கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 13 7

“வாம்மா … மணி ரெண்டாக போகுது … நீயும் பசியோட இருப்பே .. போய் எதாவது சாப்பிடுவோம் …” இருவரும் எழுந்து நடக்க ஆரம்பித்தார்கள்.
“சுகா, நீ அம்மா நேத்து மழையில நனைஞ்சான்னு சொல்றே; நீ காஃபி போட்டு குடுத்தேங்கறே? அப்ப சுந்தரி உன் கூட சென்னையிலா இருக்கா?
“ஆமாப்பா; அம்மா இங்க சென்னையிலத்தான் இருக்காங்க …

“அம்மா வேலையை சென்னைக்கு மாத்திக்கிட்டாளா?
“இல்லப்பா … அம்மா கும்பகோணத்துலத்தான் வேலை செய்யறங்க; என்னால ஒரு சின்னப் பிரச்சனை நம்ப வீட்டுல; அம்மாவும், மாமாவும் அதனால இங்க வந்தாங்க … அந்தப் பிரச்சனை இன்னும் முழுசா முடிவுக்கு வரலை. மாமா திரும்பிப் போயிட்டார் … இன்னும் ரெண்டு நாள் அம்மா இங்க என் கூடத்தான் இருப்பாங்கா; நான் பத்து நாள் லீவு போட்டிருக்கேன்; வெள்ளிக்கிழமை அம்மாவும் நானும் நம்ப ஊருக்கு கிளம்பறோம்.”
“உனக்கு என்னப் பிரச்சனைடா செல்லம் … நான் தீத்து வெக்க முயற்சி பண்றேம்மா ..”
“நீங்க முதல்ல வீட்டுக்கு வாங்கப்பா … வந்து அம்மாவை பாருங்கப்பா; அதுக்கப்புறம் நான் எல்லாத்தையும் விவரமா சொல்றேன்.” என் சுகாவுக்கு பிரச்சனையாமே? இந்த உலத்திலே பிரச்சனை இல்லாதவங்களே இல்லையா? குமாரசுவாமி மவுனமாக அவளுடன் நடந்தார்.

“என்னப்பா சாப்படறீங்க”

“எனக்கு ஒரு புல் மீல்ஸ் சவுத் இண்டியன் தாலி ஆர்டர் பண்ணும்மா.” தன் செல்லில் வந்திருந்த செய்திகளை அவர் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார்.

“நான் தவா ரொட்டியும், ஒரு ப்ளேட் ஷாஹீ பனீர் அண்ட் சுட்ட அப்பளம் வாங்கிக்கப் போறேன்; இங்க இந்த அயிட்டம் நல்லா இருக்கும்பா.”

“வெரி குட்; நார்த் இண்டியன் டிஷஸஸ் உனக்கு பிடிக்குமா? அச்சி லட்கி ஹோ தும்” அவர் புன்னகைத்தார்.

“ம்ம்ம் … பாபூஜி, முஜே ஷாஹீ பனீர் கீ சப்ஜி பகுத் அச்சி லக்தி ஹை; க்யா ஆப் பசந்த் நஹீ கர்தே?” மகள் சரளமாக இந்தியில் பேசியதும் குமராசாமி அவளை வியப்புடன் பார்த்தார்.

“சுகா, உனக்கு இந்தி தெரியுமா?”

“தோடி தோடி ஆத்தி ஹை; மறந்துட்டீங்களாப்பா? … அம்மா ஹிந்தியிலே கோல்ட் மெடல் வாங்கினவங்கன்னு?” அவள் தன் குரலில் இலேசாக வருத்தம் தொனிக்க கேட்டாள்.

“நோ … நோ … எனக்கு நல்லா ஞாபகம் இருக்கும்மா … அம்மா சொல்லிக் கொடுத்தாளா உனக்கு, கேட்டுத் தெரிஞ்சுக்கறேம்மா ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *