கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 36 9

“சாரீம்ம்மா… சுந்து… ஒரு பெத்தவனா சுகா கூட இருந்து நான் செய்ய வேண்டியதையெல்லாம், நீயும் ரகுவும்தான் எப்பவும் அவளுக்குச் செஞ்சிருக்கீங்க…”

“அதனால என்னங்க… பெத்தவ நான் என் கடமையைத்தானே செய்தேன்..”

“ப்ச்ச்ச்…, அவளோட எல்லாப் பிரச்சனைகளையும் ஃபேஸ் பண்ணியிருக்கீங்க; அவகிட்ட அவளைப் பெத்த அப்பாங்கற முழு உரிமையோட பேசவே எனக்கு தயக்கமாயிருக்கு…” அவர் குரல் கரகரப்புடன் வந்தது,.

“என்னங்க.. நீங்க இப்டீ பைத்தியமாட்டம் பேசறீங்க… உங்க மேலே அவ உயிரையே வெச்சிருக்கான்னு உங்களுக்குத் தெரியாதா? உங்க மேல அப்படீ ஒரு பாசத்தை மனசுக்குள்ள வெச்சிக்கிட்டு, நீங்க கூட இல்லையேன்னு அவ தவிச்ச தவிப்பு எனக்குத்தாங்க தெரியும்…”

“ப்ச்ச்… உங்களை பாதியில விட்டுட்டு ஓடிவன்தானே நான்… என் கடமையிலேருந்து நான் தவறினது உண்மைதானேம்மா…”

“சும்மா அதையே சொல்லிகிட்டு இருக்காதீங்க…”

“நான் வீட்டைவிட்டு போனது அவளை ரொம்ப பாதிச்சிருக்கு… அதுதான் அவ பிடிவாதத்துக்கெல்லாம் காரணமா?”

“சட்டுன்னு சுகாவைப் பத்தி மொத்தமா ஒரு தப்பான முடிவுக்கும் நீங்க வந்துடாதீங்க…”

“இல்லே… நிச்சயமா இல்லே…”

“நம்ம பொண்ணு புத்திசாலி, பெரியவங்களுக்கு மரியாதை குடுக்கறவ; ரகுகிட்ட அளவில்லதா பாசமும், பயமும் அவளுக்கு இருக்கு… ஒரு வாரத்துல தன் தாத்தா, பாட்டிகிட்ட எப்படீ ஒட்டிக்கிட்டாப் பாத்தீங்களா? என் மேலயும் உயிரை வெச்சிருக்கா; என் கண்ணு கலங்கினா;
“ஓ”ன்னு அழுவா… பாசக்கார புள்ளைங்க அது…” சுந்தரியின் தாய்மை பெருமிதத்துடன் பேசியது.

“ம்ம்ம்…”
“குமரு, நம்ம பொண்ணு சுகா, ஒருத்தர் கஷ்டபடறாங்கன்னா, தானா ஓடிப்போய் அவளால முடிஞ்ச உதவியைப் பண்ணுவா…”

“அதான் நடராஜன் சொல்லி சொல்லி நம்மப் பொண்ணை புகழ்ந்தார்..”

“என்னன்னு?”

“செல்வா ஆஸ்பத்திரியில இருக்கும் போது நம்ம சுகா எப்படி ஓடி ஆடி அவனைப் பாத்துகிட்டான்னு..!!”

“செல்வா கேஸ்ல, சுகா அவனோட நட்பா இருந்தா, காதலிச்சா… அதை நாம பெரிசு பண்ணக்கூடாது..”

“ம்ம்ம்… உண்மைதான்…”

“நான் சொல்றது முகம் தெரியாதவங்களுக்கும், அவ ஹெல்ப் பண்ணுவான்னு சொல்றேன்..”

“அப்படியா..” குமார் நெகிழ்ந்து போயிருந்தார்.

“ஆனா அவளுக்கு நாம சொல்ற ஒரு விஷயத்துல புடிப்பு இல்லன்னா; அவ மனசை மாத்தறது கஷ்டம்; அவளை மாத்தறதும், குதிரை கொம்பை தேடிப்புடிக்கறதும் ஒண்ணுதான்… அப்படீ ஒரு வைராக்கியம் புடிச்சவ.. என்னைப் பெத்தவ ஒருத்தி இருந்தாளே… அவளை அப்படியே உரிச்சுக்கிட்டு பொறந்திருக்கா
“ சுந்தரியின் குரல் தழுதழுத்தது.

“சுந்து… இப்ப எதுக்கும்மா இல்லாத பெரியவங்களைப் பத்தி பேசறே” சுந்தரியை தன்னுடன் இறுக்கிக்கொண்டார், குமாரசுவாமி.

“என் அம்மா ரொம்ப நல்லவ; ஆனா அவ பிடிவாதத்தை என்னால மாத்த முடிஞ்சுதா…? எங்கப்பாவால மாத்த முடிஞ்சுதா… அதைப்பத்தி சொல்றேங்க.. அதே மாதிரிதான் இவளும்… இவ பிடிவாதம் பிடிக்க ஆரம்பிச்சா… நாம அவ எதிர்ல பெயிலாகித்தான் நிக்கணும்ன்னு சொல்றேன்..”

“சுகன்யா, தான் நினைச்சதை சாதிக்கணும்ன்னு எப்பவும் இப்படித்தான் அடம் பிடிப்பாளா?”

தன் செல்ல மகள், ஒரே ஆசை மகள், சுகன்யாவின் மறுபுறத்தை, அவளுடைய இன்னொரு முகத்தை, பிடிவாதம் பண்ணும் சுகன்யாவின் முகத்தை, மீண்டும் ஒரு முறை பார்க்க அவருக்கு விருப்பமில்லை என்பது அவர் பேச்சில் தெளிவாகத் தெரிந்தது.

“அவ நினைச்சது நடக்கற வரைக்கும், உங்ககிட்ட ஒரு வார்த்தை பேச மாட்டா; நீங்களா போய்
“என்னம்மான்னு ஆசையா பேசினாலும்… என்ன வேணும்ன்னு கேட்டாலும்’ தன்னோட மூஞ்சை தூக்கி வெச்சிக்கிட்டு ஒதுங்கி ஒதுங்கி போவா;
“குழந்தை நம்ம கிட்ட பேசலயேன்னு’ நாம பண்றதுதான் தப்போன்னு… உங்களை குற்ற உணர்ச்சியில தவிக்க வெச்சுடுவா..

3 Comments

  1. Pothum story vera story podunga

  2. Kathai endi sonuga ya

    1. Vera kathai sonnga pls

Comments are closed.