கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 36 6

“ம்ம்ம்… நீங்க இப்ப வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம், நம்ம கொழைந்தையோட போக்குல மாறுதல் வந்திடிசீங்க… அவ முகத்துல நிரந்தரமா இருந்த ஒரு சோகம் போயிடிச்சி… எல்லார்கிட்டவும் சிரிச்சிப் சிரிச்சிப் பேசறா… நல்லாத் தெரிஞ்சவங்க கிட்ட அவ காட்டற சிடுசிடுப்பு, கொஞ்சம் கொறைஞ்சிருக்கு.. போவ போவ அவ பிடிவாதம், அடம் பிடிக்கறது, இந்தப் பழக்கம் எல்லாம் போயிடும்ன்னு நெனைக்கறேன்..”

“ம்ம்ம்… அப்படி நடந்தா ரொம்ப நல்லது…” அவர் குரலில் இருந்த வேதனை இப்போது குறைந்திருந்தது.

“ஆம்பிளை நீங்க அழுதா… என் மனசுல இருக்கற தைரியம் போயிடுங்க…” சுந்தரி அவர் கண்களை துடைத்தாள். அவரை இறுக அனைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.

“சரிம்ம்மா…”

“ஒரு விஷயத்தை நீங்க நல்லாப் புரிஞ்சுகோங்க… சுகாவோட அடம் பிடிக்கற குணத்தை நீங்களும் தெரிஞ்சுக்கணுங்கறதுக்காக இதெல்லாத்தையும் உங்க கிட்ட சொன்னேன்… உங்களை நான் கொறை சொல்லணும்ங்கற எண்ணத்துல பேசலீங்க…” சுந்தரி, குமாரின் கன்னத்தை ஆசையுடன் வருடினாள்.

“சுந்து… வாழ்க்கையில மனுஷனுக்கு ஓரளவுக்கு பிடிவாதம் இருக்க வேண்டியதுதான்… நம்பளையே எடுத்துக்கோ… நான் குடிச்சுட்டு வந்து பண்ண கூத்துகளை தாங்க முடியாம, கடைசியா நீ என்னை ஒரு நாள் கோபத்துல அடிச்சே.. அதனால என் ஆம்பளை ஈகோ காயமடைஞ்சுது… என் பொண்டாட்டி, பொம்பளை என்னை நீ கை நீட்டி அடிச்சிட்டியேங்கற வெறுப்புல நான் வீம்பா உன் முகத்துல நான் முழிக்கக்கூடாதுன்னு, பிடிவாதத்தோட, ஊரை விட்டே ஓடிப் போனேன்.”

“ப்ச்ச்…ப்ச்ச்ச்..”

“ஒரு வைராக்கியத்துல தனியா வாழ்ந்தேன்… வாழ்க்கையில கொஞ்சம் முன்னேறினன். பணம் சம்பாதிச்சேன்… இப்ப திருந்தி, வாழ்க்கையோட அர்த்தம் புரிஞ்சு, நல்ல நிலமையில நான் இருக்கேன்.. ஒருவிதத்துல நான் உன் கூடவே இருந்திருந்தால்… இந்த அளவுக்கு எனக்கு புத்தி வந்திருக்குமா, இந்த நிலைமைக்கு நான் வந்திருப்பேனா… தெரியலை.”

“சாரிப்பா…நானும் உங்க கிட்ட இந்த அளவுக்கு பிடிவாதமா இருந்திருக்கக்கூடாது…” சுந்தரியின் குரல் கரகரத்தது.

“நீயும் பிடிவாதமா இருந்தே… நானும் வீம்பா இருந்துட்டேன்… ஒருத்தரை ஒருத்தர் பாக்காம, மனசுக்குள்ளவே ஆசையை வெச்சிக்கிட்டு, பைத்தியக்காரத் தனமா, ஒருத்தரை ஒருத்தர் பழிவாங்கறதா நெனைச்சு, ஒருத்தரை ஒருத்தர் ஏமாத்தி, ரெண்டு பேருமே தவிச்சுக்கிட்டு, நம்ம வாழ்க்கையோட இனிமையான, பதினைஞ்சு வருஷத்தை வீணாக்கிட்டோம்…”

“ப்ச்ச்… ஆமாங்க… வயசு ஆக ஆகத்தான் இதெல்லாம் புரியுதுங்க..” சுந்தரி வேதனையுடன் மருகினாள்

“அப்பா அம்மா சொன்னதை கேக்காம, நம்ம விருப்பம்தான் முக்கியம் அப்படீன்னு வீட்டை விட்டு வந்து கல்யாணம் பண்ணிகிட்டோம்… நம்ம ரெண்டு பேரோட அந்த புடிவாதகுணம் எங்கப் போவும், அது சுகாகிட்டவும் இருக்கு… பிடிவாதம் நம்ம பரம்பரை சொத்து… சுகாவை மட்டும் குறை சொல்லி என்னப் பண்றது…?” குமாரசுவாமி தன் மூக்கை உறிஞ்சினார்.

“உண்மைதாங்க… இவளும் எந்த சந்தர்ப்பத்துலயும் நம்பளை மாதிரி தன் வாழ்க்கையில முட்டாள்தனமா, எந்த தப்பும் பண்ணிடக்கூடாதுன்னு நான் பயப்படாத நாளே இல்லை…”

“ஒருத்தருக்கு ஒருத்தர் கொஞ்சம் விட்டுக்குடுத்துப் போனாத்தான், குடும்ப வாழ்க்கையில சந்தோஷமா இருக்கமுடியும்.. சுகன்யா இதை புரிஞ்சிகிட்டா போதும், அவளுக்கு ஒரு குடும்பம், குழந்தைன்னு ஆனா சரியாகிடுவா… அந்த செல்வா நல்லப்பையனாத்தான் தெரியறான்… ஆனா மனசுவிட்டு கலகலப்பா பேசமாட்டேங்கறான்.. சீக்கரத்துல சிரிக்க மாட்டேங்கறான். நீ என்ன நினைக்கறே சுந்து…?

“கொஞ்சம் ரிசர்வ்ட் டைப்போன்னு தோணுது? சுந்தரி அவரை ஆமோதித்தாள்.

“எப்படியோ… இன்னைக்கு அவங்க ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் உசுரா இருக்காங்க; அவங்களுக்குள்ள இப்படியே சந்தோஷமா இருந்தா சரி…!!”

3 Comments

Add a Comment
  1. Pothum story vera story podunga

  2. Kathai endi sonuga ya

    1. Vera kathai sonnga pls

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *