கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 14 12

“உன்னைப் பத்தி பேசிட்டு, திரும்பவும் நான் எங்கே போறது?

“சரிப்பா … நீங்க சொல்றது எனக்கு புரியுது.”

“குட் கேர்ள் … அவன் அப்பாவைப் பத்தி சொல்லிக்கிட்டிருந்தே நீ”

செல்வாவோட அப்பா பேரு நடராஜன்; அவரு சீஃப் அக்கவுண்ட்ஸ் ஆபிசரா, கங்கூலி அண்ட் கங்கூலிங்கற, ஒரு ஃப்ரைவேட் கம்பெனியில வொர்க் பண்றார். அவரோட அம்மா பேரு மல்லிகா, ஹவுஸ் மேக்கரா இருக்காங்க; செல்வா தங்கை பேரு மீனாட்சி; செல்லமா அவளை மீனான்னு கூப்பிடுவாங்கப்பா.”

“ஒரு தரம் நான் அவகிட்ட அவசரப்பட்டு சண்டை போட்டுட்டேன். ஆனா அவ இப்ப எனக்கு நல்ல ஃப்ரெண்டுப்பா; ரொம்ப ரொம்ப ஸ்வீட் கேர்ள்ப்பா; அவங்க இந்திரா நகர்ல, சொந்த வீட்டுல இருக்காங்க. எனக்காக அவங்க வீட்டுல அவங்க அம்மாகிட்ட சண்டை போட்டு இருக்கா. அவங்க கார் வெச்சிருக்காங்க.” சுகன்யாவும் தன் டீயை உறிஞ்ச ஆரம்பித்தாள்.

சுகன்யா, நடராஜன் பேரையும், அவர் குடும்பத்தினர் ஒவ்வொருத்தரின் பேரையும் சொன்னபோது, குமாரசுவாமி ஒரு நிமிடம் திகைத்துத்தான் போனார். ஆண்டவா, நீ எப்படியெல்லாம் என் வாழ்க்கையில விளையாடறே? இதுக்கு என்ன அர்த்தம்? சில வினாடிகள் அவர் மவுனமாக இருந்தார்.

“என்னங்க, ஒரு விஷயம் நான் சொல்ல மறந்துட்டேங்க. ஹாஸ்பெட்டல்ல செல்வாவுக்கு நினைவு வந்தவுடனே முதல்ல அவன் வாயில வந்த வார்த்தையே
“சுகன்யா”.
“சுகன்யாவை நான் பார்க்கணும்.” நம்ம சுகன்யாவைத்தான் முதல்ல பாக்கணும்ன்னு அவன் சொன்னதா டாக்டர் சொன்னார்.”

“கடைசியா நானும் ரகுவும் ஐ.சீ.யூவுல அவனைப் பார்க்க போனோம். எங்க எதிர்லேயே, நம்ம சுகா கையை எடுத்து தன் மார்ல வெச்சிக்கிட்டாங்க. அவனால அப்ப பேசவே முடியலை. வலியில துடிச்சிக்கிட்டிருந்தான். அவன் கண்களை பாத்தேன். அதுல பொய், பாசாங்கு எதுவும் இல்லைங்க. அப்ப அந்த நேரத்துல, நம்ம பொண்ணு அவன் பக்கத்துல இருக்கறதைத்தான், அவன் விரும்பறான்னு அவன் மூஞ்சியில எழுதி ஒட்டியிருந்துதுங்க. அந்தப் பையன் நம்ம பொண்ணை நிஜமாவே கல்யாணம் பண்ணிக்க விரும்பறான். சும்மா டயம் பாஸ்க்காக நம்ம பொண்ணு பின்னால சுத்தலீங்க. இது என்னோட ரீடிங்.

“உன் பொண்ணு அவனை ஆசைபட்டுடாளேன்னு சொல்லாதே. அவனை உனக்கு நிஜமா பிடிச்சிருக்கா?”

“ஆமாங்க … எனக்கு அவனை பிடிச்சிருக்குங்க.”

“ரகு என்ன சொல்றான்”

“அவனுக்கும் செல்வாவை பிடிச்சிருக்குங்க.”