கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 14 8

“நான் உங்களைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்; உங்கம்மா கிட்ட பேசி அவங்களை நம்ம பக்கம் திருப்ப முயற்சி செய்யுங்க; அவங்க ஒத்து வரவேயில்லன்னா என்ன செய்யமுடியும்? அப்ப, நீங்க போட்டிருக்கற பேண்ட், சட்டையோட என் வீட்டுக்கு வந்துடுங்க; மீதியை நான் பாத்துக்கறேன்னேன். அதுக்கு, நான் எப்படி உங்க வீட்டு மாப்பிள்ளையா இருக்க முடியும்ன்னு கேக்கறாரு? இதைக் கேட்டா எனக்கு எரிச்சல்தான் வருது?”

“சரி நான் உங்க வீட்டுக்கு வந்துடறேங்கறேன் … அதுக்கும் கொஞ்சம் பொறும்மா. எங்க அப்பாவுக்கு உன்னைப் பிடிச்சிருக்கு; எங்க அம்மா மனசும் மாறிடும். அவங்க ரெண்டு பேரோட ஆசீர்வாதத்தோடத்தான் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க விரும்பறேன்னும் சொல்றார். எது வந்தாலும் நான் பாத்துக்கறேன். நீ தைரியமா இருன்னு சொல்ற துணிவு அவருக்கு வரலை. அவருக்கு என் மேல ஆசையும் இருக்கு. கூடவே அவங்க அம்மா கிட்ட பயமும் இருக்கு. கூழுக்கும் ஆசை. மீசைக்கும் ஆசை; என்னப் பண்றதுன்னு எனக்குப் புரியலை.

“நேத்து ராத்திரி எட்டு மணி வாக்குல ஆஸ்பத்திரியில நான் அவரோட ரூம்ல தனியா இருந்தேன். அப்ப என் பாஸ் சாவித்திரி அவரை பாக்கறதுக்கு வந்தா. என்னை அங்க அந்த நேரத்துல செல்வா பக்கத்துல அவங்க எதிர்பார்க்கல. போகும் போது சொன்னாங்க,
“செல்வா நான் உங்கிட்ட சில விஷயம் தனியா பேசணும்.”

“வீ ஆர் இன் லவ்; அந்த லேடிக்கு இது நல்லாத் தெரியும். நாங்க கல்யாணம் பண்ணிக்கறதா இருக்கோம்ன்னும் தெரியும். இவர் என்ன சொல்லணும்பா? எதுவாயிருந்தாலும் நீங்க சுகன்யா முன்னாடி பேசலாம்; இங்கேயே பேசுங்கன்னு சொல்லாம, அவ எதிர்ல பொத்திக்கிட்டு இருந்தவரு, அவ போனதுக்கு அப்புறம் என்னைக் கொடையறாரு.”

“இவங்க எதுக்கு என் கிட்ட தனியா பேசணும்? இவங்க பொண்ணுதான் என்னை அவங்க வீட்டுக்கு போனப்ப ஹுமிலியேட் பண்ணி அனுப்பிச்சாளே? இப்ப இந்தம்மா என் கிட்ட என்ன பேசணும்ன்னு நினைக்கிறாங்க? என்னைத் திருப்பியும் அவ பொண்ணை கல்யாணம் பண்ணிக்க சொல்லுவாங்களா? இதை எங்கிட்ட கேட்டா நான் என்ன சொல்றது? சாவித்திரியை நான் ஒரு புடி புடிக்கிறேன்னு சொல்றேன்; அதுக்கும் வேணாங்கறாரு. ஏண்டா காதலிக்க ஆரம்பிச்சோம்ன்னு இருக்குப்பா.”

“இதுதாம்பா எனக்கு செல்வாகிட்ட சுத்தமா புடிக்கலை. வழ வழா கொழ கொழன்னு, சரியான வெண்டைக்காய்ப்பா அவரு … அதுவும் மோர்க்குழம்புல போட்ட வெண்டைக்காய்ப்பா அவரு.”

“வேற எதாவது, உனக்கு அவன் கிட்ட பிடிக்காம இருக்கலாம் …” அவர் இழுத்தார்.

“அப்பா முதல் நாள் நானும், அவரும் தனியா மீட் பண்ண அன்னைக்கு முதல்ல கோயிலுக்குத்தான் போனோம்; அப்புறம் பீச்சுக்கு போய் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருந்தோம்; நேரமாச்சு … நான் போயிட்டு வர்றேன்னு சொன்னேன். என்னடா, இவ எப்படி தனியா போவா, நான் கொண்டு விடட்டும்மான்னு கூட கேக்கலே. சரி போயிட்டு வான்னு சொல்லிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *