கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 14 8

“அப்பா நீங்க சொந்தமா கார் வெச்சிருக்கீங்களாப்பா? சுகன்யா ஆவலுடன் கேட்டாள்.”

“ராஜா … நான் தான் காலையிலேயே சொன்னேனே? எங்கிட்ட இருக்கறதெல்லாம் உனக்குத்தான்னு; இந்த காரும் உன்னுதுதாண்டா செல்லம்.” அவர் தன் மகளின் தலையை அன்புடன் வருடினார்.

“நான் கூட சுமாரா கார் ஓட்டுவேம்பா,”

“சுகா … உனக்கு கார் ஓட்ட ஆசையா இருக்கா … ஆமாம் அது என்னா சுமாரா ஓட்டுவே?”

“என் ஃப்ரெண்ட் ஒருத்தி ஹாஸ்டல்ல இருக்கும் போது எனக்கு கார் ஓட்ட கத்துக்குடுத்தாப்பா … ஆனா அம்மா பயப்படறாங்கப்பா.”

“அம்மா பயந்துகிட்டே இருக்கட்டும் … இந்த வண்டியை நீயே வெச்சுக்கோ. தாராளமா நீ ஓட்டி பழகு. நான் பெர்மிஷன் குடுக்கறேன்.

“என்னங்க; ராத்திரிக்கு உங்களுக்கு டிஃபன் பண்ணட்டுமா இல்லை, சமையல் பண்ணட்டுமா? ராத்திரிக்கு இங்கேயே எங்க கூட இருங்க. உங்க கிட்ட முக்கியாமான விஷயம் கொஞ்சம் பேசணுங்க.” சுந்தரி அவர் முகத்தை ஏக்கத்துடன் பார்த்தாள்.

“நீ எது பண்ணாலும் நான் சாப்பிடறேம்மா. டிரைவர் யாராவது கிடைச்சா, காஞ்சிபுரம் போகும் போது, நான் உன் கூட ஜாலியா பேசிக்கிட்டு வராலாம்னு பாக்கிறேன்; இல்லன்னா, நான் கெஸ்ட் ஹவுஸுக்குப் போய், வண்டியை எடுத்துக்கிட்டு, அப்படியே என் ட்ரெஸ்ல ஒரு செட் எடுத்துக்கிட்டு வந்துடறேன்; காலையிலே இங்கேயிருந்தே போயிடலாம். நீ பேசறதையெல்லாம் ராத்திரி பூரா நான் கேக்கிறேன்.

“அப்பா … நீங்க எங்க வொர்க் பண்றீங்கப்பா?” சுகன்யா தன் தந்தையிடம் கேட்டாள்.

“எங்க கம்பெனி கல்கத்தாவுலேருந்து ஆபரேட் ஆகுதும்மா; டெக்ஸ்டைல் கூட்ஸ், லெதர் அயிட்டம்ஸ் எக்ஸ்போர்ட் பண்றோம்; எலக்ரானிக்ஸ் அயிட்டங்கள் இம்போர்ட் பண்றோம். இந்த கம்பெனியோட சதர்ன் ரீஜன் ப்ராஞ்ச் சென்னையில இருக்கு. நான்தான் இந்த பிராஞ்ச்க்கு இப்ப மேனேஜர். என் கீழ நாற்பது பேர் வேலை செய்யறாங்க. தமிழ் நாட்டிலே ஃபீல்ட் ஆஃபீஸ் ஒரு நாலு இருக்கு. நான் இங்க மாத்தலாகி வந்து மூணு வாரமாகுது. கம்பெனி, எனக்குன்னு தனியா டிரைவரோட என் ஆபீஸ் கார் குடுத்திருக்கும்மா. உன் தாத்தாவையும் பாட்டியையும் கிராமத்துல நம்ம வீட்டுல விட்டுட்டு வந்திருக்கேன். இப்போதைக்கு நான் கம்பெனி கெஸ்ட் ஹவுசுல தங்கி இருக்கேன்.”

“அப்பா நீங்க காமர்ஸ் தானே படிச்சீங்க”

“ஆமாம். மொதல்ல நான் எம். காம். படிச்சேன். அப்புறம் நம்ம வீட்டை விட்டு போனதுக்கு அப்புறம் எம்.பீ. ஏ. படிச்சேன். லா டிகிரியும் வாங்கினேன். எல்லாத்துக்கும் உங்கம்மா கொடுத்த ஒரே ஒரு நாள் ஒதைதான் மோட்டிவேஷன். நான் இன்னைக்கு இருக்கற நல்ல நிலைமைக்கு உங்கம்மாவுக்குத்தான் நன்றி சொல்லணும்.” அவர் உரக்க சிரித்தவாறு சுந்தரியைப் பார்த்து கண்ணடித்தார்.

“போங்க … பழசெல்லாம் இப்ப எதுக்குங்க இவ கிட்ட சொல்லிகிட்டிருக்கீங்க; எனக்கு கஷ்டமாயிருக்குங்க.” சுந்தரி ஒரு குற்ற உணர்வுடன் சிரிக்க, அவள் கண்களில் தெரிந்த, காதலின் தாபத்தையும், ஏக்கத்தையும் பார்த்த குமாருக்கு உள்ளுக்குள் போதை ஏறியது.

“சுகா, என்னைப் பத்தி வேற என்னத் தெரியணும் உனக்கு?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *