கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 36 6

“அதைப்பத்தி உனக்கென்னக் கவலை இப்போ?”

“ம்ம்ம்… முந்தாநாள் பாத்தீங்கல்ல… நம்ம சம்பத்தும், சுகன்யாவும் ஒருத்தர் கையை ஒருத்தர் குலுக்கிட்டு நின்னாங்களே? ஜோடிப்பொருத்தம் என்னமா சூட் ஆச்சு? எனக்குதான் அவளை மருமவளா வெச்சு வாழ குடுப்பினை இல்லே…?”

“ஆண்டவன்தான் சுகன்யா விஷயத்துல உன் புள்ளைக்கு பெயில் மார்க் போட்டுட்டானே? இந்த பேச்சை இத்தோட நிறுத்திக்கம்மா ராணி?”

“முடியலீங்க… மனசு கேக்கலை…. எவளோ மல்லிகாவாம்; மெட்ராஸ்லேருந்து பஸ் வெச்சிக்கிட்டு; ஜம்பமா பத்தாயிரத்துல ஒரு பொடவையை கையில சுருட்டிக்கிட்டு வந்துட்டா; அது என் பொண்ணோட செலக்ஷன்னு வேற பீத்திக்கிட்டா..”

“சரி ஒரு வழியா நீ பொலம்பி முடிச்சுடுடீ..”

“சுகன்யா கழுத்துல நாலு பவுன் தங்கச் செயினை போட்டுட்டா போதுமா? மீதியை கல்யாணத்துல போடுவாளாம்… என்னத்தப் போட போறாளோ?”

“ம்ம்ம்…” நல்லசிவம் இஷ்டமில்லாமல் தன் தலையை ஆட்டிக்கொண்டு நடந்தார்.

“இந்த குமாரு… எல்லாத்துக்கும் தலையை தஞ்சாவூர் பொம்மை மாதிரி அவங்க சொல்றதுக்கு எல்லாம் சரி சரின்னு ஆட்டறான்.. அவன் பொண்டாட்டி சுந்தரி தன் மோவாக்கட்டையை பிடிச்சிக்கிட்டு வாயெல்லாம் பல்லா நிக்கறா?”

“குடுத்து வெச்சவன் குமாரு… அவன் பொண்டாட்டி அவன் சொல்றபடி கேக்கறா..!” மெல்லியக் குரலில் சிரித்தார், நல்லசிவம்.

“ஆமாம்… நீங்கதான் மெச்சிக்கணும் சுந்தரியை… கட்டிக்கிட்ட புருஷனை… பதினைஞ்சு வருஷம் வூட்டு வாசப்படி ஏறவுடலை… என் மாமா புள்ளையை வீட்டைவுட்டு அடிச்சு தொரத்தினவதானே அவ…”

“ராணீம்மா… அடுத்தவங்க வீட்டுக் கதை நமக்கு எதுக்குமா… ஃப்ளீஸ்..” அவர் தன் முகத்தை அழுத்தமாக துடைத்துக்கொண்டார்.

“சரிங்க… நான் உங்கப் பேச்சை எப்பவுமே கேக்காத மாதிரி என்னை குத்திக்காட்டுங்க… ஆனா ஒரு உண்மையை நான் சொன்னா உங்களுக்கு பொறுத்துக்க முடியாதே?” அதற்கு மேல் ராணி அவரிடம் பேசாமல், தன் மனதுக்குள் புலம்ப ஆரம்பித்தாள்.

என் மாமா சிவதாணு என்னடான்னா, வீட்டுக்குள்ள தன் மருமவ சுந்தரி, இத்தினி வருஷம் கழிச்சி வந்ததே பெரிசுன்னு, வாயைப் பொத்திகிட்டு உக்காந்து இருக்காரு..

