கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 13 7

தன் தந்தையின் தோளில் முகம் புதைத்து குலுங்கி குலுங்கி அழது கொண்டிருந்த தாயைப் பார்க்க முடியாமல், மனம் கலங்கி, சுகன்யாவும் தன் மூக்கை உறிஞ்சி விசும்ப ஆரம்பித்தாள். விசும்பிக் கொண்டே, தன் தாயின் முதுகை மெதுவாக தடவிக்கொடுத்தாள். அழாதேம்மா … நீ அழுததெல்லாம் போதாதா? இன்னும் ஏன் அழுவறே? அதான் வந்துட்டாருல்ல … அப்பாகிட்ட சந்தோஷமா பேசும்மா?

“நீ சும்மா இருடி … பெருசா பேச வந்துட்டே … நான் பண்ண ஒரே ஒரு தப்புக்கு … இவரு கொடுத்த தண்டனை கொஞ்சமா … நஞ்சமா … ? அவள் குரல் விம்ம, குமாரின் மடியில் தன் முகத்தை புதைத்துக் கொண்டு விசும்பினாள்.

“சுந்து … பீளீஸ் … தப்பு எல்லாம் என்னுதுதான். நான் ஒத்துக்கறேன் … என்னை மன்னிச்சிடும்மா… இப்ப நீ அழாதே … அழறத நிறுத்து … என்னால நீ அழறதை தாங்க முடியலைம்ம்மா …” சொல்லியவர் குரல் தழுதழுத்து, குரல் குளறப் குமாரசுவாமி பேசினார்.

சட்டென சுந்தரி தன் அழுகையை நிறுத்தியவள், கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தாள். கலங்கியிருந்த தன் கணவனின் கண்களையும், முகத்தையும், தன் புடவை முந்தானையால் துடைத்தாள். பத்து நொடிகள் அவன் முகத்தை உற்றுப் பார்த்தவள், வயது வந்த தன் பெண் அருகில் நிற்பதையும் பொருட்படுத்தாமல், அவன் கழுத்தில் தன் கைகளைப் போட்டு அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.
“ குமரு … எழுந்து போய் உங்க முகத்தை கழுவிக்கிட்டு வாங்க … சுகா … பால்கனியில துண்டு காயுது … அப்பாக்கிட்ட கொண்டாந்து குடும்மா …” அவள் குரலில் தெளிவு பிறந்துவிட்டது. மனதில் மீண்டும் மெல்ல மெல்ல தன் கணவனைப் பார்த்த மகிழ்ச்சி எழ ஆரம்பித்தது.

சுந்தரி புடவையை இழுத்து இடுப்பில் சொருகிக்கொண்டவள், ஃபிரிஜ்ஜைத் திறந்து பார்த்துவிட்டு, சுகா … இன்னைக்கு வீட்டுல சுத்தமா பால் இல்லடா கண்ணு … நீ ஆஃபீஸ்லேருந்து வரும் போது வாங்கிட்டு வர சொல்லணும்ன்னு நெனைச்சிக்கிட்டு இருந்தேன். இப்ப போனா … அந்த தெரு கோடி கடையில பால் கிடைக்குமா? நான் போய் வாங்கிக்கிட்டு வந்துடறேன்.

பாத்ரூமுக்குள்ளிருந்து முகத்தை துடைத்துக்கொண்டே வந்த குமார் … சுந்து … குழந்தையை ஏன் போவ சொல்றே … பக்கத்துலதானே கடையிருக்கு … நான் போய் வாங்கிட்டு வர்றேன், …”

அப் … அப்ப்பா … நான் அப்பவே சொன்னேன் … எல்லாம் வாங்கினீங்க … பாலை விட்டுட்டீங்கன்னு, கேட்டீங்களா? … அவள் விஷமத்துடன் தன் தந்தையை நோக்கி கண்ணடித்து சிரித்தாள். மனம் இலேசாகி இயல்பு நிலைக்கு வந்திருந்த குமாரும் … ஆமாண்டா கண்ணு … நீ சொன்னே … நான் தான் கேக்கலை … அதனால நான் போய் பாலை வாங்கிட்டு வர்றதுதான் சரி … கடை எங்கேயிருக்கு சொல்லு … அவரும் தன் மகளைப் பார்த்து உரக்க சிரித்தார். பால் என்று சொன்னதும் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நமட்டுத்தனமாக சிரிப்பது எதற்கு என்று புரியாமல் சுந்தரி விழித்தாள்.

“ஏன் இப்ப ரெண்டு பேரும் சிரிக்கிறீங்க … சொன்னா நானும் சிரிப்பேன்ல்லா” சுந்தரி தன் பெண்ணையும், கணவனையும் மாறி மாறிப் பார்த்தாள்.

“அப்பா, நீங்க ட்ரஸ் மாத்திக்கோங்க … மாமா இங்க வாங்கி வெச்சிருக்கற புது லுங்கி ஒண்ணு உள்ள ரூம்ல கட்டில் மேல எடுத்து வெச்சிருக்கேன் … அம்மா, நீ உன் வீட்டுக்காரரை கேளு … அவர் சொல்லுவாரு நாங்க ஏன் சிரிச்சோம்ன்னு … அதை தெரிஞ்சுக்கலைன்னா, உனக்கு இன்னைக்கு சத்தியமா ராத்திரிக்கு தூக்கம் வராது … அப்புறம் என்னையும் தூங்க விடமாட்டே நீ … நீ அழுததைப் பாத்து, நானும் அழுது இப்ப எனக்கு தலை வலிக்கற மாதிரி இருக்கு … எனக்கும் சூடா ஒரு காஃபி குடிக்கணும் போல இருக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *