கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 19 7

ஆசைகள் கூடி வரணும்ன்னா, உடலால அனுபவிக்கனும்ன்னா, செல்வாவும் என் கூட இருக்கணுமே? இப்பல்லாம் விடியற நேரத்துல அவன் நினைவுகள் எழுந்து என்னை செமையா இம்சை பண்ணுதே? சுகம்ன்னு இரவின் ஆரம்பத்துல நான் நினைக்கிற நினைவுகளே விடியல்லே என்னைக் கொல்லுதே? காதல் வயப்பட்டவள் மனம், தன் காதலனின் அருகாமைக்காக துடித்துக்கொண்டிருந்தது

இங்க வந்ததுலேருந்து என் மனசு ஏன் எதுலயும் ஒட்டமாட்டேங்குது? என்னமோ ஒரு புது எடத்துக்கு வந்துட்ட மாதிரி கண்ணு கொட்டின பாடில்லே. தன்னை மறந்த தூக்கம் வந்து, அந்த உறக்கத்துல நல்லதா ஒரு கனவு வரக்கூடாதா? அந்த கனவுலயாவது செல்வா என்னோட ஆசையா பேசக்கூடாதா? ஆசையா பேசறவன் மார்ல என் தலையை சாய்ச்சுக்கிட்டு கண் மூடி நான் நிம்மதியா தூங்கக்கூடாதா?

நிலவு மெல்ல மெல்ல தன் ஓளியை வீசத்தொடங்கிவிட்டது. நிலா; நிலா; நிலா வந்துட்டுது. நிலா ஆணா? இல்லை பெண்ணா? நிலவு ஒரு பெண்ணுன்னுதானே கவிகள் பாடறாங்க! சுகன்யாவின் மனது மகிழ்ச்சியில் துள்ளியது. இன்னைக்கு நிலவு எவ்வள அழகா இருக்கு? நிலா வெளிச்சமே மனசுக்குள்ள
“குளுகுளு” ங்கற உணர்ச்சியைக் குடுக்குதே? ஆனா இன்னைக்கு இந்த நிலா ஒரு சோகையான வெளிச்சம் கொடுக்குதே?

பௌர்னமிக்கு இன்னும் எத்தனை நாள் இருக்கு? இந்த நிலா மட்டுமில்லேன்னா, நெறைய காதலர்களும், கவிஞர்களும் திண்டாடித்தான் போயிருப்பாங்க. இன்னைக்கு நான் தூங்கின மாதிரிதான். சுகன்யா தன் கண்ணிமைகளை மெல்ல மூடிக்கொண்டாள். ரெண்டு நாட்களாக சரியான உறக்கமில்லாததால் மூடிய விழிகளின் பின் எரிச்சல் இன்னும் மிச்சமிருந்தது.

நான் அவனைப் பாக்கணும்ன்னு துடிச்சிக்கிட்டு இருக்கற மாதிரி செல்வாவுக்கும் என்னைப் பத்திய தவிப்பும், என்னை சந்திக்கணுங்கற ஆவலும் இருக்குமா?அவன் ஏன் எனக்கு ஒரு போன்கூட பண்ணலை? அதை நினைக்கும் போது அவளுக்கு கோபம் தலைக்கேறி தலை வெடித்து விடும் போலிருந்தது. மல்லிகாவும் தன் புள்ளையை என் கிட்ட பேசவேணாம்ன்னு சொல்லி வெச்சிருக்காளா? அம்மா சொல்றதுதான் இவனுக்கு வேத வாக்கு; பொட்டைப் பய? எவ்வள நாள் தான் பேசாமா இருப்பான்? பேசறன்னைக்கு இருக்குது அவனுக்கு; கொடியேத்தி, வெடி போட்டு வாண வேடிக்கை நடத்தறேன்!

ஒரு வாரமா அவனை நான் பாக்கலை; பேசலை; ஏன் இப்படி என் மனசு அவனை நெனைச்சு நெனைச்சு உருகிப் போவுது? ஒரு வாரம் கூட என்னால என் மனசை ஒரு கட்டுக்குள்ள வெச்சுக்க முடியலையே? அம்மா எப்படி முழுசா பதினைஞ்சு வருஷம் தன் துணையை பிரிஞ்சு இருந்தாங்க? நேத்து நான் பைத்தியக்காரி மாதிரி என் லவ்வர் கிட்டேருந்து போன் வரலேங்கற வெறுப்புல அவங்க மேல கோபப்பட்டேனே? அம்மாகிட்ட சாரி சொல்லணும். சுகன்யாவின் பார்வை வெட்ட வெளியில் நிலைத்திருந்தது.
“சுகா… எப்படியிருக்கேம்மா?”

“ம்ம்ம்… போரடிக்குது மாமா”

“ஏன்…”

“தெரியலை…”

“ஹூம்… தாத்தா, பாட்டி எல்லாரையும் பாத்துட்டு வந்தே போல இருக்கு?”

“ஆமாம்… மாமா.. ரெண்டு பேரும் என் மேல எவ்வளவு ஆசையா இருந்தாங்க தெரியுமா?”

“சோ … யூ ஆர் ஹாப்பி .. டுடே..”

“ரொம்ப ரொம்ப…

“நாளைக்கு அம்மா ஸ்கூல் போனதும், நான் தாத்தா வீட்டுக்குப் போவப் போறேன்”

“செய் … இங்க நீ தனியா என்னப் பண்ணப் போறே?

“ம்ம்ம் …”

“சாயந்திரம் அவருகிட்ட பேசினேம்மா” ரகு தன் தொண்டையைக் கணைத்துக்கொண்டார்.

“யாருகிட்ட …”

“செல்வா நேத்தைக்கு வீட்டுக்கு வந்துட்டானாம் …”

“அவன் பேச்சையே எங்கிட்ட எடுக்காதீங்க” …

“ஏம்மா கோபப்படறே?

“வீட்டுக்கு வந்தவன் எனக்கா போன் பண்ணி வந்துட்டேன்னு சொன்னான். மேனர்லெஸ் ஃபெலோ” அவள் குரலில் சினம் தொனித்தது.

சுகன்யா விருட்டென எழுந்து கட்டிலில் உட்க்கார்ந்து கொண்டாள். அவள் சற்றே குரலில் கோபத்துடன் பேசிய போதிலும்,
“அவன் நல்ல படியா வீட்டுக்கு வந்துட்டானா?” மனசு மகிழ்ச்சியில் துள்ளியது. காலையில குளிச்சுட்டு, சுத்தமா, நாலு செம்பருத்தி பூவையும், பவழமல்லியும் எடுத்துக்கிட்டு போய் தெரு கோடி பிள்ளையாருக்கு சாத்திட்டு வரணும்.

“சரிம்மா … உங்கப் பிரச்சனையை நீங்களே பேசித் தீத்துக்குங்க” அவர் கேலியாகச் சிரித்தார்.