கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 14 8

“அப்பா … ரொம்ப தேங்க்ஸ்ப்பா …”

“எதுக்கும்மா … தேங்க்ஸ் …?

“நீங்க செல்வாவை பார்க்காமலே அவரை உங்க மாப்பிளையா ஏத்துக்கறேன்னு அப்ரூவ் பண்ணதுக்குதாம்பா … இந்த நிமிஷம் நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேம்பா. நீங்க அவரைப் பாத்துட்டு சொல்லுங்கப்பா – என் செலக்ஷன் எப்படீன்னு”

“சுந்தரி … நீ சிம்பிளா ஒரு சமையல் பண்ணி வைம்மா; நான் அந்தப் பையனை பார்க்க வர்றதா சொல்லியிருக்கேன். எனக்காக நடராஜன் அங்க ஆஸ்பத்திரியில காத்துக்கிட்டு இருப்பார். திரும்பி வந்து நான் இன்னைக்கு உன் கையாலத்தான் சாப்பிடப் போறேன்; சாப்பிட்டுட்டு இங்கேயே தங்கிட்டு, நாளைக்கு காலையில அம்பாளை கட்டாயம் தரிசனம் பண்ணியே ஆகணும்…”

“சரிங்க …”

“சுகா, நீயும் என் கூட வர்றயாமா?”

“எதுக்குங்க … தினம் தினம் இவ அங்க ஏன் போகணுங்க; நீங்க மட்டும் போய்ட்டு வாங்களேன் …” சுந்தரி குறுக்கிட்டாள்.

“அப்பா .. நிஜம்மாத்தான் கூப்பிடறீங்களா? … இல்ல கிண்டல் பண்றீங்களா?”

“அயாம் சீரியஸ்; நாட் ஜோக்கிங்…”

“எனக்கும் அவரைப் பார்க்கணும் போல இருக்குப்பா; நேத்துலேருந்து அவர் என் கிட்ட போன் பண்ணி பேசவே இல்லே; அம்மா வேண்டாம்ன்னு சொன்னதால நானும் பேசலை; நான் அவருகிட்ட பேசவே கூடாதுன்னு மதியானத்துலேருந்து நினைச்சிக்கிட்டு இருந்தேன்; இப்ப நேராப் பாத்து சண்டை பிடிக்கணும்ன்னு ஆசையா இருக்குப்பா?” அவள் சிரித்தாள்.

“சுகா … என்னடிப் பேசறே நீ; நீ அடிக்கற கூத்து கொஞ்சம் கூட நல்லாயில்லே; எனக்கு கோபம் வர மாதிரி நடந்துக்காதே; உன் அப்பா பக்கத்துல இருக்காருன்னு ரொம்ப துள்ளாதே; கொஞ்சம் அடங்குடி; சும்மா அந்த பையன் கிட்ட தொட்டதுக் கெல்லாம் சண்டை போட வேணாம்ன்னு நான் சொல்றேன்; அவனை நீ ஏதாவது சொல்லுவே; அவன் உன்னை ஏதாவது கேப்பான்; அப்புறம் நீ முஞ்சை தூக்கி வெச்சிக்கிட்டு அழுது புலம்ப வேணாம். நீ இப்ப அங்க போக வேண்டாம். உன் நல்லதுக்குத்தான் நான் சொல்றேன். பெரியவங்க சொல்றதை நீ கேளு. இந்த ஸ்வீட், காரம், மல்லிப்பூவை எடுத்துகிட்டு போய் வேணி கிட்ட குடுத்துட்டு வா. அவ பால்கோவான்னா, உயிரை விடறா …
“ சுந்தரி குரலை உயர்த்தி தன் பெண்ணை முறைத்தாள்.

“சரி … சரி … நீ பாட்டுக்கு கத்தாதே … நீயும் தான் உன் வீட்டுக்காரர் பக்கத்துல இருக்காருன்னு ரொம்பத்தான் துள்ளி தொப்புன்னு குதிக்கறே” ஸ்வீட் வைத்திருந்த தட்டை எடுத்துக் கொண்ட சுகன்யா கோபத்துடன் முனகிக்கொண்டே தட தடவென கீழ் போர்ஷனுக்கு ஓடினாள்.

“மெதுவா போடி … விழுந்து கிழுந்து வெக்காதே ..” சுந்தரியின் குரல் அவள் காதில் விழவேயில்லை….
“சுந்து … குழந்தையை ஏண்டி இப்படி வெரட்டறே?”

“நீங்க சும்மா இருங்க; இப்படி கண்ணுல எண்ணையை ஊத்திகிட்டு நான் அவ பின்னாடி நிக்கும் போதே, அவ என்ன வேலை பண்ணி வெச்சிருக்கான்னு உங்களுக்குத் தெரியுமா?”

“அப்படி என்னடி பண்ணிட்டா? அவளுக்கு புடிச்ச பையனை கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்றா … அவ்வளவுதானே?”

“அது வரைக்கும் தான் உங்களுக்குத் தெரியும்” சுந்தரி தன் முகத்தை தன் தோளில் இடித்துக்கொண்டாள்.

“சுந்து, நீ ஏன் சுகன்யாவை என் கூட வர வேணாங்கறே?” தன் அருகில் உட்க்கார்ந்திருந்த சுந்தரியின் தோளில் தன் கையைப் போட்டுத் தன்னருகில் இழுத்தார்.

“சும்மா என்னை ஏன் ஏன்னு கேக்காதீங்க …” சுந்தரி விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இவங்க ஒருத்தரை ஒருத்தர் தொட்டு பழகிட்டாங்கன்னு சொன்னே …” அவர் அவள் முகத்தை தன் புறம் திருப்பி கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டார்.

“அதனாலத்தான்… மேல மேல இவங்க தப்பு பண்ண வேணாம்ன்னு சொல்றேங்க …”

“ம்ம்ம் … இவங்க நெருக்கம் எது வரைக்கும் போயிருக்கு? உனக்கு எதாவது தெரியுமா?”

“நாமும் தான் காதலிச்சோம் … ஆன கல்யாணம் ஆகற வரைக்கும் நாம ரெண்டு பேரும் உதட்டுல கூட முத்தம் கொடுத்துக்கிட்டது கிடையாது … ஒருத்தர் கையை ஒருத்தர் பிடிச்சுக்கிட்டு நடப்போம் … அதுவே நம்ம காலேஜ்லே பெரிய விஷயமா நம்ம ஃபெரெண்ட்ஸ்ங்க பேசினாங்க; கிராமத்துல குசுகுசுன்னு பேசிகிட்டாங்க; ஒரு தரம் கோவில் மதிலுக்குப் பின்னால முத்தம் குடுக்கறேன்னுட்டு என் கன்னத்தை கடிச்சீங்க. எனக்கு வலி உசுரு போச்சு; உங்களுக்கு அப்ப ஒழுங்கா முத்தம் குடுக்கக் கூட தெரியாது. நம்ம நெருக்கம் இவ்வளவுதான்.
“ அவள் உரக்க சிரித்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *