எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன் 5 46

ஹேமா : தேங்க்ஸ் மனோஜ்

மனோஜ் : இது உன்னோட 25th பர்த்டே தானே

ஹேமா : கரெக்ட் பா.பரவாயில்லையே ஞாபகம் வச்சிருக்க

மனோஜ் : உன்னோட பர்த்டேவ எப்படி மறப்பேன் ஹேமா

ஹேமா : ம்ம் ( ஒரு வித சந்தோஷத்தில் பேச ஆரம்பித்தாள்)

மனோஜ் : எப்படி இருக்க ஹேமா?

ஹேமா : நல்லா இருக்கேன்

மனோஜ் : சாப்டியா?

ஹேமா : இப்போ மணி என்ன? இன்னும் சாப்பிடாம இருப்பாங்களா?

மனோஜ் : ஓகே ஓகே கூல் ஒரு அக்கறைல கேட்டேன்

ஹேமா : ஆஹான்

மனோஜ் : மேரேஜ் ஆயிடுச்சுனு கேள்விபட்டேன்

ஹேமா : ஆமா .ஆறு மாசம் ஆச்சு

மனோஜ் : அவங்க என்ன பண்றாங்க?

ஹேமா : சென்னைல சூப்பர் மார்க்கெட் வச்சிருக்காங்க

மனோஜ் : எந்த இடத்துல?

ஹேமா : கிண்டில

மனோஜ் : இப்போ நீ சென்னையில தான் இருக்கியா?

ஹேமா : இப்போ திருவிழாவுக்காக பொள்ளாச்சி வந்திருக்கோம். நாளைக்கு கிளம்புறோம் சென்னைக்கு.

மனோஜ் : சென்னையில எங்க இருக்க?

ஹேமா : கோடம்பாக்கத்துல மெர்குரி பிளாட்டுனு ஒன்னு இருக்கு அங்க இருக்கோம். நீ எங்க இருக்க மனோஜ்?

மனோஜ் : பெங்களூர்ல.சென்னைல MCA பண்ணுனேன். ஒரு வருஷம் வேலை தேடினேன் .இப்போ பெங்களூர்ல நல்ல சம்பளத்துல ஒரு வேலை. ரெண்டு மாசம் தான் ஆச்சு.

ஹேமா : ஓகே ஓகே

மனோஜ் : எனக்கு வேலை ஒரு வருஷத்துக்கு முன்னாடியே கிடைச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்.

ஹேமா : ஏன்?

மனோஜ் : உங்க வீட்ல வந்து பொண்ணு கேட்டிருப்பேன். ஜஸ்ட் மிஸ்.

ஹேமா : ஆஹான். போதும் போதும்

6 Comments

Add a Comment
  1. Next update please , I am waiting

    1. Next part eppo varum

  2. Oh… why not continue? !!

  3. When u update the next part

  4. Super waiting for update

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *