ஹேமாவும் ரகுவும் கோயிலுக்கு போய் சேர்ந்தார்கள் கோவிலில் ஹேமா பெயருக்கு அர்ச்சனை கொடுத்தான் ரகு. பின் இருவரும் சாமி கும்பிட்டுவிட்டு கோயிலில் அமர்ந்தார்கள்.
ஹேமா : வெளியில ஏன் இரத்தமா இருக்கு?
ரகு : இன்னிக்கு திருவிழா முடியுதுல்ல. அதான் ஆடுவெட்டி இருப்பாங்க. அதான் இரத்தமா இருக்கு
ஹேமா : ஓ ஓகே ஓகே. சிறிது நேரம் அமர்ந்து விட்டு.பின் இருவரும் எழுந்து பைக்கில் ஏறி சென்றார்கள். ரகு நேரே வீட்டிற்கு செல்லாமல் வண்டியை போஸ்ட் ஆபீஸை நோக்கி விட்டான். போஸ்ட் ஆபீஸை நெருங்க ரகு ஹேமாவிடம் “இதுதான் எங்க ஊர் போஸ்ட் ஆபீஸ்” என்று சொல்லி விட்டு கண்ணாடி வழியாக ஹேமாவின் முகத்தை பார்த்தின். ஹேமா அதை சாதாரணமாக பார்த்து விட்டு “போஸ்ட் ஆபீஸ்னு சொல்லுறீங்க பாழடைந்து போய் இருக்கு” என்று சொன்னால். ரகு மனதிற்குள் “இவ முகத்துல ஒரு சின்ன சலனம் கூட இல்ல,அப்போ கண்டிப்பா அன்னைக்கு போஸ்ட் ஆபீஸ்க்கு வந்தது ஹேமா இல்ல” என்று முடிவு செய்து மகிழ்ச்சி அடைந்தான்.
ரகு : இது பழைய போஸ்ட் ஆபீஸ் புதுசு நம்ம பஸ் ஸ்டாண்ட் கிட்ட இருக்கு
ஹேமா : ஓகே ஓகே
ரகு : இதுக்கு முன்னாடி இதை பார்த்து இருக்கியா என்று கேட்டு கண்ணாடியை பார்த்தான்
ஹேமா : இப்பதான் வீடு கோயில் இதெல்லாம் தாண்டி வெளியில வரேன். என் கிட்ட போய் பார்த்திருக்கியானு கேக்குறீங்க.
அவள் முகத்தில் எந்த மாற்றமும் இல்லாததால் ரகு மீண்டும் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தான்.
ரகு : ஆமால்ல சரி நம்ம நாளைக்கு ஊருக்கு போகும்போது பஸ் ஸ்டாண்டுல வச்சு காட்டுறேன்
ஹேமா : (சற்று அதிர்ச்சியாகி) நாளைக்கு ஊருக்கு போறோமா
ரகு : ஆமான்டி. இதுக்கு ஏன் அதிர்ச்சியாகுற
ஹேமா : இல்ல திடீர்னு சொல்றீங்களே அதான் கேட்டேன்.
ரகு : இப்பதான் ஞாபகம் வந்துச்சு.சொன்னேன்.
ஹேமா : அத்தை மாமா கிட்ட சொல்லிட்டீங்களா?
ரகு : வீட்டுக்கு போய் சொல்லலாம்
ஹேமா : சரி. இப்ப நம்ம எங்க போறோம்?
ரகு : சொல்றேன் என்று சொல்லி விட்டு நேரே அவர்களது வயலுக்குச் சென்றான்.
வண்டியை ஒரு மரத்தடியில் நிறுத்திவிட்டு, இருவரும் இறங்கி வயல் வரப்பில் நடந்து சென்றார்கள். ரகு முன்னே செல்ல ஹேமா அவன் தோளில் கை வைத்துக்கொண்டு பின்னே நடந்து சென்றாள் .அவர்கள் வயலுக்கு சென்று சேர்ந்தார்கள்.
Next update please , I am waiting
6 please
Next part eppo varum
Oh… why not continue? !!
When u update the next part
Un mail id sollu
Super waiting for update
Plzzzzzz next part update sema story very nice plzzzzzzzz next part update
Next part update epo plzz update
Un mail id sollu
Un mail id sollu