‘சுகன்யா, உனக்கு புடவை பிடிச்சிருக்காம்மா… செயின் பிடிச்சிருக்காம்மான்னு’, நாலு பேரு எதிர்ல எட்டுத்தரம் அந்த மெட்ராஸ்காரி மல்லிகா, கேள்வி மேல கேள்வி வேற கேட்டா? சுகன்யாவும் வெள்ளந்தியா…
“அத்தே… நல்லாருக்கு அத்தேன்னு குழையறா..’ அறியாத பொண்ணு.. அவளைச் சொல்லி என்ன பிரயோசனம்…

மெட்றாஸ்காரிங்கதானே ரெண்டு பேரும்… நடுக்கூடத்துல உக்காந்துக்கிட்டு, ஆத்தாளும் பொண்ணுமா, நல்லா நடிச்சாளுங்க, ஆக்டிங் குடுக்க சொல்லியாத் தரணும்?

என் வீட்டுக்கு மருமவளா வரவேண்டியவளை, எவளோ ஊர் பேர் தெரியாதவ, இன்னைக்கு கொத்திக்கிட்டுப் போறா… கல்யாணத்துக்கு அப்புறமா சுகன்யாவுக்கு இருக்கற அத்தனை சொத்தையும், மொத்தமா மடியில அள்ளி கட்டிக்கிட்டு வேற போவப் போறா, இதபத்தி சொன்னா என் புருஷனுக்கு என் மேல கோவம் வருது.

சிவதாணு குடும்பமும், எங்க குடும்பமும், ஒண்ணுக்குள்ள ஒண்ணா, பொண்ணு கொடுத்து, பொண்ணு எடுத்துக்கிட்டவங்க; அவரு எங்களுக்கு ஒண்ணுவிட்டா உறவு மொறையா இருந்தாலும், சொத்துக்கு பங்காளியா இருந்தாலும், மொத்தத்துல, ஒரு காலத்துல, சொத்து எங்க ரெண்டு வீட்டுக்கும் பொதுவான பாட்டன் வீட்டுதுதானே? பொது சொத்தை இப்ப நடுவுல வந்த எவனோல்லா அடிச்சிக்கிட்டுப் போறான்.

என் உரிமையை காத்துல பறக்க வெச்சுட்டான் இந்த குமாரு. நானும் வெக்கம் கெட்டுப் போய் எல்லாத்தையும் நேத்து வேடிக்கை பாத்துக்கிட்டு வந்து நிக்கறேன். எனக்கு என் புருஷன் இந்த விஷயத்துல சப்போர்ட் பண்ணாதானே? நான் ஒரு கையால தட்டினா எங்கேயாவது ஓசை வருமா?

எவனோ ஒருத்தன் முந்தாநாள், சுகன்யா கையில மோதிரம் மாட்டிட்டான்… என் புள்ளை, சுகன்யாவுக்கு மொறை மாப்பிள்ளை, அவ கழுத்துல தாலிகட்ட வேண்டியவன், அதை நேத்து நேர்ல பாத்துட்டு, ஏங்கிப் போய் நின்னான். என் புள்ளை மனசுல இருக்கறது, அவனை பெத்த எனக்கு புரியலையா?

அந்த செல்வா, அப்படீ என்ன சம்பாதிக்கறான்? என் புள்ளையை விட கம்மியாத்தான் சம்பாதிக்கறான்… அவங்க வீட்டு நெலைமையும், அப்படி ஒண்ணும் ஒஹோன்னு ஒண்ணும் தெரியலை. என் புள்ளையும் வீட்டுல ஒத்தை புள்ளையாத்தான் இருக்கான்… பிக்கல் பிடுங்கல்ன்னு சுகன்யாவுக்கு என் வீட்டுல என்ன இருக்கு? என் சொத்தும்… என் புருஷன் சொத்தும், மொத்தமா என் புள்ளை சம்பத் ஒருத்தனுக்குத்தானே?

3 Comments

Add a Comment
  1. Pothum story vera story podunga

  2. Kathai endi sonuga ya

    1. Vera kathai sonnga pls

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *