலால் சிட்டிகை போட்டு, அந்தரத்தில் அந்த பனி நீரை எகிறவிட்டு, எகிறிய நீர், மெல்லிய பன்னீர்த் துளிகளாக சிதறி தன் உடலை நனைக்க, அந்த குளிர்ச்சியில், அவள் உடலும், மனமும் சிலிர்த்துக் கொண்டிருந்தாள்.
“ஹாய்..! சுகன்யா…!” முதுகுக்குப் பின்னாலிருந்து வந்த உற்சாக குரல் கேட்டு திரும்பினாள் அவள்.

உடலின் ஒவ்வொரு அங்கத்திலும் இளமை துள்ள, பார்க்கும் பார்வையிலும் தன் ஆண்மை பொங்கி வழிய, உதடுகளின் ஓரத்தில் ஒரு அலட்சியத்துடன், தன் வலுவான தொடைகளை அழுத்திப்பிடிக்கும் கருப்பு ஷார்ட்ஸ், மார்பில் வெள்ளை டீ ஷர்ட், கழுத்தில் மின்னும் மெல்லிய தங்க சங்கிலி, ஜாகிங் ஷூ சகிதமாக பார்க்கினுள் நுழைந்து கொண்டிருந்தான், சம்பத்.

பொழுது விடிவதற்குள்ளாகவே, நீட் அண்ட் க்ளீன் ஆக ஷேவ் செய்திருந்த சம்பத்தின் கழுத்திலும், நெற்றியிலும் ஓரிரு வியர்வை முத்துக்கள் நடனமாடிக் கொண்டிருந்தன. அவன் உடலில் ஆங்காங்கு வழியும் வியர்வையைக் கண்டதும், அவன் சற்று நேரமாகவே ஜாகிங் செய்து கொண்டு இருக்க வேண்டுமென எண்ணினாள், சுகன்யா.

அந்த சிறிய வியர்வை முத்துகள் சம்பத்தின் கவர்ச்சியான முகத்துக்கு மேலும் அழகைச் சேர்த்துக் கொண்டிருந்தன. அவன் பளிச்சென்று தன் வெண்ணிறப் பற்கள் தெரிய இனிமையாக சிரித்துக்கொண்டிருந்தான்.

‘எந்தப் பொண்ணு இவனைப் பாத்தாலும், திரும்பவும் ஒரு தரம் இவனை ஏறெடுத்து பாக்காம போகமாட்டான்னு’ செல்வாவை வெறுப்பத்தறதுக்காக சீனு முந்தாநாள் கமெண்ட் அடிச்சது கரெக்ட்தான். சம்பத்தின் ஆண்மையின் கம்பீரத்தைக் கண்டு மனதுக்குள் ஒரு நொடி சிலாகித்தாள், சுகன்யா.

ம்ம்ம்.. என் மனசுக்குள்ள இந்த மாதிரியான எண்ணங்கள் திடீர்ன்னு ஏன் வருது? சுகன்யா ஒரு நொடி திகைத்தாள். காலேஜ்ல படிச்ச காலத்துலயும் சரி; சென்னைக்குப் போய் வேலையில ஜாய்ன் பண்ணதுக்கு அப்புறமும் சரி; இதுவரைக்கும் எந்த ஆம்பிளையைப் பத்தியும் இப்படியெல்லாம் என் மனசு ஆராய்ஞ்சதே இல்லையே?

3 Comments

  1. Pothum story vera story podunga

  2. Kathai endi sonuga ya

    1. Vera kathai sonnga pls

Comments are closed.