கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 19 7

முருங்கை மரத்தில ரெண்டு காக்கைகள். எங்களை மாதிரி கிழ ஜோடிகளா? பாத்தா அப்படித்தான் தெரியுது. சிவ சிவா; எப்பவும் ஆம்பிளை பொம்பளை இதே நினைப்பு; எப்பவும் ஜோடிங்கன்னே ஏன் மனசு நினைக்கணும்? ஏன் அதுங்க அண்ணன் தம்பிங்களா இருக்கக்கூடாதா? ரெண்டும் விடாமல் கரைந்து கொண்டிருந்தன.

“கனகா”

“….”

பதிலே சொல்ல மாட்டா; சிவ சிவா; அவளை என்னைக்கு நான் பதில் சொல்லவிட்டேன். அவளை குறைசொல்லி என்னப் புண்ணியம்? வாயில்லாப் பூச்சி. என் இஷ்டப்படித்தான் அவ வாழ்ந்தா. அவ விருப்பத்தை, ஆசையை, வெளியிலே சொன்னதே கிடையாது. பொம்பளை வாயை தொறந்தா மூட மாட்டான்னு சொல்றானுங்க. ஆனா என் பொண்டாட்டி கனகா இப்படி; பத்து தரம் கேட்டாலும் எதுக்கும் பதில் கிடையாது. இப்படி ஒரு பெண் ஜென்மம்.

இப்பத்தான் கொஞ்ச நாளா, மசானத்துக்கு போகப் போற காலத்துல அப்பப்பா வாயைத் தொறந்து என் கிட்ட எதிர் வார்த்தைப் பேசறா. பேசறாளா? கிழவி கிறுத்துருவம் புடிச்சவ. ஊமைக் கோட்டான். வாயைத் தொறந்தா என்னைக் குத்திக்காட்டறேதே வேலை. என் தோலை உரிச்சு உள்ள என் உள் மனசுல என்ன இருக்குன்னு எட்டிப் பாக்கறதே இவளுக்கு தொழில்.

நான் வேஷம் போடறேனாம். வெளியில நெத்தியில பட்டையையும், கழுத்துல கொட்டையையும் கட்டிக்கிட்டு ஊருக்கு நல்லவனா வேஷம் போடறேனாம். ஆனா மனசு பூரா எனக்கு அழுக்குன்னு கூவறா. எல்லாரும் ஒண்ணு; எல்லா ஆத்மாவும் ஒரே சிவம் தான்னு சொல்லிட்டு; என் மருமவ என் ஜாதிக்காரி இல்லேன்னு அவளை வீட்டுக்கு வெளியில நிக்க வெச்சு அவமானப் படுத்தினேனாம். அதுக்கு பலனை இப்ப அவளும் அனுபவிக்கிறாளாம்.

எப்பவும் நான் பெரியவன்; அவ சின்னவ அப்படிங்கற பேதத்தை மனசுல வெச்சிக்கிட்டு குமையறேனாம். சிவ சிவா. கிழவி சொல்றது புரிய மாதிரியும் இருக்கு; புரியாத மாதிரியும் இருக்கு. அந்த சிவம் தானேயே என் உள்ளவும் நின்னு பேசறான்? இந்த விஷயம் ஏன் இவளுக்கு புரிய மாட்டேங்குது?

***

“கனகா காப்பி ரெடியாம்மா? சிறு குடலை பெருங்குடல் திங்குது?

“வர்றேங்க … விடிகாலம் செத்த கண்ணு அசந்து போச்சு; எழுந்துக்க லேட்டாயிடுச்சு.

“ம்ம்ம்ம்”

“காப்பிதான் போட்டுக்கிட்டு இருந்தேன்.”

“குடுடி … மணி எட்டாச்சுடி;அப்புறமா கதை சொல்லுவே!”

“சூடா இருக்கு … கெட்டியா புடிங்க டம்ளரை .. கீழ ஊத்திப்புட்டு என்னை திருப்பியும் ஓடவிடாதீங்க”

“அதான் கெட்டியா உன்னைத்தான் புடிச்சுக்கிட்டு இருக்கேனே! கங்கையில கால் வழுக்கி விழுந்தே! அப்படியே போடீன்னு உன்னை விட்டேனா; புடிச்சு இழுத்து கரையில போட்டேனே? இப்ப இங்க உன்னை விட்டுடுவேனா? நீ என்னை விட்டுட்டு ஓடிடாதடி தாயே!” சிவதாணு கனகாவின் கையை பிடித்து தன் எதிரில் உக்காரவைத்துக் கொண்டு மனைவியை முகத்தில் அன்பு வழியப் பார்த்தார்.

“நாலு தரம் காசிக்கு போய் வந்தாச்சு! எல்லாத்தையும் விட்டாச்சு! விட்டாச்சுன்னு தம்பட்டம் அடிச்சுக்க வேண்டியது. காலங்காத்தால பொண்டாட்டி கையை இறுக்கி புடிச்சாவது.” கனகாவின் முகத்திலும் சிரிப்பு பொங்கிக்கொண்டிருந்தது. என்னை விட்டா வேற ஆளு எனக்கு இல்லன்னு என் புருஷன் சொல்றான். எனக்கு இது பெருமைதானே? அவள் மனம் மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருந்தது.