கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 36 9

“ம்ம்ம்.. சொல்லு…” கொஞ்ச நேரம் மனசுக்குள்ள ஆண்டவன் பேரை சொல்ல விடமாட்டேங்கறா, மனசுக்குள் அவருக்கு எரிச்சல் கிளம்பியது. அவர் நடக்கும் போது, சிவ நாமத்தை உள்ளத்துக்குள் உச்சரித்துக்கொண்டே நடப்பது வழக்கம்.

“இந்த குமாரும், சுந்தரியும், சுகன்யாவை நம்ப சம்பத்துக்கு தரமாட்டேன்னு சொன்னதுக்கு சரியான காரணத்தை கடைசிவரை சொல்லலீங்க… அவங்க திட்டம் போட்டுத்தான் நம்பளை ஏமாத்தியிருக்காங்க…”

“இப்ப இந்த கதை எதுக்கு உனக்கு….?” அவர் அலுத்துக்கொண்டார்.

“என் வயத்தெரிச்சலை என் மனசுக்குள்ளவே வெச்சிக்கிட்டு இருக்கணுமா? வெளியில கொட்டிட்டா… நான் நிம்மதியா இருப்பேன்… என் பேச்சை உங்களால காது குடுத்து கூட கேட்டுக்க முடியாதா?”

“சரி சொல்லு…”

“குமார் என் கிட்ட என்ன சொன்னான்?”

“ம்ம்ம்.. என்ன சொன்னாரு அவரு?”

“சுகன்யாவுக்கு இப்ப என்ன வயசாகிப் போச்சு? முழுசா இன்னும் இருவத்தி மூணு வயசு கூட ஆவலை… எங்க பொண்ணுக்கு இப்ப நாங்க கல்யாணம் பண்ணப் போறதில்லைன்னு எனக்கு போன்ல காது குத்தினானா?”

“ம்ம்ம்ம்…”

“அதனாலத்தான், சுகன்யா சென்னையிலேருந்து லீவுல வந்திருக்கா; நீ போய் ஒரு தரம் அவளைப் பாத்துட்டு வாடான்னு சம்பத்தை எங்க மாமா வீட்டுக்கு அனுப்புனேன்…”

“அவன் போய், புத்தியில்லாம, அவசரப்பட்டு குட்டையை கொழப்பிட்டு வந்தான்.. நான் அந்த கொழப்பத்தை ரகு கால்ல விழுந்து சரி பண்ணேன்…”

“உங்க கதை ஒரு பக்கம் இருக்கட்டும்… இப்ப நான் சொல்ற கதையை கேளுங்க; குமார் என்னப் பண்ணான்?

“சொல்லிகிட்டே போடீ… என்னால வார்த்தைக்கு வார்த்தை
“ஊம்’ கொட்ட முடியாது..?”

‘சுகன்யா’, அவ கூட வேலை செய்யறவனை ஆசைப்பட்டு இருக்கான்னு தெரியுது… அதனால உடனடியா நிச்சயதார்த்தம் வெச்சுட்டோங்கறான், குமாரு. இதை மொதல்லேயே நம்மகிட்ட நேரடியா சொல்லியிருந்தா நான் ஏன் என் புள்ளையை சிவதாணு வீட்டுக்கு அனுப்பப் போறேன்?”

“ராணீ… முடிஞ்சுப் போன கல்யாணத்துக்கு இப்ப மோளம் என்னா… தாளம் என்னா? இப்ப இந்த கதையை நீ எதுக்கு பெரிசாக்கறே?”

“ஏங்க… என் மனசுல இருக்கறதை நான் யார்கிட்டங்க சொல்லுவேன்? ராணி தன் முகத்தை தூக்கிக்கொண்டாள்.

“சரி சொல்லி முடி உன் கதையை…” கொட்டாவி ஒன்றை வெளியேற்றினார் நல்லசிவம்.

“நம்ம ஒறவு மொறைகிட்ட உக்காந்து பேசாம, யாரையும் என்ன ஏதுன்னு ஒரு தரம் கூட கலந்துக்காம, மூணே நாள்ல காதும் காதும் வெச்சா மாதிரி, குமாரு, தன் பொண்ணுக்கு ஏன் நிச்சயதார்த்தம் முடிச்சான்?”

“சுகன்யா அவன் பெத்த பொண்ணு… குமாருக்கு எந்த சம்பந்தம் புடிக்குதோ, அங்க தானே அவன் சம்பந்தம் பண்ணுவான்.. நீ ஏன் இப்ப உன் மூச்சைப் புடிச்சுக்கிட்டு என் கிட்ட பஞ்சாயத்து வெக்கறே?

“மூஞ்சி தெரியாத வெளியூர்காரன் வீட்டுல இவன் சம்பந்தம் பண்ணியிருக்கானே? நாளைக்கு எதாவது பிரச்சனைன்னு வந்தா, இந்த குமாரு யாருகிட்ட போவான்?

3 Comments

  1. Pothum story vera story podunga

  2. Kathai endi sonuga ya

    1. Vera kathai sonnga pls

Comments are closed.