கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 13 7

“அம்மா … நீ பாடற இந்த பாட்டு, இப்ப நம்ம வீட்டுல இருக்கற சிச்சுவேஷனுக்கு பர்பெக்ட்டா சூட் ஆவுதும்மா …
“ சுகன்யா ஸ்டவை ஆன் செய்து பாலை காய்ச்ச ஆரம்பித்தாள்.

சுந்தரி தன் மகளின் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள். சுகன்யாவைப் பார்த்து ஆதுரமாக புன்னகைத்தாள். அந்த கணத்தில் தன் பெண்ணுடன் சுந்தரி தன்னை மிகவும் சகஜமாக உணர்ந்தாள். அவள் கண்ணுக்கு, சுகன்யா தன் சொந்த மகளாகத் தெரியாமல், தன் வயதையொத்த, தன் மனதை மிக எளிதாக புரிந்து கொள்ளும் ஒரு சினேகிதியாக, கேட்க்காமலேயே தன் நட்புக்கரம் நீட்டுபவளாக அவள் தெரிந்தாள். அவள் மீது அவள் மனதில் எல்லையில்லா நட்பும், நேசமும் ஒருங்கே பொங்கியது. டக்குன்னு என் மன நிலையை புரிஞ்சுக்கிட்டாளே? முத்தம் குடுக்கறேன்னு குமரு பாட்டுல என்னை கடிச்சி வெச்சிட்டான். நான் சொன்னா கேட்டாத்தானே? இவ என் புருஷன் கன்னத்துல பண்ண காயத்தை பாத்துட்டு நமட்டு சிரிப்பு சிரிச்சாளே?

“எதுக்கும்மா … தேங்க்ஸ் சொல்றே எனக்கு?”

இடுப்பில் லுங்கியும், மார்பில் பனியனுமாக, கழுத்தில் மின்னும் மெல்லிய தங்க சங்கிலியுமாக, உள்ளறையிலிருந்து, தாயும் பெண்ணும் பேசுவதைக் கேட்டுக்கொண்டே, வெளியில் வந்த குமார், ஹாலில் வசதியாக தரையில் உட்க்காந்து, சுவரில் சாய்ந்து கொண்டார்.

“எங்க மனசு புரிஞ்சி, சமயோசிதமா எங்களைத் தனியா விட்டுட்டு, சட்டுன்னு தூக்கை எடுத்துக்கிட்டு தெருவைப் பார்க்க நடந்தியே; அந்த தாராள மனசுக்குத்தாம்மா” சுந்தரியின் குரல் தழுதழுத்தது.

“சும்மா எமோஷனல் ஆவாதேம்மா, உன் சந்தோஷம்; என் சந்தோஷம்ம்மா; நீ எனக்கு செய்றதுக்கு முன்னாடி நான் பண்ணது ஒண்ணுமேயில்லம்மா” சுகன்யா காபியை, சுந்தரியிடமும், தன் தந்தையிடமும் கொடுத்தாள். சுகன்யாவும் ஒரு கோப்பையில் காபியுடன் தன் தகப்பன் பக்கத்தில் உட்க்கார்ந்து கொண்டாள்.

“சுந்து, கோவில் விட்டு கோவில் போவேன்னு நீ பாடிக்கிட்டு இருந்தே? நான் இப்பத்தான் வீட்டுக்குள்ளே நுழையறேன். நீ என்னடான்னா, என்னை விட்டுட்டு கோவிலுக்கு போறேங்கறே; நியாயமாடி இது?”

“சே… சே… குமரு, எப்பவும் கோவில், சாமி விஷயத்தை கிண்டல் பண்ணாதீங்க; நாளைக்கு லீவுதானே; நீங்களும் எங்க கூட வாங்களேன், காஞ்சிபுரம் பக்கத்துலதானே இருக்கு; எனக்கு காமாட்சியை கண்டிப்பா தரிசனம் பண்ணனுங்க; சுகா, நாளைக்கு போறதுக்கு நீ டிக்கட் புக் பண்ணிட்டியாம்மா?”

“சாரிம்மா … அப்பா காலையில போன் பண்ணதும், எனக்கு என் தலை எது கால் எதுன்னு புரியலை; இதுல நாம போட்ட புரோகிராம் எனக்கு மறந்து போச்சும்மா.”

“போடி இவளே … உன்னைப் போய் நம்பினேன் பாரு; என்னங்க … நீங்க வீட்டுக்கு வரணும்; என் பொண்ணு கல்யாணம் நல்ல படியா நடக்கணும்; அம்பாளைப் பாத்து வேண்டிக்கணும்ன்னு நேத்து நினைச்சேன்; இன்னைக்கு நீங்க வந்துட்டீங்க; அவ கருணையை நினைச்சா என் உடம்பு சிலுத்து போவுதுங்க; நான் நாளைக்கு என்ன ஆனாலும் சரி, அம்பாளை போய் பாக்கத்தான் போறேன்.”

தன் கணவனைப் பார்த்துக் கொண்டே பேசியவள், அவர் வாங்கி வந்திருந்த மல்லிகை பூவை கிள்ளி ஒரு துண்டை தன் தலையில் வைத்துக் கொண்டவள், இன்னொரு துண்டை, சுகன்யாவின் தலையில் செருகினாள். ஒரு துண்டு பால்கோவாவையும், சிறிது மிக்சரையும், ஒரு தட்டில் வைத்து குமாரிடம் கொடுத்தாள்.

“சுந்து … இதுக்குப் போய் குழந்தையை ஏன் சலிச்சுக்கறே? நாளைக்கு உனக்கு அம்பாளை பாக்கணும்; அவ்வளவுதானே? நான் ஒரு ஏற்பாடு பண்றேன். நாம எல்லோருமே ஒண்னா போய் வருவோம்.”

“எப்படிப்பா … இதுக்கு மேல நாம மாம்பலம் போய் டிக்கட் புக் பண்ணி; நீங்க வேற ஈவீனிங் யாரையோ பார்க்க போகணும்னு சொல்றீங்க; கஷ்டம்பா.” சுகன்யா முனகினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *