கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 14 12

“ஏங்க முதல்ல நான் பேசி முடிச்சிடறேன்; அப்புறமா நீங்க அவளை கேளுங்க.”

“சரி … சரி … நீயே சொல்லு”

“உங்களுக்கு ஞாபகமிருக்கா, நம்ம காலேஜ்ல நம்ம கூட வேலுன்னு படிச்சாரே … அவர் ஆர்ட்ஸ் படிச்சார்; எல்லாம் அவங்களும் உங்க குடும்பத்துக்கு தூரத்து ஒறவு தான். மாயவரத்துல பொண்ணு எடுத்தாருங்களே அவருங்க. அவர் பொண்டாட்டி கீதா என் கூடத்தான் இப்ப பி.ஜி. டீச்சரா வேலை செய்யறா. நம்ம பொண்ணை அவங்க புள்ளைக்கு கட்டிக்கணும்ன்னு தினம் அவ என்னை நச்சரிக்கறா.”

“உங்க ஒண்ணு விட்ட அத்தை பொண்ணு, சுகாவை தன் புள்ளை சம்பத்துக்கு கேக்கறாங்க…”

“யாரு லட்சுமி அத்தை பொண்ணு ராணியா? அவ நார்த்ல பாம்பேயிலத்தானே இருந்தா?”

“அவளேதான்; ராணி தீடிர்ன்னு ஒரு நாள் நம்ம வீட்டுக்கு வந்தாங்க. அப்பவே எனக்கு புரிஞ்சு போச்சு, சுந்தரி, உன் மேல எனக்கு எப்பவுமே கோபம் இல்லடி. நாங்கதான் இந்த ஊர்லேயே இல்லயே? நான் இருந்தா இப்படியெல்லாம் ஆக விட்டிருப்பேனான்னு பிட்டு போட்டாங்க. இப்ப அவங்க பையன் பெங்களூர்ல மாசம் ஒரு லட்சம் சம்பாதிக்கறானாம். ஐ.டி.யில இருக்கானாம். ஊருக்கு வந்தப்ப எப்பவோ நம்ம பொண்ணை பாத்திருக்கான். அம்மா கிட்ட சொன்னானாம்; சுகாவை எனக்கு பிடிச்சிருக்கு; கேட்டுப் பாருங்கன்னு சொல்லியிருக்கான்.”

” நம்ம பொண்ணு சுகா இப்ப கை நிறைய சம்பாதிக்கறா. பாக்கறவங்க கண்ணுக்கு நெறைவா இருக்கா. நான் கஷ்டப்பட்டப்ப யாரும் என்னான்னு ஒரு வார்த்தை என்னை கேக்கலைங்க. ஆனா இப்ப என் பொண்ணு அழகா வளர்ந்து நிக்கறாளே … நாலு பேரு என் கிட்ட வரத்தானேச் செய்வாங்க?”

“ம்ம்ம் …. அதெல்லாம் இருக்கட்டும்; நீ என்ன பதில் சொன்னே அவங்களுக்கு?”

“நமக்குள்ள ஆயிரம்தான் இருந்தாலும், பொண்ணை பெத்தவரு நீங்க; உங்களை ஒரு வார்த்தை கேக்காமா, அதுவும் உங்க நெருங்கின உறவுகாரங்களுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்? பொறுமையா அவங்க சொல்றதையெல்லாம் காது குடுத்து கேட்டுக்கிட்டேன். வேற என்ன செய்வேன் நான்?

“ராணியோட வீட்டுக்காரர் இப்ப ரிடையர் ஆகி கிராமத்துல தான் இருக்காரு. உங்க மச்சான் ரகுவை மடக்கி மடக்கி, எப்பப் பாத்தாலும் ஒரே கட்ட பஞ்சாயத்து வெக்கிறாரு. உன் அக்கா கல்யாணத்தை நான் எதுக்கவே இல்லைப்பா. எதுத்தவன்ல்லாம் போய் சேர்ந்துட்டாங்க. ஜாதின்னு சும்மா வெட்டியா பேசறவனைப் பாத்தாலே எனக்கு புடிக்காது. உன் அக்கா சுந்தரி கிட்ட எடுத்து சொல்லு. நம்ம குழந்தை தனியா மெட்ராஸ்ல ஏன் கஷ்டப்படணும்; என் பையனுக்கு நான் கட்டிக்கறேங்கறாரு; உங்ககிட்ட கேட்டு சொல்றேன்னு ரகு பதில் சொல்லியிருக்கான்.”

“சுந்தரி, உன் பொண்ணை அவ கட்டின புடவையோட என் வீட்டுக்கு அனுப்பி வைடி; நான் வேற என்ன உன்னை கேக்கப் போறேன். குமாருக்குன்னு இருக்கறதெல்லாம் இவளுக்குத்தானே அப்படிங்கறா உங்க அத்தைப் பொண்ணு.”

“ம்ம்ம் … இவங்களுக்கு சரியான பதில் சொல்லித்தான் ஆகணும். நமக்கு நெருக்கமா இருக்கற உறவாச்சே இவங்க.”
“உங்க பொண்ணு என் பேச்சை இந்த விஷயத்துல கேக்கறதே கிடையாது.”

“அம்மா சும்மா சொல்லாதேம்ம்மா … நான் உன் பேச்சை எப்பம்மா கேக்கலை? செல்வா கிட்ட சும்மா சும்மா பேசாதேன்னு நீ சொன்னே. ரெண்டு நாளாச்சு அவன் கிட்ட நான் இன்னும் பேசவே இல்லை தெரியுமா உனக்கு?” சுகன்யா வெடிக்க ஆரம்பித்தாள்.

“சுகா … நீ சும்மா இரும்மா. இப்ப நானும் அம்மாவும் தானே பேசிக்கிட்டிருக்கோம்.”

“சுகா, நான் என்ன சொல்றேன்னா, நம்ம உறவு காரங்க நம்ம வீட்டுக்கு வந்தா, முகம் கொடுத்து பேசுன்னு சொல்றேன் … வேற என்ன சொல்றேன்? எப்பவாது நீ ராணி அத்தை கிட்ட சிரிச்சு பேசி இருக்கியா? பாக்கறவங்க உன்னைப்பத்தி என்ன நெனப்பாங்க? உன்னை திமிர் பிடிச்சவன்னு நெனைச்சுடக்கூடாதும்மா.”

“என்னங்க, உங்க பொண்ணு, அம்மா, நீ கல்யாணப் பேச்சை எடுத்தா இந்த ஊருக்கே வரமாட்டேன்னு அடம் புடிச்சா. என்னா இப்படி பேசறாளேன்னு இவ மாமன் கேட்டதுக்கு, என் கூட வேலை செய்யறவனை ஆசைப்படறேன். நான் அவனைத்தான் கட்டிப்பேன்னு போன மாசம் என் கிட்ட அப்படி ஒரு சண்டை போட்டுட்டு இங்க வந்தா.”

“இவ மாமனும் இவ கூட சேர்ந்துகிட்டு, அக்கா நீ சும்மாயிரு, நான் அவளுக்கு புரிய மாதிரி சொல்றேன்னு சொல்லிட்டு, இப்ப இவ இஷ்டப்படியே இவ ஆசைப்படற பையனையே பண்ணி வெச்சுடலாம்ன்னு கூத்தடிக்கிறான்.”

“நான் ஆசைப்பட்ட பையனைத்தான் கட்டிப்பேன்னு சொல்லிட்டு வந்தவ, போன வாரம் அந்த பையனை சரியான சண்டைக்கு இழுத்து இருக்கா. என்னை லவ் பண்றேன்னு சொல்றதுக்கு முன்னாடி என் அப்பனைப் பத்தி நீ கவலைப் பட்டியா? என் கையை புடிக்கறதுக்கு முன்னாடி என் அப்பன் யாருன்னு நீ கேட்டியா? இப்ப உங்க அம்மா பேச்சை கேட்டுக்கிட்டு என் அப்பா யாரு? என் சொத்து சுகம் என்னான்னு ஏன் கேக்கறே?இவங்களுக்குள்ள இப்ப ஒரே வாக்கு வாதம், சண்டை. எனக்கு இதையெல்லாம் கேட்டா உடம்பு நடுங்கி போவுது.”