எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன் 5 46

ஹேமா : பாய் மனோஜ்.

போனை கட் செய்துவிட்டு, சிறிதுநேரம் தனக்குதானே சிரித்தாள். பின் படியில் இறங்கினாள்.

மாலை 6 மணிக்கு,
மாலை 4 மணிக்கு பாலாவை அழைத்துக்கொண்டு பொள்ளாச்சிக்கு சென்ற ரகு 6 மணிக்கு வீட்டிற்கு அவன் நண்பர்களுடன் வந்தான். அவன் ஹாலுக்கு வர அங்கே பத்மாவதி, மோகன், ராஜா மூவரும் டீ குடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ரகு ராஜாவை பார்த்து “டேய் அண்ணி எங்க டா?” என்று கேட்டான்.

ராஜா : மாடிக்கு போனாங்க அண்ணா

ரகு : சரி அவ கீழ வராலானு பாரு, வந்தா படிக்கட்டுல நிக்கவை

ராஜா : ஏன்னா?

ரகு : சொல்றேண்டா முதல்ல போய் பாரு என்று சொல்ல ராஜா எழுந்து கிச்சனுக்குள் சென்றான்.

பத்மாவதி : எதுக்குடா அவனை பார்க்க சொல்ற

ரகு : சொல்றேன்மா என்று சொல்லிவிட்டு ஒரு ஸ்டூல் ஒன்று எடுத்து வந்து நடு ஹாலில் வைத்தான். பின் அதன்மேல் அவன் வாங்கி வந்த கேக்கை வைத்து ஓபன் செய்தான். மோகன் அதில் எழுதிருப்பதை பார்த்துவிட்டு “ஹேமாக்கு இன்னைக்கு பர்த்டே வா” என்றான். ரகு “ஆமாப்பா ஒரு சர்ப்ரைஸ் இருக்கட்டும்னு யார்கிட்டயும் சொல்லல” என்று சொல்லிவிட்டு கேக்கை பிரித்து ஸ்டூலில் வைத்தான். பின் பாலா கையில் வைத்திருக்கும் கவரை வாங்கி அதில் இருக்கும் “SNOW SPRAY , POPPER” அனைத்தையும் எடுத்து குமார் வசந்த், பாலா,வினோத் அனைவர் கையிலும் கொடுத்தான். பின் ஒரு கேண்டில் எடுத்து அதை கேட்கின் நடுவே வைத்து பற்ற வைத்தான். பின் பாலாவிடம் “மச்சான் எல்லாம் ஓகே தானே” என்றான். பாலா “எல்லாமே சூப்பர்டா கண்டிப்பா ஷாக் ஆகுவாங்க” என்றான்.

ரகு : டேய் ராஜா ஹேமா வந்துட்டாளா

ராஜா : இதோ கீழே வந்துட்டு இருக்காங்க னா

ரகு : “இதோ நானே வரேன்” என்று சொல்லிவிட்டு
“மச்சான் நான் கூட்டிட்டு வரேன் நீ என் போன்ல வீடியோ எடுடா” என்று சொல்லி அவன் போனை பாலாவிடம் கொடுத்துவிட்டு கிச்சனுக்கு சென்றான்.

ஹேமா வருகிறாளா என்று பார்க்கச் சென்ற ராஜா கிச்சனுக்குள் சென்று படிக்கட்டில் ஏற ஹேமா கீழே வந்து கொண்டிருந்தாள். அவளை படியின் நடுவே மறித்தான். ஹேமா ஒரு படி மேலே சென்றாள்.

ஹேமா : டேய் வழி விடு டா

6 Comments

Add a Comment
  1. Next update please , I am waiting

    1. Next part eppo varum

  2. Oh… why not continue? !!

  3. When u update the next part

  4. Super waiting for update

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *