கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 14 8

“அப்ப நடராஜனைப் பாத்து முடிவா என்ன சொல்றீங்கன்னு கேட்டுடட்டுமா?”

“நீங்க இப்படி ஒரே வழியா அவசரப் பட்டா எப்படீங்க? நீங்க இன்னும் அவனை பாக்கலையே?”

“சுந்து … சுகன்யாவுக்கு செல்வாவைப் பிடிச்சிருக்கு; இப்பத்தான் உன் பொண்ணு தெளிவா சொன்னா நான் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு; அந்த பையனுக்கும் நம்ம சுகாவை பிடிச்சிருக்கு; செல்வாவோட அப்பாவுக்கும் நம்ம பொண்ணை பிடிச்சிருக்குன்னு நீ சொல்றே; அவனோட அம்மாவை அவன் தான் கன்வின்ஸ் பண்ணணும்.

“உங்க எல்லோருக்கும் அவனைப் பிடிச்சிருக்கு. அதனால செல்வாவை எனக்கு பிடிச்சவனா நானும் ஏத்துக்கறேன்; அவ்வளவு தானே? யாருகிட்ட தான் குறையில்லை? சுகன்யா அவன் கிட்ட இருக்கற குறைகள்ன்னு சொன்னதெல்லாம் ரொம்ப ரொம்ப சின்ன விஷயங்கள்; வாழ்க்கையில அடிபட்டா, அவன் போக்கும் கொஞ்சம் கொஞ்சமா மாறிடும்.”

“அப்பா நீங்களும் அவரை ஒரு தரம் பாத்துட்டு உங்க விருப்பத்தைச் சொல்லுங்கப்பா; அப்பத்தான் எனக்கு சந்தோஷமா இருக்கும்..” சுகன்யா அவர் கையை பிடித்துக்கொண்டாள்.
“சுகா, இன்னும் கொஞ்ச நேரத்துல அவனைத்தான் நான் பார்க்கப்போறேன்.”

“அப்பா நீங்க என்ன சொல்றீங்கப்பா?”

சுகன்யாவும், சுந்தரியும் அவர் சொன்னதைக் கேட்டு ஒரு வினாடி திகைத்தார்கள். சுகன்யாவுக்கு தன் தகப்பன் என்ன சொல்கிறார் என சுத்தமாகப் புரியவில்லை.

“சுகா! இன்னைக்கு நடக்கறதெல்லாம், சினிமாவுல; சீரியல்ல; நான் படிக்கற கதைகள்ல்ல வர்ற மாதிரி விசித்திரமா இருக்குன்னு, நீ காலையில சொன்னே; இப்ப நான் சொல்றேன், உண்மையிலேயே நேத்துலேருந்து என் வாழ்க்கையில, ஒண்ணு பின்னால ஒண்ணா நடக்கற நிகழ்ச்சிகளை பாக்கறப்போ, எனக்கும் நீ சொன்ன அந்த எண்ணம்தான் வருது.”

“புரியற மாதிரி சொல்லுங்க” சுகன்யாவும், சுந்தரியும் ஒரே குரலில் பேசினார்கள்.

“சுகா, கங்கூலி அண்ட் கங்கூலிங்கற கம்பெனியிலத்தான் நான் ப்ராஞ்ச் மேனேஜரா இருக்கேன். அந்த நடராஜன் என் கீழத்தான், என் கம்பெனியிலத்தான், சீஃப் அக்கவுண்ட்ஸ் ஆஃபீசரா வொர்க் பண்றார். ரொம்ப நேர்மையான மனுஷன். கை ரொம்ப ரொம்ப சுத்தம். கம்பெனி பணத்துல, ஒரு பைசா வீணா செலவு பண்ண விட மாட்டார். அவர் கையெழுத்து இருக்கற பேப்பர் எங்கிட்ட வந்தா, நான் படிக்காமலே கையெழுத்துப் போடுவேன் … அப்படி ஒரு சுத்தமான மனுஷன். நேத்து ராத்திரி நான் அவர் வீட்டுலத்தான் டின்னர் சாப்பிட்டேன்.

“மல்லிகா என்னை அவங்க புருஷனுக்கு ஆபீசரா பார்க்கலை. தன் கணவரோட ஒரு நல்ல நண்பராகத்தான் என்னை நடத்தினாங்க. மல்லிகாவும், அவங்க பொண்ணு மீனாவும் மனசார நேத்து ஓடி ஓடி என்னை உபசரிச்சாங்க. அந்தம்மாவுக்கு கை மட்டும் தாராளமில்லே, அவங்க மனசும் தாராளமானதுன்னுத்தான் நான் நினைக்கிறேன்.”

“நிஜமாவே நீங்க சொல்ற இந்த விஷயம் எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்ட்ரேஞ்சாத்தான் இருக்குப்பா …”

“அவங்க பையன் தமிழ்செல்வன், ஒரு ஆக்ஸிடெண்ட்ல அடிபட்டு ஆஸ்பத்திரியில இருக்கறதா அவங்க வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் தான் எனக்கு தெரியவந்தது. இந்த மாதிரி இக்கட்டான சமயத்தில அவங்க வீட்டுக்கு போனதுக்காக நான் ரொம்ப வருத்தப்பட்டேன். மீனாவும், மல்லிகாவும் பகலெல்லாம், உன் செல்வா கூட இருந்துட்டு, நான் சாப்பிட வரேன்னு நடராஜன் சொன்னதும், அவனை தனியா விட்டுட்டு, எனக்காக வீட்டுக்கு வந்து விருந்து தயார் பண்ணியிருக்காங்க.”

“ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறுதான் பதம் பாக்கணும்மா. நான் நடராஜனை பர்ஸனலாவும், அவருக்கு நான் ஆஃபீசருங்கற ஹோதாவிலேயும் அஞ்சு வருஷமா பதம் பாத்துக்கிட்டு இருக்கேம்மா. அவர் மகன் செல்வாவை நான் பதம் பார்க்க வேண்டாம்மா .. அவனும் உன்னை மாதிரி சின்னப் பையன் தானேம்மா… அனுபவமில்லாதவன்தானே … நாளடைவில அவனுக்கும் பக்குவம் வந்துடும்; எல்லாம் சரியா போயிடும். கவலைப் படாதே.”

“யாரோ உள்நோக்கத்தோட உன்னைப் பத்தி சொன்னதை வெச்சி மல்லிகா உன்னைத் தவறா மதிப்பிட்டிருக்கலாம். அவங்க வீட்டுல போய் நீ வாழணும். உனக்காக நான் அவங்க கிட்ட, உன் தந்தையா போய் ஒரு தரம் பேசிப் பார்க்கிறேன். அவங்க மனசுல உன்னைப் பத்தி இருக்கற தப்பான அபிப்பிராயத்தை மாத்த நான் முயற்சி பண்றேன். நீ நல்லா இருக்கணும்ன்னு உங்கம்மா நினைக்கிற மாதிரி அவங்க தன் பிள்ளைக்கு ஒரு நல்ல பெண் மனைவியா வரணும்ன்னு நெனைக்கறதுல தப்பே இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *