கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 14 8

“சுந்து … அந்த பையனோட அப்பா என்ன சொல்றார் …”

“அந்த மனுஷன் சாதுவா, நல்ல மனுஷனாத்தான் தெரியறார். ரகுவுக்கு கோபம் பொத்துகிட்டு வந்துச்சு. நான் தான் சும்மா இருடான்னு அன்னைக்கு அடக்கி வெச்சேன். நம்ம பொண்ணு அவன் கூட பழகிட்டாளேன்னு பாக்க வேண்டியதா போச்சு; அப்புறம் அந்த மனுஷன் எல்லார் எதிர்லேயும் எங்க ரெண்டு பேரையும் கையெடுத்து கும்பிட்டு, என் பொண்டாட்டி சார்பா நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். அவ இப்படி பேசி இருக்கக் கூடாது. அவ நல்லவதான். கொஞ்சம் முன் கோபி. நீங்க தப்பா நினைக்காதீங்கன்னார்.”

“அதெல்லாம் சரிம்ம்மா; அவரு இவங்க காதலுக்கு ஒத்து வராறா இல்லையா?

“ம்ம்ம். அவரு ஒத்து வர்ற மாதிரிதான் எனக்கு படுது. என் பையன் கொஞ்சம் உடம்பு தேறி வீட்டுக்கு வரட்டும். உங்க கிட்ட நான் நிதானமா பேசறேன்னு சொன்னார். நாங்களும் நீங்க சொல்றது சரி .. எங்க வீட்டுக்கு நீங்க ஒரு தரம் முறைப்படி வாங்க அப்படின்னு சொன்னோம். சரின்னாவர், எங்க ரெண்டு பேரையும் தன் கார்ல வீட்டுக்கு அனுப்பி வெச்சார். அன்னைக்குத்தான் ரகு ஊருக்கு போனான்.

“இன்னைக்கு புதன், இன்னும் ரெண்டு நாள் கழிச்சு வெள்ளிக்கிழமை, இவளை கூப்பிட்டுக்கிட்டு நான் நம்ம ஊருக்கு போவலாம்ன்னு இருக்கேன். ரகுவும் ஊருக்கு வர்ரேன்னு சொல்லியிருக்கான். இவ கிராமத்துக்கு வந்து ஒரு பத்து நாளு இருந்தா, இவ மனசுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்ன்னு பாக்கிறேன். அங்க இவ ஊருல இருக்கும் போது, அந்த பையனோட அப்பாவுக்கு போன் பண்ணலாம்னு ரகு சொல்லியிருக்கான்.”

“ஆனா அங்க போனா உங்க அத்தை பொண்ணுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை. இந்த கதையெல்லாம் அவங்களுக்குத் தெரியாது. இப்பத்தான் நம்ம உறவு காரங்க கொஞ்சம் கொஞ்சமா நம்ம வீட்டுக்கு வந்து போறாங்கா; இந்த விஷயம் தெரிஞ்சா அவங்க என்ன டென்ஷன் கொடுப்பாங்களோன்னு நெனைச்சா எனக்கு பயமா இருக்கு?”

“ஏண்டி சுந்து நீ என்ன பேசற? சுகன்யாவுக்கு ஒருத்தனை புடிச்சு போச்சு. அவங்க தொட்டு பழகினாங்கன்னு வேற சொல்றே. அப்புறம் சம்பத்துக்கு எப்படி இவளை கட்டி வெக்கறது? எங்க அத்தை பொண்ணை நான் ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கிறேன். இன்னொரு தரம் அவங்க உன் கிட்ட வந்தா என் நெம்பரை குடுத்து என் கிட்ட பேச சொல்லு.”

“சரிங்க … அதைத்தான் நானும் சொல்றேன்; நம்ம குடும்பத்து ஆம்பிளை நீங்க வந்துட்டீங்க. இனிமே உங்க பாடு; உங்க பொண்ணு பாடு; நீங்க உங்க பொண்ணை யாருக்கு கட்டி வெக்கறீங்களோ, கட்டி வெய்யுங்க. அவ சந்தோஷமா இருக்கணும். அவ்வளவுதான் எனக்கு வேணும். இவ்வளவு நாள் தனியா உங்க பொண்ணை வெச்சுக்கிட்டு சமாளிச்சுட்டேன். இப்ப என்னால முடியல. இதுக்கு மேல என்னை விட்டுடுங்க.”

சுந்தரி நீளமாக மூச்சு விடாமல் பேசி நிறுத்தினாள். சுகன்யா ஏதும் பேசாமல் தன் தந்தையின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தாள். அவள் கண்கள் மூடியிருந்தன. தன் தந்தையின் கையை பிடித்துக்கொண்டு அவர் கையில் கட்டியிருந்த வாட்ச்சை மேலும் கீழுமாக தள்ளி குழந்தையைப் போல் விளையாடிக் கொண்டிருந்தாள்.

“அப்பா … அந்த சம்பத்து … மாசத்துக்கு ஒரு லட்சம் சம்பாதிக்கட்டும் … இல்ல ரெண்டு லட்சம் சம்பாதிக்கட்டும்; உங்க சொந்தமா இருக்கட்டும்; இல்ல அம்மா சொந்தமாவே இருக்கட்டும்; நம்ம சொந்தத்துல யாரையும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் … இப்பவே, இங்கேயே உங்க கிட்ட நான் சொல்லிடறேன்… ஊர்ல வந்து அவன் உன்னை பாக்க வரான், சும்மா பேருக்கு உக்காந்து அவங்க கிட்டு பேசும்மான்னு … என்னை யாரும் டென்ஷன் பண்ணக்கூடாது …
“சுகன்யா தீர்மானமாக பேசினாள்.
“சுந்து … எனக்கு ஒரு கப் சாயா குடிக்கணும் போல இருக்கு, நார்த்லயே கொஞ்ச நாளா இருந்ததாலே இந்த டீ குடிக்கற பழக்கம் என்னை தொத்திக்கிச்சு … ஒரு கப் போட்டுத் தரயாம்மா…?”

“சுகா உனக்கும் வேணுமாடி?

“ம்ம்ம் … குடும்மா”

“உன் லவ்வர் பேரு என்னம்மா?”

“செல்வா…ப்பா”

“சுகா …” நீ இந்த செல்வாவை உண்மையிலேயே கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு ஆசைப்படறியா?” இந்த கேள்விக்கு என்ன அர்த்தம்? சுகன்யா மட்டுமல்லாமல், சுந்தரியும் தன் கணவனை ஒரு வினாடி வியப்புடன் பார்த்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *