கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 19 3

கிழவன் என்னா கூத்தடிச்சாலும் … என் மேல இன்னும் தன் உசுரையே வெச்சிருக்கான். அஞ்சு நிமிஷம் நான் பக்கத்துல இல்லன்னா … கனகா; கனகா; எங்கேடிப் போயிட்டேன்னு ஒரே கூப்பாடுதான். நான் கிழவனுக்கு முன்னே போயிடனும்ன்னு பாக்கறேன். நான் போயிட்டா இவன் தனியா ஒரு நாள் இந்த வீட்டுல இருப்பானா? இல்லே இவன் எனக்கு முன்னாடி போனாலும், நான் எப்படி தனியா இருப்பேன்? ஆண்டவா, ரெண்டு பேரையும் ஒரே நாள்ல கூப்பிட்டுகப்பா.

“கனகா … சிவ சிவா; நம்ம வீட்டுக்கு விருந்தாளி ஏதோ வர்றாப்பல இருக்குடி!”

“செத்து பொணமா கிடந்தாகூட கேக்க ஆளு இல்ல … விருந்தாளி வராங்களாம்! எந்த ஊருலேருந்து வர்றாங்க?”

“பத்து நிமிஷமா … வூட்டு கூரையில ரெண்டு காக்கா உக்காந்துக்கிட்டு கரையுதுடி … ஒரு இட்லியை புட்டுப் போடேன்… சிவ சிவா; தின்னுட்டுப் போவட்டும்..”

“இன்னும் குளிக்கவே இல்லே நான் … குளிச்சுட்டுத்தான் குண்டானை அடுப்புல ஏத்தணும் ..”

“ம்ம்ம் ….”

“ஏண்டி கனகா … அவங்க வீட்டுக்கு போய் வருவோமா?”

“எவங்க வீட்டுக்கு”

“என்னாடி ஒண்ணும் தெரியாத மாதிரி பேசறே?”

“உங்க மனசுல இருக்கறது எவங்க வீடுன்னு எனக்கு என்னாத் தெரியும்”

“சரிடி நீ என் தோலை உரிச்சு பாக்கறதுலேயே குறியா இரு” அவர் சலித்துக்கொண்டார்.

“உக்ஹூம் … உங்க தோலை உரிச்சு யாருக்கு என்ன பலன்? உங்க மனசோடத் தோலை நல்லா உரிச்சுப் பாத்து, இருக்கற குப்பையை எல்லாத்தையும் வாரி வெளியில கொட்டுங்க! உங்களுக்கு புண்ணியமா போவும்!”

“வெங்காயத்தை உரிக்கற கதைதான் … உரிச்சுக்கிட்டே இருக்க வேண்டியதுதான், ஏதோ ஒரு மூலையை பெருக்கி, கொஞ்சம் குப்பையை வாரி கொட்டிட்டுத்தான் கூப்பிடறேன் உன்னை … அதாண்டி, கும்பகோணத்தல, நம்ம மருமவளை போய் பாத்துட்டு வரலாம்ன்னு; என்ன சொல்றே? உன் ஆசை மருமவளேதான் ஆட்டத்துல ஜெயிச்சதா இருக்கட்டும் … வர்றயா?”

“இன்னும் உங்க அகங்காரம் போவலையே?” நீங்கதான் அவகிட்டப் போய்
“வீட்டுக்கு வாம்மா”ன்னு ஒரு தரம் நம்ம மருமவளை கூப்பிடுங்களேன். அவ வரமாட்டேன்னா சொல்லுவா? இன்னும்,
“அவளா”
“நானா” ங்கற எண்ணம் உங்க மனசுக்குள்ளே இருக்கே?” எந்த குப்பையை எங்க கொட்டீனீங்களோ?”

“சிவ சிவா; சரி கிளம்பு … இப்பவே போயிட்டு வந்துடலாம்..”

“என்னங்க நிஜம்மாவா சொல்றீங்க… ரெண்டு சொம்பு தண்ணியை தலையில ஊத்திக்கிட்டு வந்துடறேங்க…” கனகாவின் முகம் பளிச்சென மலர வயது பெண்ணைப் போல் வேகமாக துள்ளி எழுந்தாள்.

“கனகா மெதுவாடி … சிவ சிவா; நீ ஒடற ஓட்டத்துல எங்கேயாவது விழுந்து கிழுந்து வெக்கப் போறே?”

கனகா, சிவதாணுவை மணந்து அந்த வீட்டுக்கு வந்த நாளிலிருந்து, தன் கணவனைத் தவிர வேறு யாரையும் அறியாதவள். அவர் சொன்னதுதான் அவளுக்கு
“வேதம்”. அவர் சொல்லுவதுதான் அவளுக்கு
“கீதை”. அதற்கு மேல் அவள் எதையும் யோசித்ததேயில்லை.
“நடக்கறதெல்லாம் நல்லதுக்கே” என நினைக்கும் மிக மிக எளிதான மன நிறைவு கொண்ட பெண் அவள்.

நாலு நாளாவே எதையோ மனசுக்குள்ள வெச்சுக்கிட்டு மருகிக்கிட்டு இருக்கிறாரு. கேட்டாலும் வாயை விட்டு சொல்லலை. தீடீர்ன்னு இன்னைக்கு மருமவளைப் போய் பாக்கலாங்கறார். கடைசியில, அந்த சிவம் தான், இவரு மனசை மாத்திட்டான் போல இருக்கு. எப்படியோ, வீட்டுக்குள்ள மருமக வந்தாள்ன்னா போதும். வர்ற தைக்கு எனக்கு எழுபது முடிஞ்சிடும். மருமக கிட்ட எல்லாத்தையும் குடுத்துட்டு, அக்கடான்னு உக்காரணும்ன்னு எவ்வள நாளா நானும் ஏங்கறேன்? அதுக்கான நேரம் வந்திடுச்சி. கனகா வேகமாக தலையில் தண்ணீரை ஊற்றிக்கொண்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *