கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 13 7

“அப்படி என்ன வயசாயிடுச்சு உங்களுக்கு? கிழவன்ல்லாம் டை அடிச்சி, செண்ட் அடிச்சிக்கிட்டு டீன் ஏஜ் பொண்ணுங்க பின்னாடி திரியறானுங்க?

“எனக்கு ஐம்பது முடிஞ்சிடுச்சும்மா”அவர் வெகுளியாக பேசினார்.

“அப்பா … ஐம்பது வயசுல ஆசை வரக்கூடாதா … அதுவும் கட்டின பொண்டாட்டிக்கிட்ட? சுகன்யா முகத்தில் நமட்டு சிரிப்புடன் முணுமுணுத்தாள்.

” நீ … அப்பாக்கிட்ட செம அடி வாங்கப் போறே ? என் சுகா இன்னும் சின்னப் பொண்ணுன்னு நெனைச்சிக்கிட்டு இருக்கேன்; நீ என்னடான்னா எல்லாத்தையும் கரைச்சு குடிச்சப் பெரிய பாட்டி மாதிரி பேசறே? அவர் விளையாட்டாக அவள் முதுகில் அடித்தார்.

“அ … அப்பா … உங்களுக்கு நான் இப்படி பேசினது பிடிக்கலன்ன … வெரி வெரி சாரிப்பா …” அவள் முகம் சற்றே தொங்கிப் போனது.

“சீ..சீ… அப்படியெல்லாம் இல்லடா கண்ணு … இன் ஃபேக்ட், ஐ லைக் யுவர் சென்ஸ் ஆஃப் ஹூயுமர்,”

“அப்பா, அப்படின்னா, ஒரு சின்ன சஸ்பென்ஸ்; நீங்க என் கூட வரதை நான் அம்மா கிட்ட சொல்லப் போறதில்லை.”

சுகன்யா குழந்தைதனமாக மீண்டும் ஒரு முறை தன் நாக்கை நீட்டி குமாரசுவாமியை நோக்கி கண்ணடித்தாள். சுகன்யா ஹோட்டலில் சாப்பிட்டதும் ஒரு
“ஸ்வீட் பான்” வாங்கி வாயில் போட்டு மென்று கொண்டிருந்தாள். நாக்கும் உதடுகளும் நன்றாக சிவந்திருந்தன.

“நீ நிஜமாவே அம்மாவுக்கு போன் பண்ணப் போறியா?”

“ஏன் வேண்டாமாப்பா”

“சுகா … நான் வீட்டுக்கு வர்றது சஸ்பென்ஸாவே இருக்கட்டும் . என் மனைவியை நான் எந்த விதத்திலேயும் ஒரு இக்கட்டான சூழ் நிலையில் அல்லது தர்மசங்கடமான நிலையிலே வெக்க விரும்பலை. நானே விருப்பத்தோட அவளைப் பார்க்க வந்ததா இருக்கட்டும்.” மகளிடம் தன் விருப்பத்தை சொல்லியவர், அதற்கு மேல் எதுவும் பேசாமல் மவுனமாகிவிட்டார்.

ஒரக்கண்ணால் தன் தந்தையைப் பார்த்த சுகன்யா, அவர் தோளில் தன் தலையை சாய்த்துக் கொள்ள, குமாரசுவாமி, தன் இடதுகையால், தன் மகளை ஆசையுடன் அணைத்துக்கொண்டார். இருவரும் வீடு வரும் வரை எதுவும் பேசவில்லை.

நேத்து ரகுவோடு பேசிய போது, அவன் சுகாவைப் பத்தி கூட்டி கொறைச்சு எதுவும் சொல்லிடலை. உள்ளதை உள்ள மாதிரிதான் சொல்லியிருக்கான். சுகன்யாவுக்கும் என் பொண்டாட்டி சுந்தரிக்கும் உருவ ஒற்றுமை நெறய இருக்கு. உருவம்தான் ஒத்து போகுதுன்னு பாத்தா, அவ எப்படி நாக்கை நீட்டுவாளோ அதே மாதிரி இவளும் தன் நாக்கை சுழிச்சு நீட்டறா. அவளோட நிறைய பழக்கங்கள் இவளை அப்படியே தொத்திக்கிட்டு இருக்கு.

சுந்தரி மாதிரியே இவளும் பிடிவாதக்காரியா இருப்பாளோ? இவளுக்கும் அவளை மாதிரியே எப்பவாது தீவிர கோபமும் வருமா? சுந்தரி எப்படி பாசத்தை கொட்டுவாளோ அப்படித்தான் இவளும் அப்பா, அப்பான்னு உருகறா? ஆனா சுந்தரிக்கு கோபம் வந்தா பத்து நாளானாலும் பேசமா மவுனமா இருந்தே ஆளைக் கொண்ணுடுவா? இந்த விஷயத்துல சுகன்யா எப்படியோ? இனிமே பாக்கத்தானே போறேன்.

என்னால சின்னப் பிரச்சனைன்னு சொன்னாளே .. ?? அந்த பிரச்சனை என்னவாக இருக்கும்? அந்த பிரச்சனையாலத்தான் அம்மாவும், மாமாவும் சென்னைக்கு வந்திருக்காங்கன்னு சொன்னாளே? சுகா வயசுக்கு வந்த பொண்ணு; பெத்தவன் என் கண்ணே பட்டுடும் போல இருக்கு. நல்லா சிவப்பா மூக்கும் முழியுமா அழகா இருக்கா. நல்லாப் படிச்சி, தனக்குன்னு வேலையைத் தேடிக்கிட்டு சம்பாதிக்கறா; மாடர்னா ட்ரஸ் பண்ணிக்கிட்டு இருக்கா. நேர் பார்வை பார்த்து தன்னம்பிக்கையோடு வெளிப்படையா, மனசுல இருக்கறதை தெளிவா பேசறா.

பாக்கற வயசு பசங்களுக்கு இவ மேல ஆசை வர்றது ரொம்ப சகஜம். ஒரு வேளை எங்களை மாதிரி என் பொண்ணும் எந்த பையனாயாவது மனசுக்குள்ள நெனைச்சுக்கிட்டு இருக்காளா? அதுல ஓண்ணும் தப்பு இல்லே. இவளையும் காதல் விட்டு வெக்கலையா? எங்களுக்கிருந்த மாதிரி இவங்க நடுவிலேயும் ஜாதி பிரச்சனை குறுக்க வந்திடுச்சா? வரதட்சினை பிரச்சனையா … பணம் ஒரு பிரச்சனையே இல்லே … நான் தான் வந்துட்டேனே; பையன் நல்லவனா இருந்தா போதும்; … கேக்கறதுக்கு மேல நான் அள்ளிக் குடுத்துடறேன் … என் பொண்ணு சந்தோஷம் தான் முக்கியம். இல்லே, வேற எதாவது பிரச்சனையா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *